என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • காரிமங்கலம் உதவி வேளாண்மை இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
    • அட்மா திட்டத்தின் மூலம் வேளாண் சுற்றுலா சென்ற விவசாயிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பேகார அள்ளி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் சார்பில் உழவர் திருவிழா நடந்தது.

    காரிமங்கலம் உதவி வேளாண்மை இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

    பஞ்சாயத்து தலைவர் நந்தினி ஈஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை இயக்குனர் அருள் வடிவு வேளாண் துறை சார்ந்த கண்காட்சியை தொடங்கி வைத்து வேளாண் திட்டங்கள் குறித்து பேசினார்.

    குண்டலபட்டி கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணதாசன் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் மழைக்காலங்களில் கால்நடை பராமரிப்பு குறித்து பேசினார்.

    விதை சான்றளிப்பு அலுவலர் ஜெயமாலா, மீன் வளர்ச்சி துறை, வனத்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினர்.

    அட்மா திட்டத்தின் மூலம் வேளாண் சுற்றுலா சென்ற விவசாயிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    தொடர்ந்து விவசா யிகளின் சந்தேகங்களுக்கு வேளாண் துறை அலு வலர்கள் பதில் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
    • கொள்முதல் செய்து அதற்கான சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள திருமல்வாடி கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் ஈசன் முருகசாமி கலந்து கொண்டார்.

    அப்போது பேட்டியளித்த அவர் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 18 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    கொள்முதல் செய்து அதற்கான சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும். எண்ணை வித்துக்களை மாநில அரசு கொள்முதல் செய்து நியாய விலை கடையில் விற்பனை செய்ய வேண்டும். கல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    • கர்நாடகா மாநிலத்தில் இருந்து இஞ்சி வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வரும் காரணத்தினால் இஞ்சி கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • தொடர் மழை காரணமாக அடிப்படைத் தேவையான காய்கறி விலை அதிகளவில் உயர்ந்து விற்பனை செய்யப் பட்டு வருகின்றது.

    தருமபுரி,

    இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக காய்கறி வாங்குவது அனைவருக்கும் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இதில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி 130 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 90 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்ததால் முதற்கட்டமாக சென்னை மாநகரில் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ரூபாய் 80, 85 ஆகிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்ததால் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    மேலும் பீன்ஸ், பச்சை மிளகாய் போன்ற விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து காய்கறி விலைகள் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருவ தோடு, குறைந்த அளவில் காய்கறி வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது இஞ்சி விலை வரலாறு காணாத வகையில் கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சில்லரை கடையில் 280 ரூபாய்க்கும், மொத்த காய்கறி விற்பனை கடையில் 255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    மேலும் சாம்பார் வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 30 ரூபாய் விலை உயர்ந்து 90 ரூபாய்க்கும், தக்காளி விலை 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    இதில் தற்போது ஆறுதலாக 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    இது குறித்து தருமபுரி வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து இஞ்சி வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வரும் காரணத்தினால் இஞ்சி கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    கடந்த சில வருடங்களில் இஞ்சி விலை 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படாத நிலையில் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    மேலும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை காரணமாக அடிப்படைத் தேவையான காய்கறி விலை அதிகளவில் உயர்ந்து விற்பனை செய்யப் பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் அவதி அடைந்து வருகிறோம் என்றார்.

    • தருமபுரி மாவட்டத்தில் புதியதாக கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
    • வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். தருமபுரி மாவட்டத்தில் புதியதாக கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

    வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், நீலாபுரம் செல்வம், பழனி, மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்குமார், செல்வராஜ், முருகன், கோபால், செந்தில், விஸ்வநாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், தனபால், அன்பு, தங்கராஜ், நகர நிர்வாகிகள் அம்மாவடிவேல், சுரேஷ் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

    • துர்நாற்றம் வீசுவதால் ஏரியை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் மற்றும் இவ் வழியாக செல்லும் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
    • 3 கிராமங்களுக்கு இந்த ஏரியை ஒட்டிய பகுதியில் நான்கு ஆழ்துளை கிணறு கள் அமைத்து அதிலிருந்து குடிநீர் வழங்கி வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிக மானோர் வசித்து வரு கின்றனர்.

