சாணிபவுடர் குடித்த இளம்பெண் சாவு

மனைவியிடையே குடும்பதகராறு ஏற்பட்டுள்ளது.மோனிசா வீட்டில் சாணிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
சாணிபவுடர் குடித்த இளம்பெண் சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நீர்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் பரபு. இவரது மனைவி மோனிசா (வயது 24). இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

சம்பவத்தன்று கணவன்-மனைவியிடையே குடும்பதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் மனமுடைந்து காணப்பட்ட மோனிசா வீட்டில் சாணிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com