என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பழைய தருமபுரி கலெக்டர் அலுவலகம் நல்லம்பள்ளி, தொப்பூர், சோகத்தூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதி களில் மிதமான மழை பெய்தது.
    • இந்த மழையால் விவசாயிகள் உழவு பணி தொடங்குவதற்கு பயனுள்ளதாக உள்ளது.

    தருமபுரி,

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் மழை பொய்த்து போனது.

    இந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னி யாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங் களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு இரு மத்தூர், திப்பம்பட்டி, அரூர், மொரப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

    இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென மாலை 5.30 மணி முதல் தருமபுரி, பழைய தருமபுரி கலெக்டர் அலுவலகம் நல்லம்பள்ளி, தொப்பூர், சோகத்தூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதி களில் மிதமான மழை பெய்தது.

    கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை யால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த மழையால் விவசாயிகள் உழவு பணி தொடங்குவதற்கு பயனுள்ளதாக உள்ளது.

    • குடிப்பழக்கத்தால், அவரது உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது.
    • அங்குள்ள ஒரு புளிய மரத்தில் அவர் தூக்கில் பிணமாக கிடந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜிட்டிகான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது50). விவசாயி. இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.

    இந்த நிலையில் குடிப்பழக்கத்தால், அவரது உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் அளிக்காததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தன் தனது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் தூங்குவதாக கூறிவிட்டு சென்றார். காலை விடிந்து நீண்டநேரமாகியும் கோவிந்தன் வீட்டிற்கு வராததால், உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள ஒரு புளிய மரத்தில் அவர் தூக்கில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் மயில்வாகனன் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விசாரணை நடத்தினர்.

    இதில் கோவிந்தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    பின்னர் போலீசார் கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் பந்தாரஅள்ளி பஞ்சாயத்தில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை தலைவர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பொருளாளர் முருகன், மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பேரூராட்சி சேர்மன் பி சி ஆர் மனோகரன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் மாணிக்கம் வரவேற்றார்.

    மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பேச்சாளர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் பங்கேற்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் குமரவேல், ஒன்றிய நிர்வாகிகள் மாரியப்பன், சண்முகம், சாவித்திரி தங்கதுரை சித்ரா வடிவேல், லயோலா ராஜசேகர், விவசாய அணி ஜலபதி, பஞ்சாயத்து தலைவர் சங்கரன், முன்னாள் தலைவர் மாதன், செல்வராஜ், டெல்லி பெருமாள், ஜெகன் சின்னசாமி முரளி கோவிந்தராஜ் செந்தில்குமார் மவுலி வக்கீல் சசிகுமார் கோகுல், இளைஞர் அணி தங்கதுரை, அருள், ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 876 விவசாயிகள் 4600 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
    • பருத்தி மூட்டைகள் மழையில் நனையாதவாறு கொட்டகை அமைக்க வேண்டும்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் நடத்தப்படும் பருத்தி ஏலத்தில் ரூ 1.10 கோடிக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.

    இதில் பாப்பி ரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சுற்றுவட்டார பகுதிகளான பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, பூதநத்தம், ஈச்சம்பாடி, பள்ளிப்பட்டி, முத்தனூர், கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 876 விவசாயிகள் 4600 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    இதில் மொத்தம் ஒரு கோடியே 10 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகமானது நடைபெறுகிறது.

    குறிப்பாக வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில் நடை பெறும் இந்த பருத்தி ஏலத்தில் பருத்தி உற்பத்தி யாளர்கள் கொண்டு வரும் பருத்தி மூட்டைகளை அடுக்கி வைத்து விடு கின்றனர்.

    அப்போது மழைக்கா லங்களில் தங்களுடைய பருத்தி மூட்டைகள் நனையும் பொழுது மூட்டைக்கு மூன்று கிலோ எடையை குறைத்து எடுத்துக் கொள்கின்றனர்.

    அதேபோல இங்கு கொண்டுவரும் பருத்திகள் அழுக்கு படிந்து உற்பத்தி செய்த வியாபாரிகளின் மனசு நொந்து போகும் வகையில் இந்த தரை தளம் இருக்கிறது.

    இதனால் ஏலத்துக்கு எடுக்கும் நபர்கள் மிக குறைந்த விலைக்கு தரத்தை பார்த்து எடுத்துக் கொள்கின்றனர். என விவ சாயிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் பருத்தி மூட்டைகள் மழையில் நனையாதவாறு கொட்டகை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும், இதனால் தாங்கள் கொண்டு வரும் மூட்டை களுக்கு மூன்று கிலோ எடை குறைத்து எடுத்துக் கொண்டால் தங்கள் வாழ்வா தாரம் பாதிக்கப் படுகிறது என விவ சாயிகள் தெரிவிக்கின்றனர்.

