என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை குழாய் உடைந்து ஏரியில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
    X

    மதிகோன்பாளையம் அருகில் உள்ள ஏரியில் தேங்கி இருக்கும் கழிவுநீரை படத்தில் காணலாம்.

    பாதாள சாக்கடை குழாய் உடைந்து ஏரியில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

    • துர்நாற்றம் வீசுவதால் ஏரியை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் மற்றும் இவ் வழியாக செல்லும் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
    • 3 கிராமங்களுக்கு இந்த ஏரியை ஒட்டிய பகுதியில் நான்கு ஆழ்துளை கிணறு கள் அமைத்து அதிலிருந்து குடிநீர் வழங்கி வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிக மானோர் வசித்து வரு கின்றனர்.

    இங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சனத்குமார் நதியின் கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலந்து வந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சியில் தருமபுரி நகராட்சியில், ரூ.32 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கியது.

    இதன் முதல்கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரை ஒருங்கிணைத்து, மதிகோன்பாளையம் மற்றும் காந்தி பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    மதிகோன்பாளையம்- அரூர் பிரிவு சாலையில், பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு காலை 5 மணி முதல் 9 மணி வரையும், 11 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பாதாள சாக்கடை மின் மோட்டார் இயக்கி சுத்தி கரிப்பு செய்யப்படுகிறது.

    இங்கு சுத்திகரிப்பு செய்து இறுதியாக கிடைக்கும் கழிவு, மண் படிவம் சேகரித்து வைக்கப் படுகிறது.

    இந்த நிலையில் மதிகோண் பாளையத்தில் இருந்து செல்லும் பாதாள சாக்கடை கழிவு நீர் ரெட்டேரி வழியாக காந்தி பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.

    இந்த சுத்தகரிப்பு நிலையம் பழுதடைந்து அவ்வப்போது செயல்படு வதால் 6 மாத காலமாக தினசரி 19 வார்டுகளில் இருந்து வரும் பாதாள சாக்கடை கழிவுநீர் ஏரியின் வழியாகச் செல்லும் பாதாள சாக்கடை குழாய் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஏரி முழுவதும் கழிவு நீர் தேங்கியுள்ளது.

    ஒரு உடைப்பை சரி செய்த நகராட்சி நிர்வாகம் இரண்டு இடத்தில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்யாமல் இருப்பதால் ரெட்டேரி முழுவதும் நிரம்பி கழிவு நீராக காட்சி யளிக்கிறது.

    தருமபுரியில் இருந்து ரெட்டேரி ஏரிக்கரை வழியாக திருப்பத்தூர், வேலூர், சென்னை வரை செல்லும் முக்கிய சாலை யாக உள்ளது.

    இந்த ஏரியில் தேங்கி நிற்கும் கழிவு நீர் குடலை பிரட்டும் அளவிற்கு துர்நாற்றம் வீசுவதால் ஏரியை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் மற்றும் இவ் வழியாக செல்லும் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    மேலும் தருமபுரி ஒன்றியம் செட்டிக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட 3 கிராமங்களுக்கு இந்த ஏரியை ஒட்டிய பகுதியில் நான்கு ஆழ்துளை கிணறு கள் அமைத்து அதிலிருந்து குடிநீர் வழங்கி வருகிறது.

    இந்த குடிநீரை குடித்து வரும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஒரு விதமான அரிப்பு அலர்ஜி நோயால் தாக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

    கால்நடைகளுக்கு உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்பட்டு திட்டு திட்டாக கட்டிகள் தோன்றி புண்களாக மாறி வருகிறது.

    கிணற்றில் நிலத்தடி நீர் முழுவதும் வாயில் வைக்க முடியாமல் உப்பு கலந்து பசுமை கலரில் மாசடைந்து கலர் மாறி வருவதாக பொது மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.

    இது குறித்து பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேதனை யோடு தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×