என் மலர்
தர்மபுரி
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்த சசிகுமார் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்து கிடந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி அடுத்துள்ள பறையபட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் சலூன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரம்யா.
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு ரம்யா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த சசிகுமார் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரி நகர் பகுதியில் திருடியதாக டவுன் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன.
- திருட்டு வழக்கில் மாரியப்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி,
சென்னை டி.நகர் அடுத்த கண்ணம்மாபேட்டை சித்திவிநாயகா தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் மாரியப்பன் (வயது29). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளன.
மேலும் இவர் மீது தருமபுரி நகர் பகுதியில் திருடியதாக டவுன் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன. இதனால் மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரையின் பேரில் திருட்டு வழக்கில் மாரியப்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
- எள்ளு ஏலத்தில் தருமபுரி மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
- அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.12,610 -க்கு விலை போனது. அதேபோல் குறைந்த பட்சமாக ரூ.12,200 க்கும் ஏலம் போனது.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் பென்னா கரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மறைமுக எள்ளு ஏலம் நடைபெற்றது.
இதில் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 150 எள்ளு மூட்டைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.
ஒழுங்கு முறை விற்பனைக் கூட மேற்பார்வை யாளர்கள் வீரன், சக்திவேல், சீதாராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக எள்ளு ஏலத்தில் தருமபுரி மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.12,610 -க்கு விலை போனது. அதேபோல் குறைந்த பட்சமாக ரூ.12,200 க்கும் ஏலம் போனது.
மொத்தமாக 7350 கிலோ எடையுள்ள எள்ளு ரூ. 9,23,271 -க்கு ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு உரிய தொகை உடனடியாக வியாபாரிகளிடமிருந்து பெற்று வழங்கப்பட்டது.
- மாந்தோப்பு சொசைட்டி காலனி பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் சிதலமடைந்து உள்ளது.
- பல மாதங்கள் ஆகியும் உடைத்த கல்வெட்டை சீர் செய்யாமல் இருப்பதால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் முதியோர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்டது இலக்கியம்பட்டி பஞ்சாயத்து.
இது தமிழகத்தில் 15 வார்டுகள் உடைய மிகப்பெரிய பஞ்சாயத்தா கவும், தருமபுரி மாவட்டத்தின் முக்கிய அரசு தலைமை அலுவலகங்கள் இயங்கி வரும் பஞ்சாய த்தாகவும் உள்ளது.
இந்த நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகளான கழிவுநீர் கால்வாய் தூர்வாரி புதுப்பித்தல், தெருவிளக்கு, குடிநீர், உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்யாமல் மெத்தன போக்குடன் இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாந்தோப்பு சொசைட்டி காலனி பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் சிதலமடைந்து உள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது.
மேலும் மாந்தோப்பு, காளியப்ப செட்டி காலனி, நெல்லி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 1000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்கள் இச்சாலையை முக்கிய சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதிகளுக்கு செல்ல பிடமனேரி ஏரிக்கரை முக்கிய சாலையில் இருந்து சொசைட்டி காலனி வழியாக தான் செல்ல வேண்டும்.
சொசைட்டி காலனி உள் நுழையும் பிரிவு சாலையில் 40 அடி அகலத்திற்கு கழிவுநீர் கால்வாய், சிறிய கல்வெட்டு உள்ளது.
இந்த கல்வெட்டின் அடியில் செல்லும் கழிவு நீர் கால்வாய் பல வருடங்களாக தூர்வாரப்படாததால் கால்வாய் அடைத்து கழிவு நீர் ரோட்டில் சென்றது.
இது சம்பந்தமாக பொது மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து ஒரு மாதத்திற்கு பின் பஞ்சாயத்து நிர்வாகம் கல்வெட்டை உடைத்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுத்தது.
பின்னர் பல மாதங்கள் ஆகியும் உடைத்த கல்வெட்டை சீர் செய்யாமல் இருப்பதால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் முதியோர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் உள்ள பகுதி என்பதால் கார், இருசக்கர வாகனம் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
கட்டுமான பணிக்காக வரும் கனரக வாகனங்கள் திரும்ப வழியின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
தொடர்ந்து கல்வெட்டு பள்ளத்தில் கார் இருசக்கர வாகனம் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.
பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கல்வெட்டை புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.
- பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் பல ஆயிரம் எக்டேர் அளவிற்கு வருடம் தோறும் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்து வருகின்றனர்.
இந்த மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.