    • கருவேலம்பட்டி கிராமத்தைச் சார்ந்த பா.ம.க இளை ஞர்கள் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்த னர்.
    • அ.தி.மு.க.வில் இணைந்த விவகாரம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில நிர்வாகி வரை சென்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட மொரப்பூர் ஒன்றியத்தில் உள்ள கரு வேலம்பட்டி கிராமத்தைச் சார்ந்த பா.ம.க இளை ஞர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை முன்னாள் அமைச்சரும் தருமபுரி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்த னர்.

    பா.ம.க. வினர் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சியில் அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. வினர் கலந்து கொண்டனர். பா.ம.க வினா் அ.தி.மு.க.வில் இணைந்த விவகாரம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில நிர்வாகி வரை சென்றது.

    பா.ம.க. -வின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் பா.ம.க. வில் இருந்து விலகி அ.தி.மு.க. வில் இணைந்த இளைஞா்களை நேரில் சந்தித்து என்ன நடந்தது என்பது குறித்து கேட்டறி ந்தார்.

    காலையில் அ.தி.மு.க. வில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சினா் தங்களை பா.ம.க மாவட்ட செயலாளா் அரசாங்கம் முன்னிலையில் மீண்டும் பா.ம.க. வில் இணைத்துக் கொண்டதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் . சமுக வலை தளபதிவில் அரூர் சட்டமன்றத் தொகுதி மொரப்பூர் ஒன்றியத்தில் கருவேலம்பட்டி கிராமத்தைச் சார்ந்த இளைஞர்கள் விளையாட்டு மைதானம் வேண்டி அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாரிடம் முறையிட்டபோது நீங்கள் அனைவரும் அ.தி.மு.க. வில் இணைந்தால் மட்டுமே உங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர முடியும் என கூறி பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் இணைய வற்புறுத்தியதாக பா.ம.க. வினர் முகநூல் பக்கத்தில் தெரிவித்து ள்ளனர்.

    கருவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காலையில் அ.தி.மு.க துண்டு களுடனும் இரவு பாட்டாளி மக்கள் கட்சி துண்டுகளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது குறிப்பிட த்தக்கது.

    2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரதான கட்சிகள் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இத்தகைய கட்சி தாவல்கள் தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது நடந்தது.
    • மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முதல் நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெறுவதையும், மாதிரி வாக்குப் பதிவுகளையும் பார்வையிட்டனர்.

    தருமபுரி, 

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் ஆணைப்படி எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024-ன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி தலைமையில் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் நடை பெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது BEL பொறியாளர்களால் கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் தருமபுரி மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் தொடங்கப்பட்டது.

    இப்பணியானது தொடர்ந்து ஒருமாத காலம் நடைபெற உள்ளது. இப்பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முதல் நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெறுவதையும், மாதிரி வாக்குப் பதிவுகளையும் பார்வையிட்டனர்.

    இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) அசோக்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 143 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.
    • அனுமதிச்சீட்டு இல்லாமல் இயக்கிய 82 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 முதல் ஜீன் 2023 வரை 6 மாதங்க ளில் போக்குவரத்து துறை யின் சார்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர் பாலக்கோடு பகுதி அலு வலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அதில்,13500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 3980 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகை ச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதிசீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 353 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன.

    மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 140 வாக னங்களுக்கும், அதிகபாரம் ஏற்றிச்சென்ற 42 வாகனங்க ளுக்கும், அனுமதிச்சீட்டு இல்லாமல் இயக்கிய 82 வாகனங்களுக்கும், அதிவேக மாக வாகனங்களை இயக்கிய 2479 வாகனங்களுக்கும், தகுதி ச்சான்று பெறாமல் இயக்கிய 198 வாகனங்களுக்கும், காப்புச்சான்று, புகை ச்சான்று இல்லாமல் இயக்கிய 489 வாகனங்க ளுக்கும், சிகப்புநிற பிரதி பலிப்பான் இல்லாமல் இயக்கிய 256 வாகனங்க ளுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 143 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.

    மேற்கண்ட வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை சரியாக ரூ.74,59,300- மற்றும் இணக்க கட்டணமாக ரூ.44,80,130 ஆக மொத்தம் ரூ.1,19,39,480 உடனடியாக வசூலிக்கப்பட்டது.

    மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.57,86,785 நிர்ணயம் செய்யப்பட்டது.

    கடந்த ஆறு மாதங்களில் தருமபுரி வட்டார போக்கு வரத்து அலு வலகத்தின் சார்பாக அரசுக்கு மொத்தம் ரூ.1,77,26,265 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான 30 கி.மீ. மேல் இயக்கப்படும் வாக னங்களுக்கு போக்கு வரத்துதுறை சார்பில் வேகம் கண்காணிக்கும் கருவி உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளில் 10,200 வாகனங்களுக்கு இ-செல்லான் மூலம் ரூ.69,98,525-அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

    • தாயார் விஜயா தனது மகனிடம் வேலைக்கு செல்லுமாறு கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று எலிபேஸ்டை தின்று மயங்கி கிடந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி விஜயா. இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக உள்ளார்.