    இங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சனத்குமார் நதியின் கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலந்து வந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சியில் தருமபுரி நகராட்சியில், ரூ.32 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கியது.

    இதன் முதல்கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரை ஒருங்கிணைத்து, மதிகோன்பாளையம் மற்றும் காந்தி பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மதிகோன்பாளையம்- அரூர் பிரிவு சாலையில், பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு காலை 5 மணி முதல் 9 மணி வரையும், 11 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பாதாள சாக்கடை மின் மோட்டார் இயக்கி சுத்தி கரிப்பு செய்யப்படுகிறது.

    இங்கு சுத்திகரிப்பு செய்து இறுதியாக கிடைக்கும் கழிவு, மண் படிவம் சேகரித்து வைக்கப் படுகிறது.

    இந்த நிலையில் மதிகோண் பாளையத்தில் இருந்து செல்லும் பாதாள சாக்கடை கழிவு நீர் ரெட்டேரி வழியாக காந்தி பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.

    இந்த சுத்தகரிப்பு நிலையம் பழுதடைந்து அவ்வப்போது செயல்படு வதால் 6 மாத காலமாக தினசரி 19 வார்டுகளில் இருந்து வரும் பாதாள சாக்கடை கழிவுநீர் ஏரியின் வழியாகச் செல்லும் பாதாள சாக்கடை குழாய் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஏரி முழுவதும் கழிவு நீர் தேங்கியுள்ளது.

    ஒரு உடைப்பை சரி செய்த நகராட்சி நிர்வாகம் இரண்டு இடத்தில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்யாமல் இருப்பதால் ரெட்டேரி முழுவதும் நிரம்பி கழிவு நீராக காட்சி யளிக்கிறது.

    தருமபுரியில் இருந்து ரெட்டேரி ஏரிக்கரை வழியாக திருப்பத்தூர், வேலூர், சென்னை வரை செல்லும் முக்கிய சாலை யாக உள்ளது.

    இந்த ஏரியில் தேங்கி நிற்கும் கழிவு நீர் குடலை பிரட்டும் அளவிற்கு துர்நாற்றம் வீசுவதால் ஏரியை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் மற்றும் இவ் வழியாக செல்லும் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    மேலும் தருமபுரி ஒன்றியம் செட்டிக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட 3 கிராமங்களுக்கு இந்த ஏரியை ஒட்டிய பகுதியில் நான்கு ஆழ்துளை கிணறு கள் அமைத்து அதிலிருந்து குடிநீர் வழங்கி வருகிறது.

    இந்த குடிநீரை குடித்து வரும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஒரு விதமான அரிப்பு அலர்ஜி நோயால் தாக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

    கால்நடைகளுக்கு உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்பட்டு திட்டு திட்டாக கட்டிகள் தோன்றி புண்களாக மாறி வருகிறது.

    கிணற்றில் நிலத்தடி நீர் முழுவதும் வாயில் வைக்க முடியாமல் உப்பு கலந்து பசுமை கலரில் மாசடைந்து கலர் மாறி வருவதாக பொது மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.

    இது குறித்து பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேதனை யோடு தெரிவிக்கின்றனர்.

    • இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
    • அதிகாலை டீ மாஸ்டர் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    காரிமங்கலம், 

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ராமசாமி கோவில் அருகே பேக்கரி கடை மற்றும் டீக்கடை வைத்துள்ளார்.

