என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X

    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    • மின்கம்பத்தில் பீஸ் போட ஏறினார். அப்போது மின்சாரம் இவர் மீது தாக்கியது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே பங்குநத்தம் அடுத்துள்ள குறிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது50). இவர் நேற்று அங்குள்ள ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த கடையில் மின்சாரம் இல்லை.

    இதனால் மின்கம்பத்தில் பீஸ் போட ஏறினார். அப்போது மின்சாரம் இவர் மீது தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×