    இவர்களது மகன் முல்லைஅரசு (வயது20). பெயிண்டரான இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் விஜயா தனது மகனிடம் வேலைக்கு செல்லுமாறு கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த முல்ைலஅரசு கடந்த 29-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று எலிபேஸ்டை தின்று மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முல்லைஅரசு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது தாய் விஜயா பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • சந்தேகம்படும்படி 2 நபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மொரப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட தாமரைகோழியாம்பட்டி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம்படும்படி 2 நபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில், அரூர் அருகே தாமிலேரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் அருண் (வயது30), மூப்பேரிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கலைபூபதி (20) ஆகிய 2 பேரும் பையில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் 2 ேபரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • பணத்தை கோவிந்தராஜ் திருப்பி கேட்ட பொழுது தகாத வார்த்தையால் திட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
    • கோவிந்தராஜ் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விஷ்ணு பின்பக்க தலையில் வெட்டியுள்ளார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ரங்கசாமி உடையார் தெரு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 31). இவருக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (36). கட்டிட மேஸ்திரி.

    கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு விஷ்ணு மனைவிக்கு பணம் கொடுத்துள்ளார்.

    இந்த பணத்தை கோவிந்தராஜ் திருப்பி கேட்ட பொழுது தகாத வார்த்தையால் திட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கோவிந்தராஜ் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விஷ்ணு பின்பக்க தலையில் வெட்டியுள்ளார்.

    அதன் பின்னர் அங்கிரு ந்தவர்கள் காயம்பட்ட விஷ்ணுவை கடத்தூர் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    இது குறித்து அவர் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.

    • மாணவ கண்மணிகள் தங்கள் கடமைகளை உணர்ந்து நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.
    • எதிர்காலத்தில் சிறப்பா னதொரு கல்வியைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள மாதம்பட்டியில் ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 2023- 2024 ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

    விழாவில் லட்சுமி அறக்கட்டளையின் தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ் தலைமை வகித்தார். உழைப்பே உயர்வு என்றும் முயற்சி திருவினையாக்கும் என்பதில் சிறிய ஐயமில்லை ஆகவே மாணவ கண்மணிகள் தங்கள் கடமைகளை உணர்ந்து நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    லட்சுமி அறக்கட்டளையின் செயல் இயக்குனர் மாதுளம் பூ தான் வழங்கிய முன்னுரையில் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தால் உண்டாக்கும் பயன்கள் பற்றி வேலைவாய்ப்பு குறித்து தெளிவாக பேசினார் .

    அறக்கட்டளையின் இயக்குனர் உதயகுமார் மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் சிறப்பானதொரு கல்வியைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

    மேலும் தொழில்நுட்ப படிப்பின் நன்மைகள் மற்றும் கல்லூரியின் சிறப்பம்சங்கள் பேராசிரியர்களின் அனுபவங்கள் ஆகியவை பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் கல்லூரியின் முதல்வர் சரவணன் அவர்கள் வரவேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதலாம் ஆண்டு துறை தலைவர் கவிதா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறை தலைவர்கள் விரிவுரையாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இக்கல்லூரியின் பயிலும் மாணவர்களுக்கு ஹாஸ்டல் மற்றும் கேண்டீன் வசதிகள் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் நன்றாக படித்து பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் பெருமை தேடித் தர வேண்டும்.
    • நன்றாக படித்து வருங்காலத்தில் சி.இ.ஓ.டி.ஓ மற்றும் வருங்கால தலைவர்களாக வர வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ரூ.6 லட்சம் மதிப்பில் 45 ஜோடி பெஞ்ச் டெஸ்க் பள்ளிக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் தான் இந்த பள்ளியில் படித்ததாகவும் மாணவர்கள் 160 ஆண்டு பழமை வாய்ந்த பள்ளியில் படித்து வருகிறீர்கள். நன்றாக படித்து வருங்காலத்தில் சி.இ.ஓ.டி.ஓ மற்றும் வருங்கால தலைவர்களாக வர வேண்டும்.

    இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் அனைத்தையும் மாணவர் களுக்கும் பள்ளியில் படிப்ப தற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வது எம்.எல்.ஏ-வான என்னுடைய கடமை.

    மாணவர்கள் நன்றாக படித்து பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் பெருமை தேடித் தர வேண்டும். உங்களுக்கு படிப்பதற்கு என்ன கோரிக்கையாக வைத்தாலும் அதனை நான் நிறைவேற்றி தருகிறேன்.

    இப்பள்ளியில் தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை என கேள்விப்பட்டேன். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து உள்ளேன். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப் படும் இல்லையென்றால் உங்களுக்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசுவேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாண்விழி,பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    ×