என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அதியமான் அரசு பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் 45 ஜோடி பெஞ்ச் டெஸ்க் பள்ளிக்கு வழங்கிய காட்சி.
அதியமான் அரசு பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் டெஸ்க் பெஞ்சுகள்
- மாணவர்கள் நன்றாக படித்து பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் பெருமை தேடித் தர வேண்டும்.
- நன்றாக படித்து வருங்காலத்தில் சி.இ.ஓ.டி.ஓ மற்றும் வருங்கால தலைவர்களாக வர வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ரூ.6 லட்சம் மதிப்பில் 45 ஜோடி பெஞ்ச் டெஸ்க் பள்ளிக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் தான் இந்த பள்ளியில் படித்ததாகவும் மாணவர்கள் 160 ஆண்டு பழமை வாய்ந்த பள்ளியில் படித்து வருகிறீர்கள். நன்றாக படித்து வருங்காலத்தில் சி.இ.ஓ.டி.ஓ மற்றும் வருங்கால தலைவர்களாக வர வேண்டும்.
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் அனைத்தையும் மாணவர் களுக்கும் பள்ளியில் படிப்ப தற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வது எம்.எல்.ஏ-வான என்னுடைய கடமை.
மாணவர்கள் நன்றாக படித்து பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் பெருமை தேடித் தர வேண்டும். உங்களுக்கு படிப்பதற்கு என்ன கோரிக்கையாக வைத்தாலும் அதனை நான் நிறைவேற்றி தருகிறேன்.
இப்பள்ளியில் தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை என கேள்விப்பட்டேன். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து உள்ளேன். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப் படும் இல்லையென்றால் உங்களுக்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசுவேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாண்விழி,பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.






