என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எல்.ஏ ஆய்வு"

    • பொது மக்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஆர்வோ அமைக்கப்பட்டது.
    • தண்ணீர் வழங்கும் நிலையத்தை பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் எம்.எல்.ஏ நிதியிலிருந்து பொது மக்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஆர்வோ அமைக்கப்பட்டது. அது முறையாக செயல்படுவதில்லை என நோயாளிகள் பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து கடத்தூர் மருத்துவமனை பதியில் அமைந்துள்ள தண்ணீர் வழங்கும் நிலையத்தை பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அவருடன் பேரூராட்சி கவுன்சிலர் சபியுல்லா, ஒன்றிய துணைச் செயலாளர் ரவிந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சசிகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர். மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயளிகளுக்கு முறையாத சிகிச்சை அளிக்க வேண்டும். தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    • கடத்தூர் கிளை நூலகத்திற்கு இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்ட எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கட்டிடம் கட்டும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
    • கட்டடத்தை தரமாக விரைவாக கட்டி முடிக்க ஒப்பந்ததாரை அறிவுறுத்தினார்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்திற்கு இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்ட எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கட்டிடம் கட்டும் வேலைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கட்டிடம் கட்டும் பணிகளை எம்.எல்.ஏ திடீர் ஆய்வு செய்தார். கட்டடத்தை தரமாக விரைவாக கட்டி முடிக்க ஒப்பந்ததாரை அறிவுறுத்தினார்.

    அப்போது நூலகர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத், அதிமுக ஒன்றிய செயலாளர் முருகன், பேரூராட்சி கான்சிலர் சஃபியுல்லா, ஒன்றிய துணை செயலாளர் ரவிந்திரன், சென்னகிருஷ்ணன், முருகன், ஆதிமூலம், செல்வம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • வெள்ளப்பெருக்கால் காவிரி ஆற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
    • குடியிருப்புகளில் நீர் புகுந்தும் பாதிக்கப்பட்டதை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

    பென்னாகரம்,

    கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2.50 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

    இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரி ஆற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஒகேனக்கல் நாடார் கொட்டாய், சத்திரம், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

    ஒகேனக்கல் ஆற்றின் கரைப்பகுதியில் வசிக்கும் பல்வேறு மக்களின் வீடுகள் வெள்ளத்தினால் இடிந்து சேதம் அடைந்தும், பல்வேறு குடியிருப்புகளில் நீர் புகுந்தும் பாதிக்கப்பட்டதை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் கெம்புராஜ், பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன் மற்றும் ரங்கநாதன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், பா.ம.க மாவட்ட தலைவர் செல்வகுமார், மாநில இளைஞரணி இணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    ×