என் மலர்
நீங்கள் தேடியது "பிரசாரக்கூட்டம்"
- தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- இதில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் பந்தாரஅள்ளி பஞ்சாயத்தில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை தலைவர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பொருளாளர் முருகன், மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பேரூராட்சி சேர்மன் பி சி ஆர் மனோகரன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் மாணிக்கம் வரவேற்றார்.
மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பேச்சாளர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் பங்கேற்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் குமரவேல், ஒன்றிய நிர்வாகிகள் மாரியப்பன், சண்முகம், சாவித்திரி தங்கதுரை சித்ரா வடிவேல், லயோலா ராஜசேகர், விவசாய அணி ஜலபதி, பஞ்சாயத்து தலைவர் சங்கரன், முன்னாள் தலைவர் மாதன், செல்வராஜ், டெல்லி பெருமாள், ஜெகன் சின்னசாமி முரளி கோவிந்தராஜ் செந்தில்குமார் மவுலி வக்கீல் சசிகுமார் கோகுல், இளைஞர் அணி தங்கதுரை, அருள், ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






