search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாய் அடைப்பு ஏற்பட்டு  தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
    X

    கால்வாய் அடைப்பால் அருகில் உள்ள காலி நிலத்தில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை படத்தில் காணலாம்.

    கால்வாய் அடைப்பு ஏற்பட்டு தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

    • உடைந்த துவாரத்தின் வழியாக கழிவுநீர் குடியிறுப்பு பகுதியில் உள்ள காலி இடங்களில் தேங்குகிறது.
    • கொசுக்கள் அதிகளவில் உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 31-வது வார்டு பாரதிபுரத்தில் ராஜீவ்காந்தி தெரு, பாரதியார் தெரு, விவேகானந்தர் தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.இந்த தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு ள்ளது.

    இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளாக இந்த கால்வாய் தூர்வாராமல் சிதிலமடைந்து உள்ளது.

    இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேக்கமடைகிறது. உடைந்த துவாரத்தின் வழியாக கழிவுநீர் குடியிறுப்பு பகுதியில் உள்ள காலி இடங்களில் தேங்குகிறது.

    கொசுக்கள் அதி களவில் உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இதனால் பொது மக்கள் அவதியடைகின்றனர். இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தரவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×