தருமபுரி திருட்டு வழக்கில் சென்னை வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

தருமபுரி நகர் பகுதியில் திருடியதாக டவுன் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன.திருட்டு வழக்கில் மாரியப்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி திருட்டு வழக்கில் சென்னை வாலிபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
Published on

தருமபுரி,

சென்னை டி.நகர் அடுத்த கண்ணம்மாபேட்டை சித்திவிநாயகா தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் மாரியப்பன் (வயது29). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளன.

மேலும் இவர் மீது தருமபுரி நகர் பகுதியில் திருடியதாக டவுன் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன. இதனால் மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரையின் பேரில் திருட்டு வழக்கில் மாரியப்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com