என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
தருமபுரியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- தருமபுரி மாவட்டத்தில் புதியதாக கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
- வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். தருமபுரி மாவட்டத்தில் புதியதாக கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுத வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், நீலாபுரம் செல்வம், பழனி, மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்குமார், செல்வராஜ், முருகன், கோபால், செந்தில், விஸ்வநாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், தனபால், அன்பு, தங்கராஜ், நகர நிர்வாகிகள் அம்மாவடிவேல், சுரேஷ் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.






