என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்களால் துர்நாற்றம்"

    • நிலத்தடி நீர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வரும் நிலையில் உள்ள இந்த ஏரியில் ஆகாய த்தாமரையின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் மாசடைந்து உள்ளது.
    • ஏரிக்கரையின் மீது நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் தினமும் மூக்கை பிடித்தவாறு செல்கின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்டது இலக்கியம்பட்டி பஞ்சாயத்து. 15 வார்டுகள் உடைய இந்த பஞ்சாயத்தில் நீர் ஆதாரமாக இலக்கியம்பட்டி ஏரி மற்றும் பிடமனேரி ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளது.

    இதில் பிமனேரி ஏரி 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தருமபுரி ஒன்றியத்திற்கு இந்த ஏரியின் மூலம் மீன் பாசி ஏலத்தில் வருடத்திற்கு 28 லட்சத்திற்கு வருவாயை ஈட்டி வருகிறது.

    மேலும் பெருமளவு நிலத்தடி நீர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வரும் நிலையில் உள்ள இந்த ஏரியில் ஆகாய த்தாமரையின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் மாசடைந்து உள்ளது.

    இதனால் மீன் பாசி ஏலம் எடுத்தவர்கள் மீன் குஞ்சுகள் விட்டு பராமரித்து வந்த நிலையில் தண்ணீர் மாசுபட்டதால் ஒரு மாதமாக ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை உள்ள மீன்கள் செத்து அழுகி மிதந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    ஏரியை சுற்றி குடியிருக்கும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், முதியவர்கள் என நோய் தொற்றில் பாதிப்படைந்துள்ளனர்.

    ஏரிக்கரையின் மீது நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் தினமும் மூக்கை பிடித்தவாறு செல்கின்றனர்.

    கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நாளிதழில் செய்தி வெளியிட்டும் இதுவரை பஞ்சாயத்து நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

    இதனால் நோய் தொற்று பரவலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வ லர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×