என் மலர்
தர்மபுரி
- கடந்த ஒரு வருட காலமாக சின்ன வெங்கா யத்தின் விலை கடுமையாக சரிவடைந்து கிலோ ரூ.20-க்கும் கீழே கொள்முதல் செய்யப்பட்டது.
- ஒரு நாளைக்கு 50 கிலோ விதம் வெங்காயம் தாள்களை நீக்கி சுத்தம் செய்கின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் அதகபாடி, இண்டூர், சோம்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் உள்ளூர் வியா பாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக சேலம், திண்டுக்கல், திருச்சி, கோவை, பொள்ளாச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வடமாநி லங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்ததால் கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் சின்ன வெங்காயத்தின் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரித்தது.
இதன் காரணமாக உற்பத்தியும் பலமடங்கு அதிகரித்தது. இதனால் கடந்த சுமார் ஒரு வருட காலமாக சின்ன வெங்கா யத்தின் விலை கடுமையாக சரிவடைந்து கிலோ ரூ.20-க்கும் கீழே கொள்முதல் செய்யப்பட்டது.
முதல் தரமான வெங்காயம் கிலோ ரூ.20-க்கும் 2 மற்றும் 3-ம் தர வெங்காயம் கிலோ ரூ.15, ரூ.10 என்ற விலையில் கொள்முதல் செய்ய ப்பட்டது.
இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்து விளைவித்த வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு கேட்பாறின்றி கிடந்து அழுகிப் போனது.
இதனால் பல இடங்களில் அறுவடையே செய்யாமல் ஊழுது விட்டனர். எப்போது விலை உயரும் எனத் தெரியாமல் தவித்த விவசாயிகள் லட்சக்கண க்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தனர்.
ஏராளமான விவசாயி களின் வாழ்வில் ஒளி யேற்றிய வெங்காயம் கடந்த சில மாதங்கலாக விவசா யிகளுக்கு ஏமாற்றத்தை தந்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலவர ப்படி முதல் தர சின்ன வெங்காயம் ரூ.80 வரை யிலும் 2 மற்றும் 3-ம் தர வெங்காயம் முறையே ரூ.65,60-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இன்று தருமபுரி உழவர் சந்தையில் 68 முதல் 70 வரை சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளி மார்க்கெட்டில் 100 வரை விற்பனை செய்யப்படு கிறது.
இது பற்றி தருமபுரி அடுத்த செக்கோடி வெங்காய வியாபாரி கூறுகையில் தருமபுரி மாவட்டத்தில் விளைச்சல் குறைந்துள்ளதால் வெங்காய விளையும் உயர்ந்து வருகிறது.
மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வெங்காயம் வரத்து இல்லாததால் திருச்சி போன்ற பகுதிகளில் வெங்காய விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு தருமபுரியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
50 கிலோ கொண்ட மூட்டையை பயிருடன் சேர்த்து தினமும் கொள் முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் செய்த வெங்காயத்தினை வெங்காயத் தாள்களை நீக்கி சுத்தம் செய்வதற்காக வீடுகளில் பொழுதை கழிக்க வழி இன்றி தவிக்கும் முதி யோர்களுக்கு 3.50 ரூபாய்க்கு கூலி கொடுத்து வேலை கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 50 கிலோ விதம் வெங்காயம் தாள்களை நீக்கி சுத்தம் செய்கின்றனர்.
பின்னர் விதை முதல் வீட்டு உபயோகம் வரை கிலோ 60 முதல் 80 ரூபாய்க்கு மூட்டையாக மார்க்கெ ட்டுக்கு கொடுக்கப்படுகிறது.
மேலும் வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.
அடுத்த சில வாரங்களில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் விலையேற்றம் இருக்கும் என்றனர்.
- விஜய்’ஸ் ஏஸ் அகாடமியின் ஜூனியர் ஐ.ஏ.எஸ் வகுப்புகள் தொடக்க விழா மற்றும் மேல்நிலை கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- எதிர்காலத்தில் சிறந்த ஆடிட்டராக உரு வாவது பற்றி எடுத்துரைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோ ர்களை ஊக்க ப்படுத்தினார்கள்.
தருமபுரி
தருமபுரியில் இயங்கி வரும் தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் விஜய்ஸ் ஏஸ் அகாடமி சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னி லையில் விஜய்'ஸ் ஏஸ் அகாடமியின் ஜூனியர் ஐ.ஏ.எஸ் வகுப்புகள் தொடக்க விழா மற்றும் மேல்நிலை கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெற்றனர்.
காலையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழு மத்தின் தலைவர் டி.சி.இளங்கோவன் தலைமை தாங்கினார்.
தாளாளர் மீனா இள ங்கோவன், இயக்குநர்கள் பிரேம், சினேகாபிரவீன் முதன்மை நிர்வாக அலுவலர் சந்திரபானு, மூத்த முதல்வர் நாராயண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக, சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜமுனா வரவேற்றார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இந்திய அளவில் முதல், நான்கு, பத்தாம் இடங்களை ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சிப் பெற வைத்த சத்தியஸ்ரீ பூமிநாதன் சேர்மன் பங்கேற்று பள்ளியில் படிக்கும் போதே ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக " நான் ஐ.ஏ.எஸ். என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்வதற்கான சிறப்பு வழிகாட்டு தல்களை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக ஆடிட்டர் நந்தகுமார் சிருஷ்டி அகாடமி பங்கு தாரர் பட்டய கணக்காளர் அடிப்படை கல்வி பெறுவது மற்றும் எதிர்காலத்தில் சிறந்த ஆடிட்டராக உரு வாவது பற்றி எடுத்துரைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோ ர்களை ஊக்க ப்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் நீட் தேர்வை எளிதில் எதிர்கொள்வது எப்படி மேல்நிலைக் கல்வியில் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்று தலைமை விருந்தினர் அஸ்வின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து மாண வர்களை ஊக்கப்படு த்தினார்.
இந்நிகழ்ச்சியில் தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் விஜய்ஸ் ஏஸ் அகாடமி சார்பில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழுமத்தின் தலைவர் இளங்கோவன், விஜய்'ஸ் ஏஸ் அகாடமியின் ஜூனியர் ஐ.ஏ.எஸ் வகுப்புகளை துவங்கி வைத்து பெற்றோ ர்கள் மற்றும் மாணவர்க ளிடையே சிறப்புரை யாற்றினார்.
நிகழ்ச்சியில் பெற்றோ ர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த நிர்வாகம் மற்றும் நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் அலு வலர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
முடிவில் சி.பி.எஸ்.இ. பள்ளி துணை முதல்வர் மேரி சாமுவேல் நன்றி கூறினார்.
- வாகன ங்களை நிறுத்திவிட்டு உணவு உண்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, பின்பு பிளாஸ்டிக் பொரு ட்களை வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
- சுற்றுலா பயணிகள் வனப் பகுதிகளில் உணவு சமைப்பதோ உணவு உண்ணுவதோ மற்றும் வாகனங்களை நிறுத்தி னாலோ வனத்துறையால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள், கார், டூரிஸ்ட் வேன், சுற்றுலா பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகள் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளின் ஓரத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு உணவு உண்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, பின்பு பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
இது குறித்து எச்சரிக்கை பதாதைகள் மூலம் வெளிப்படுத்தினாலும் கூட இது போன்ற செயல்களில் சுற்றுலா பயணிகள் ஈடுபடுகின்றனர்.
மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவின் பேரில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் வின்சென்ட் நேரடி பார்வையில் ஒகேனக்கல் வன பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட குழுவினர் ஒகேனக்கல் மலைப்பகுதி, வளைவுச்சாலை, வனப்பகுதியில் இருந்து ஆலம்பாடி செல்லும் சாலை வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் மற்றும் பாட்டில்களை எடுத்து மறு சுழற்சிக்காக துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை வனத்துறையினர் ஒப்படை த்தனர்.
இதன் பின்னர் மாவட்ட வனச்சரக அலுவலர் சுற்றுலா பயணிகள் வனப் பகுதிகளில் உணவு சமைப்பதோ உணவு உண்ணுவதோ மற்றும் வாகனங்களை நிறுத்தினாலோ வனத்துறையால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
- இந்த மருந்தை விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- தருமபுரி மாவட்டத்தில் எங்காவது விற்பனை செய்வது தெரிய வந்தால் அது குறித்து பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
தருமபுரி, ஜூலை.4-
தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் விஜயா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த ரேட்டால் என்ற எலி மருந்தை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்து கடைகளில் விற்பனை செய்வதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். இந்த மருந்தை விற்கக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண்மை துறையை உள்ளடக்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கண்காணிப்பு பணியின் போது இந்த மருந்தை விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள இந்த மருந்தை தருமபுரி மாவட்டத்தில் எங்காவது விற்பனை செய்வது தெரிய வந்தால் அது குறித்து பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 400 ஆதிதிராவிடர் நல மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
- 27 பயனாளிகளுக்கு ரூ.17.70 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் சவுந்தரபாண்டியன் வழங்கினார்.