    நேற்றுமுன் தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

    நேற்று அதிகாலை டீ மாஸ்டர் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் கடை உரிமையாளர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சண்முகம் உள்ளே சென்று பார்த்தபோது சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு கடையில் இருந்த சிசிடிவி பதிவு ஹார்ட் டிஸ்க் மற்றும் சில பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ஒரு 40 ஆயிரம் ஆகும்.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஸ்ரீ ராமானுஜர் மடம் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரம் ஏ.கொல்லஅள்ளி ரோட்டில் குலசேகர ராமானுஜ அறக்கட்டளை சார்பில் குலசேகர ராமானுஜர் மடம் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் சீனிவாச ஆச்சார்ய சாமி முன்னிலையில் ஸ்ரீ ராமானுஜர் மடம் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ குலசேகர ராமானுஜர் அறக்கட்டளை மற்றும் பாகவத கோஷ்டிகள், ஆண்டாள் கோஷ்டிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலர் ராஜசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.
    • மாணவ-மாணவியர்களின் சேர்க்கை குறித்து தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு விடுதிகளில் 2023- 24 ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை குறித்து தேர்வு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலர் ராஜசேகரன் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், பேரூராட்சி தலைவர் முரளி, மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் செயல்பட்டு வரும் 12 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி விடுதிகளில் 6 முதல் 12- ம் வகுப்பு வரை காலியாக உள்ள இடங்களுக்கு தேர்வு குழு மூலம் மாணவ-மாணவியர்களின் சேர்க்கை குறித்து தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதி காப்பாளர்கள் , தேர்வு குழு உறுப்பிணர்கள் மோகன், பெரியசாமி, பட்டு அஜிசுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்படும்.
    • நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பதற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதுதொடர்பாக மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மாவட்ட அளவில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படியும், சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வரை சிறப்பு அமர்வு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அந்தந்த நீதிமன்றங்களில் மதியம் 2 மணிக்கு மேல் நடைபெறும்.

    சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வை தொடர்ந்து நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு சமரச தீர்வு காணப்படும்.

    இதேபோல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாரா கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்படும்.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம்.

    சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்க கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு நடை முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடியிருப்புகள் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும்.
    • பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களுக்கு புதிய தாக வீடுகள் கட்டித்தர வேண்டும்.

    அரூர், 

    தருமபுரி மாவட்டம், அரூரில் தூய்மைப் பணியாளர்களுக்கான கண்காணிப்பு குழுவின் 2-ம் காலாண்டு ஆய்வுக் கூட்டம், கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் பேசுகையில், அரூர் பேரூரா ட்சிக்கு உள்பட்ட சுடுகாடு மேட்டில் தூய்மைப் பணி யாளர்களின் குடியிப்புகள் உள்ளன.

    இந்த குடியிருப்புகள் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும்.

    இந்த குடியிருப்பு பகுதியில் குடிநீர், தெரு விளக்குகள், சிமெண்ட் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

    மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள குடியிரு ப்புகளில் தூய்மைப் பணியா ளர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.

    எனவே அரூர், கம்பை நல்லூர், கடத்தூர், பொ.மல்லா புரம், பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களுக்கு புதிய தாக வீடுகள் கட்டித்தர வேண்டும்.

    தூய்மைப் பணி யாளர்களின் குழந்தை களுக்கு கல்விக் கடன்கள், சிறு தொழில் கடன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதில் வட்டாட்சியர்கள் பெருமாள், வள்ளி, தனி வட்டாட்சியர்கள் மில்லர், சின்னா, தூய்மைப் பணியாளர்களின் சங்க பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.

    • மின்கம்பத்தில் பீஸ் போட ஏறினார். அப்போது மின்சாரம் இவர் மீது தாக்கியது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே பங்குநத்தம் அடுத்துள்ள குறிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது50). இவர் நேற்று அங்குள்ள ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த கடையில் மின்சாரம் இல்லை.

    இதனால் மின்கம்பத்தில் பீஸ் போட ஏறினார். அப்போது மின்சாரம் இவர் மீது தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூலி தொழிலா ளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட சக்திவேல் நேற்று மதியம் வீடடில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள ராஜா கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது45).

    கூலி தொழிலா ளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட சக்திவேல் நேற்று மதியம் வீடடில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.

    இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×