search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி
    X

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது தருமபுரி கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி

    • தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது நடந்தது.
    • மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முதல் நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெறுவதையும், மாதிரி வாக்குப் பதிவுகளையும் பார்வையிட்டனர்.

    தருமபுரி,

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் ஆணைப்படி எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024-ன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி தலைமையில் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் நடை பெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது BEL பொறியாளர்களால் கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் தருமபுரி மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் தொடங்கப்பட்டது.

    இப்பணியானது தொடர்ந்து ஒருமாத காலம் நடைபெற உள்ளது. இப்பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முதல் நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெறுவதையும், மாதிரி வாக்குப் பதிவுகளையும் பார்வையிட்டனர்.

    இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) அசோக்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×