தருமபுரி,
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழுத் தலைவரும் லால்குடி சட்டமன்ற உறுப்பினருமான சவுந்தரபாண்டியன் தலைமையில், குழு உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் 400 ஆதிதிராவிடர் நல மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது குறித்தும்,
தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டங்களில் 1733.03 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா தார்சாலையினையும், தருமபுரி வட்டம், மதிகோண்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், ரூ.3.79 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தருமபுரி நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
களஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழு (2023-2024) தணிக்கை பத்திகள் மற்றும் தன்னாய்வு குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலக்டர் சாந்தி முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக, வருவாய்த்துறை, தாட்கோ உள்ளிட்ட துறைகளின் சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.17.70 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் சவுந்தரபாண்டியன் வழங்கினார்.
இந்நிகழ்வுகளின் போது, பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இது என்னுடைய சொந்த பட்டா நிலம் என கம்பி வேலி போட்டு அடைத்துள்ளார்.
- திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால் நேற்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழைமை யான காசிக்கு அடுத்த படியாக காலபைரவருக்கு என்று தனி ஆலயம் அமைக்கப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் தேய்பிறை அஷ்டமி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் காலபைரவர் ஜெயந்தி நாட்களில் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மிளகாய் யாகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுவதால் இதில் கலந்து கொண்டு காலபைரவர் அருள் பெற தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் நாளுக்கு நாள் அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கோவிலின் வளர்ச்சியும் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது.
மேலும் இந்து அறநிலை துறைக்கும் அதிக அளவில் வருவாய் வரும் கோவில்களில் தருமபுரி மாவட்டத்தில் முதன்மையான கோவிலாக காலபைரவர் கோவில் திகழ்ந்து வருகிறது.
மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டது முதல் பல்வேறு பெருமைகளை பெற்றுள்ள காலபைரவர் கோவிலுக்கு இன்று திடீரென தனி நபர் ஒருவர் தன்னுடைய பட்டா நிலத்தில் கோவில் சுற்றுவட்டார கிரிவலப் பாதைகள் மற்றும் தீபம் ஏற்றும் பகுதிகள் அமைந்துள்ளது.
இது என்னுடைய சொந்த பட்டா நிலம் என கம்பி வேலி போட்டு அடைத்துள்ளார்.
மற்ற இடங்களில் கோவிலுக்கு சொந்தமான தீபம் ஏற்றும் இரும்பு தளவாடங்களைக் எடுத்து கொண்டும் பக்தர்கள் வலம் வரும் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு அடைத்துள்ளனர்.
திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தால் நேற்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கும் பொழுது மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்கள் பெரும்பாலும் அதிக அளவு சுற்றுவட்டார இட வசதிகளுடன் வைத்து தான் அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கோவிலுக்கு இடம் இல்லாத வகையில் அமைக்க வாய்ப்புகளே இல்லை.
அவ்வாறு இருக்கும் இடத்தில் மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சொந்தமான முந்தைய ஆவணங்களை ஆய்வு செய்யும் போது கோவில் ஆக்கிரமிப்புகள் இதுபோன்ற சிக்கல்கள் முழுமையாக தீரும் என தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சிக்கல் தொடர்பாக உடனடியாக இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா என்றும் பக்தர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்து அறநிலைத்துறை சார்பில் செயல் அலுவலர் ஜீவானந்தம் கோவில் இடத்தை ஒட்டி முள் கம்பி வேலிகள் அமைத்தது தவறு. உரிய இடைவெளி விட்டு அமைத்து இருக்க வேண்டும். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- வனத்துறையினர் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்க்க கூடாது.
