என் மலர்
நீங்கள் தேடியது "சின்னவெங்காயம் விலையும் உயர்வு"
- நேற்று தருமபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 72-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 3-க்கு விற்கப்பட்டது.
தருமபுரி,
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, தக்காளி விலை ஏறுமுகத்தில் உள்ளது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்திலும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது.
இன்று தருமபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 92-க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் தக்காளி விலையால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை மற்றும் கடும் வெயிலால் தக்காளி செடிகள் கருகின.
இதனால், சந்தைக்கு தக்காளி வரத்து சரிந்தது. மேலும், மழை காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுவரை தக்காளி வரத்து சீராகவில்லை.
இதனிடையே, தக்காளி விலையை தொடர்ந்து தற்போது காய்கறி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
நேற்று தருமபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 72-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், கத்தரிக்காய், அவரைக்காய், மிளகாய், முருங்கைக்காய் இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், 'தருமபுரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலிருந்து மட்டுமே, தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 3-க்கு விற்கப்பட்டது.
அதையும் வாங்கிச் செல்ல ஆள் இல்லாமல் பல இடங்களில் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.
போதிய விலை கிடைக்காததால், தக்காளி சாகுபடியை விவசாயிகள் பலர் நிறுத்தி விட்டனர்.
தொடர் மழையால் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் தக்காளி செடிகள் கடுமையாக சேதமடைந்து வீணாகி விட்டது.
இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விலை குறைவு தான்,' என்றனர்.