இதனால் பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.
குறிப்பாக தருமபுரி மாவட்ட பகுதிகளில் பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் தென்கரை கோட்டை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல 100-க்கும் மேற்பட்ட கிராமத்தில் விவசாயிகள் அதிக அளவாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர்.
பல நேரங்களில் மரவள்ளி பயிரிட்ட விவசாயிகளுக்கு செலவு செய்த பணம் கூட வர முடியாத நிலையில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த பூச்சிகளின் நோய் தாக்குதலால் செடிகள் இலைகள் பழுத்து காய்ந்து உதிர்ந்து வருகிறது.
இதனால் மகசூல் பெருமளவு குறையும் என்று விவசாயிகள் தெரிவித்து பெரும் கவலையடைந்து வருகின்றனர்.
இவற்றை தடுக்க வேளாண்மை துறை அதிகாரிகள் பஞ்சாயத்து பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடுகள் செய்து அவற்றை தடுப்ப தற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு-2.0 திட்ட செயலாக்கம் குறித்த மாவட்ட அளவிலான வழிநடத்துதல் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது.
நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு என்பது இந்திய - ஜெர்மன் இருதரப்பு திட்டம் ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் (GIZ) இந்திய அரசாங்கத்தின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MORD) மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (MOJS) ஆகியவற்றுடன் இணைந்து நியமிக்கப்பட்ட ஒரு இருதரப்பு திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புவியியல் தகவல் அமைப்பு (GIS) மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கான நீர்வள மேலாண்மை மற்றும் செறிவூட்டல் திட்டத்தினை தயாரித்து, இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2019-2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது.
இப்போது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் (வாஸ்கா-2) 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இது 17 மாநிலங்களை உள்ளடக்கிய 15 வேளாண் காலநிலை மண்டலங்களில் நிலையான இயற்கை வள மேலாண்மை மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
அவற்றில் கிழக்கு கடற்கரை சமவெளி மற்றும் மலை மண்டலத்தின் கீழ் வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் மற்றும் இதர ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு வாஸ்கா திட்டச் சான்றுகள் அடிப்படையிலான அறிவியல் அணுகுமுறை (புவியியல் தகவல் அமைப்பு) முன்மொழியப்படும்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, வன அலுவலர் அப்பல நாயுடு, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சக தொழிற்நுட்ப ஆலோசகர் ராதா பிரியா, சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ரங்கலட்சுமி மற்றும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கிராமத்தில் வெளியேறும் சாக்கடை நீர் முழுமையாக பள்ளி முன்பு கடந்த மூன்று மாதங்களாக தேங்கி நிற்கிறது.
- கால்வாய் அமைத்து சரி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக அதிகாரிகளிடம் கூறியும் எந்த பயனும் இல்லை.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் கேத்திரெட்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பிலைபட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கிராமத்தில் வெளியேறும் சாக்கடை நீர் முழுமையாக பள்ளி முன்பு கடந்த மூன்று மாதங்களாக தேங்கி நிற்கிறது.
இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாண வியர்கள் சாக்கடை நீரில் நடந்தவாறு சென்று வருகின்றனர்.
இதனால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாக்கடை நீர் எளிமையாக செல்ல கால்வாய் அமைத்து சரி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக அதிகாரிகளிடம் கூறியும் எந்த பயனும் இல்லை.
இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்படும் முன்பு இவற்றை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவர்கள் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும். மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது.
- வீட்டுக்கு செல்வதற்கு இரவு 7.30 மணி ஆவதால் கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகள் வயல்வெளியை கடந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது.
தருமபுரி,
தருமபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும். மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது.
சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டுக்கு பேருந்து மூலம் செல்லும் மாணவிகள் வீட்டுக்கு செல்ல இரவு 7.30 மணி ஆகிறது.
இதனால் கிராமப் பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பொது தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும், மாணவிகள் வீட்டுக்கு செல்வதற்கு இரவு 7.30 மணி ஆவதால் கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகள் வயல்வெளியை கடந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது.
மேலும் மாணவிகள் இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்வது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும், பள்ளி சிறப்பு வகுப்பை மாலை 5 மணிக்கு முடித்துக் கொண்டு 5 மணிக்கு மாணவிகளை வீட்டிற்கு அனுப்பினால் கூட மாணவிகள் பேருந்தில் பயணித்து 6.30 மணி அளவில் வீட்டுக்கு வந்து சேர்வார்கள் என்றும் இதற்கு மாவட்ட நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.