- அப்படி மேய்த்தால் தினம் ஆயிரம் ரூபாய் வனத்துறைக்கு கட்டி விட்டு தான் ஆடு மாடுகளை மேய்க்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு வனச்சரகத்தினையொட்டி கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனர்,
விவசாயத்திற்கு அடுத்தபடியாக, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பினை பெரிதும் நம்பியிருப்பதாக கூறும் கிராம மக்கள், கால காலமாக கால்நடைகளை வனப்பகுதியில் மேய்ப்பதும், வனத்தில் விறகு பொறுக்கவதும், சுண்டைக்காய், நாவல்பழம், சீதாப்பழம், கிழங்கு வகைகளை சேகரி்த்து விற்பனை செய்து வாழ்வாதரம் செய்து வந்ததாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வனத்துறையினர் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்க்க கூடாது எனவும், அப்படி மேய்த்தால் தினம் ஆயிரம் ரூபாய் வனத்துறைக்கு கட்டி விட்டு தான் ஆடு மாடுகளை மேய்க்க வேண்டும் இதே போல் வனப்பகுதிக்குள் காய் கனிகள் பொறுக்கவோ, விறகு பொறுக்கவோ செல்லக்கூடாது என கெடுபிடிகளை கடுமையாக காட்டி வருவதால் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக கூறும் கிராம மக்கள், வனப்பகுதிக்குள் மீண்டும் கால்நடைகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனப்பகுதிக்குள் கால்நடைகளையும் தங்களையும் அனுமதிக்க வேண்டும் வனத்திலிருந்து வெளியே வந்து விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும், யானை, காட்டுபன்றி, மயில், மான் உள்ளிட்ட வன விலங்குகளை விளை நில்ங்களில் புகுந்து சேதப்படுத்துவதை வனத்துறையினர் தடுத்து நிறுத்திடவேண்டும் இல்லையென்றால், வனத்துறையால் பாதிக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போரட்டம், ஆர்பாட்டங்களில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
- ஏரியூர் போலீசார், சரவணனின் விவசாய நிலத்தில் சோதனை செய்தனர்.
- 15- க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் அவரது மிளகாய் தோட்டத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி, பேகியம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (30).
இவர் விவசாய நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வருவதாக ஏரியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏரியூர் போலீசார், சரவணனின் விவசாய நிலத்தில் சோதனை செய்தனர்.
அப்போது 15- க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் அவரது மிளகாய் தோட்டத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சரவணன் கைது செய்யப்பட்டார். அவர் பயிரிட்டிருந்த ஒன்றரை கிலோ எடையுடைய கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பிவரவில்லை.
- இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் இனியவள் (வயது19). இவர் தருமபுரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் அண்ணன் இளவரசு அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகின்றனர்.
- நேற்று தருமபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 72-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 3-க்கு விற்கப்பட்டது.
தருமபுரி,
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, தக்காளி விலை ஏறுமுகத்தில் உள்ளது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்திலும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது.
இன்று தருமபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 92-க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் தக்காளி விலையால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை மற்றும் கடும் வெயிலால் தக்காளி செடிகள் கருகின.
இதனால், சந்தைக்கு தக்காளி வரத்து சரிந்தது. மேலும், மழை காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுவரை தக்காளி வரத்து சீராகவில்லை.
இதனிடையே, தக்காளி விலையை தொடர்ந்து தற்போது காய்கறி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
நேற்று தருமபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 72-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், கத்தரிக்காய், அவரைக்காய், மிளகாய், முருங்கைக்காய் இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், 'தருமபுரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலிருந்து மட்டுமே, தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 3-க்கு விற்கப்பட்டது.
அதையும் வாங்கிச் செல்ல ஆள் இல்லாமல் பல இடங்களில் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.
போதிய விலை கிடைக்காததால், தக்காளி சாகுபடியை விவசாயிகள் பலர் நிறுத்தி விட்டனர்.
தொடர் மழையால் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் தக்காளி செடிகள் கடுமையாக சேதமடைந்து வீணாகி விட்டது.
இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விலை குறைவு தான்,' என்றனர்.
- தருமபுரி பஸ் நிலையத்தில் 2 பேர் சந்தேகம்படி நின்று கொண்டிருந்தனர்.
- 2 பேர் பையில் 8 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பஸ் மற்றும் ரெயில் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா மர்மநபர்கள் கடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜோசுபதமிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் தருமபுரி நகர் மற்றும் பஸ், ரெயில் நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரி பஸ் நிலையத்தில் 2 பேர் சந்தேகம்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் சேலம் மாவட்டம் சங்ககிரி ஏ.ஆர்.செட்டிப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் சதீஸ்குமார் (வயது 33), ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (39) ஆகிய 2 பேர் பையில் 8 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- ஒரு ஆடு மங்கம்மாளை முட்டியது.
- தவறி கீழே விழுந்த மங்கம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சப்பன். விவசாயியான இவரது மனைவி மங்கம்மாள் (வயது65). இவர்கள் ஆடுகளை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்லுமாறு மஞ்சப்பன் தனது மனைவி மங்கம்மாளிடம் தெரிவித்தார்.
அவரும் ஆடுகளை கயிற்றால் கட்டி வேறு இடத்திற்கு கொண்டு சென்றார். அப்போது ஒரு ஆடு மங்கம்மாளை முட்டியது.
இதில் தவறி கீழே விழுந்த மங்கம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மஞ்சப்பன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மங்கம்மாள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மங்கம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






