கடத்தூர் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு

பொது மக்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஆர்வோ அமைக்கப்பட்டது. தண்ணீர் வழங்கும் நிலையத்தை பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.
கடத்தூர் அரசு மருத்துவமனையில்  எம்.எல்.ஏ ஆய்வு
Published on

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் எம்.எல்.ஏ நிதியிலிருந்து பொது மக்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஆர்வோ அமைக்கப்பட்டது. அது முறையாக செயல்படுவதில்லை என நோயாளிகள் பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து கடத்தூர் மருத்துவமனை பதியில் அமைந்துள்ள தண்ணீர் வழங்கும் நிலையத்தை பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் பேரூராட்சி கவுன்சிலர் சபியுல்லா, ஒன்றிய துணைச் செயலாளர் ரவிந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சசிகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர். மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயளிகளுக்கு முறையாத சிகிச்சை அளிக்க வேண்டும். தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com