- கடத்தூர் கிளை நூலகத்திற்கு இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்ட எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கட்டிடம் கட்டும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
- கட்டடத்தை தரமாக விரைவாக கட்டி முடிக்க ஒப்பந்ததாரை அறிவுறுத்தினார்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்திற்கு இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்ட எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கட்டிடம் கட்டும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கட்டிடம் கட்டும் பணிகளை எம்.எல்.ஏ திடீர் ஆய்வு செய்தார். கட்டடத்தை தரமாக விரைவாக கட்டி முடிக்க ஒப்பந்ததாரை அறிவுறுத்தினார்.
அப்போது நூலகர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத், அதிமுக ஒன்றிய செயலாளர் முருகன், பேரூராட்சி கான்சிலர் சஃபியுல்லா, ஒன்றிய துணை செயலாளர் ரவிந்திரன், சென்னகிருஷ்ணன், முருகன், ஆதிமூலம், செல்வம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
- ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி மொத்தம் 197 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி, பொது வழி பிரச்சினை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி மொத்தம் 197 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 162 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 35 மனுக்கள் மட்டும் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது
- கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
- ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.
தருமபுரி:
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு 290 கிலோ மீட்டா் பயணித்து தமிழகத்தில் பிலிகுண்டுலு பகுதியில் நுழைந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆறு வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது.
மேட்டூர் அணையில் இருந்து சுமார் 12-க்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாட்டுக்கும் காவிரி நீர் பயன்படுகிறது.
ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும்.
கர்நாடக மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கினால் அங்குள்ள கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை சென்றடையும்.
இந்த ஆண்டு பருவ மழை தொடங்காத காரணத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்ததன் காரணமாக பறந்து விரிந்த காவிரி ஆறு, சிறு ஓடை போல சுருங்கி தண்ணீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்று காட்சி அளிக்கிறது.
தண்ணீர்வரத்து இல்லாத காரணத்தால் ஆற்றுப்பகுதி பாறைகளாக காட்சியளிக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி முதல் 2.85 கன அடி வரை தண்ணீா் ஒகேனக்கல் பகுதியை கடந்து சென்றது.
தற்போது தண்ணீா் வழிந்தோடிய பகுதிகள் வறண்டு பாறை முகடுகளாக காணப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கூட்டு குடிநீர் ஏற்றும் பகுதிக்கு தண்ணீர் வராததால் மணல் மூட்டைகளை அடுக்கி சிறு ஓடைகளாக ஓடும் தண்ணீரை தேக்கி நீர் ஏற்றப்படுகிறது.
400 கன அடியில் இருந்து 300 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.
கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான சிவகுமார் தெரிவித்து வருகிறார்.
தற்பொழுது காவிரி ஆற்றில் குறைந்து வரும் நீரால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.
உடனடியாக தமிழக, மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசிடம் பேசி மத்திய அரசின் நதி நீர் ஆணையம் பிறப்பித்துள்ள ஆணையின் படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இந்த ஆண்டு நீர்வரத்து இல்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.
கடந்தாண்டு ஜூலை 15-ம் தேதி காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் 2.85 கனஅடி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 7-ம் தேதி பருத்தி மறைமுக ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் உள்ளுர் மற்றும் வெளியூர் வியபாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
- விவசாயிகள் அனைவரும் தாங்கள் விளைவித்த பருத்தியை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும்.
தருமபுரி,
இது குறித்து தருமபுரி வேளாண் துறை கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும் 7-ம் தேதி பருத்தி மறைமுக ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் உள்ளுர் மற்றும் வெளியூர் வியபாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
பருத்தி சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளும் தாங்கள் விளைவித்த பருத்தி தரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை வழங்க உள்ளனர். பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென வேளாண் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த பருத்தி ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதற்கான தேவையான அவணங்கள் ஆதார்கார்டு ஜெராக்ஸ், வங்கி கணக்கு புத்தகம் , ஆகியவற்றை கொணஙடு வர வேண்டும். இது குறித்து தகவல் பெற 9944163463, 7904852293 ஆகிய எண்களில் காலை 10 முதல் பருத்தி விவசாயிகள் அனைவரும் தாங்கள் விளைவித்த பருத்தியை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும். மேலும் 12 மணிக்கு மறைமுக ஏலம் பென்னாகரம், தாசம்பட்டி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட நடைபெறுகிறது.






