என் மலர்
தர்மபுரி
- இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
- ஆந்திர மாநில வனச்சரகர் வெங்கட் ரமணா தலைமையில், வனத்துறை அதிகாரிகள் வெளாம்பள்ளி, சித்தேரி மலை கிராமங்களுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அரூர்,
ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் வெட்டி கடத்தியதாக தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வெளாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சுந்தரவேலு (21), அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அருணாசலம் (32) ஆகியோரை அந்த மாநில வனத்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்த நிலையில் , நீதிமன்ற காவலில் இருந்து ஜாமீனில் இருவரும் வெளி வந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆந்திர மாநில வனச்சரகர் வெங்கட் ரமணா தலைமையில், 5 பேர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் வெளாம்பள்ளி, சித்தேரி மலை கிராமங்களுக்கு வந்து தலைமறைவாக இருப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் போது அரூர் வனச்சரகர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழக வனத்துறையினர் உடனிருந்தனர்.
- 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
- பரிசல்கள் இயக்கத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல் பரிசல்துறை அருகே பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.
ஒகேனக்கல்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்து வந்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
- 18-ம் நாளான 3.8.2023 தேதி வியாழக் கிழமை தரும புரி மாவட்டத் திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப் படுகிறது.
- உள்ளூர் விடு முறையை ஈடு கட்டும் வகை யில் 26.8.2023 (சனிக்கிழமை யன்று) பணி நாளாக அறிவிக்கப்படு கிறது.
தருமபுரி,
ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ம் நாளான வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-
ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ம் நாளான 3.8.2023 தேதி வியாழக் கிழமை தரும புரி மாவட்டத் திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப் படுகிறது.
இந்த உள்ளூர் விடு முறையை ஈடு கட்டும் வகை யில் 26.8.2023 (சனிக்கிழமை யன்று) பணி நாளாக அறிவிக்கப்படு கிறது. உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கல்லின் மீது வண்டி ஏறி இறங்கியதால், வண்டியில் இருந்து தமிழரசன் தவறி கீழே விழுந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி அருகே உள்ள கலசம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்கன். இவரது மகன் தமிழரசன் (வயது 29), விவசாயி.
இவர் நேற்று கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது வழியில் இருந்து கல்லின் மீது வண்டி ஏறி இறங்கியதால், வண்டியில் இருந்து தமிழரசன் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 480 விவசாயிகள் மேற்பட்ட 2100 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்
- 5 ரக பருத்தி குவிண்டால் ரூ. 6,769 முதல் 7,289 ஏலம் போனது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இந்த அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள்.
இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 480 விவசாயிகள் மேற்பட்ட 2100 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.
இந்த வாரம் எம்சி 5 ரக பருத்தி குவிண்டால் ரூ. 6,769 முதல் 7,289 ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ரூபாய் 55 லட்சம் வரை பருத்தி ஏலம் போனது.
- பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கி தினகூலியாக ரூ 600 வழங்கவேண்டும்
தருமபுரி,
உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பிரசார கூட்டம் நடை பெற்றது.
இந்த கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார்.
இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.ரேசன்முறையை பலப்படுத்தவேண்டும். தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 வழங்கவேண்டும்.
நிரந்தர தன்மையுள்ள பணிகளில் காண்டிராக்ட் தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்கவேண்டும்.மோட்டார் வாகன சட்டத்திருத்தம் மின்சார வினியோக சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும்.சம வேலைக்கு சம ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. படித்த இளைஞர்களுக்கு தகுதிக் கேற்ற வேலை வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கி தினகூலியாக ரூ 600 வழங்கவேண்டும் என வலியுறுத்தினர்.
தருமபுரியில் தொடங்கிய பிரசாரம் நல்லம்பள்ளி, நாகர்கூடல், பெரும்பாலை, பென்னாகரம், இண்டூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
- அமைப்பு சாரா நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு வாரிய பலன்களை உடனே வழங்க வேண்டும்
- ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சி.முரளி தலைமை வகித்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு முறைசாரா தொழிலாளர் நல வாரிய செயல்பாட்டை சீர்படுத்த கோரி சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோட்டார் தொழி லாளர்கள் நலவாரிய செயல்பாட்டை சீர்படுத்த வேண்டும். நலவாரியத்தில் ஆன்லைன், ஆப்லைன் பதிவு முறையை சீர்படுத்த வேண்டும்.
அமைப்பு சாரா நலவாரி யங்களுக்கு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கீடு செய்யவேண்டும். அமைப்பு சாரா நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு வாரிய பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி னர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சி.முரளி தலைமை வகித்தார்.
இதில் மாநிலச் செயலாளர் சி.நாகராசன் மாவட்ட செயலாளர் பி.ஜிவா, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலாவதி, நாகராஜன் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஹானஸ்ட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் சேர்க்கை முடிவுறும் நிலையில் இருப்பதால் காலியிடங்கள் உள்ள அனைத்து பாடபிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.
- வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) மீதமுள்ள காலி யிடங்களுக்கும் சேர்க்கை நடைபெறும்.
தருமபுரி
தருமபுரியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் தற்போது இளநிலை பட்டப்படிப் பிற்கான முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான 4-ம் கட்டமாக கலந்தாய்வு நடைபெற்று மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் நாளை (27-ந் தேதி) மற்றும் 28-ந் தேதியும், 31-ந் தேதியும் 3 நாட்களுக்கு இளநிலை பட்டப்படிப்புகான 5-ம் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசு கலைக்கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை முடிவுறும் நிலையில் இருப்பதால் காலியிடங்கள் உள்ள அனைத்து பாடபிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.
நாளை (27-ந்தேதி) இயற்பியல், வேதியியல், கணிதவியல், விலங்கியல், தாவரவியல். கணினி அறிவியல், கணினி பயன்பாடு, மின்னணுவியல், காட்சிவழித் தொடர்பியல், உளவியல், ஆடை வடிவமைப்பியல், புள்ளியியல் ஆகிய பாட பிரிவுகளுக்கும்,
நாளை மறுநாளான்று (28-ந் தேதி) மொழிப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், சமூகப்பணி, வணிகவியல், வணிகவியல் (கூட்டுறவு), வணிக நிர்வாகவியல் ஆகிய பாடபிரிவுகளுக்கும், வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) மீதமுள்ள காலி யிடங்களுக்கும் சேர்க்கை நடைபெறும்.
சேர்க்கையின் போது மாணவர்கள் விண்ணப்பப் படிவம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண்கள் பட்டியல், சாதிசான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கலை மற்றும் வணிகவியல் பாடபிரிவுகளுக்கு ரூ.2980-யையும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ரூ.3 ஆயிரத்தையும், பி.காம் (சி.ஏ)., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. பாடபிரிவுகளுக்கு ரூ.2100-யையும் சேர்க்கை கட்டணமும் எடுத்து வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு www.gacdpi.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சேர்க்கைக்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடபிரிவுகளை தேர்வு செய்ய அறிவிக்கப்பட்ட நாட்களில் காலை 10 மணி முதல் 11மணிக்குள் அசல் மற்றும் நகல் சான்றுடன் நேரில் வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- பயிற்சி அளித்த கிராண்ட் மாஸ்டர் கியோஷி நடராஜை பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தருமபுரி,
கடந்த 23-ந் தேதி சேலத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டிநடந்தது.இதில் அனைத்து நாடுகளிலிருந்தும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி தீபிகா, 6-ம் வகுப்பு மாணவன் நடராஜ், 11-ம் வகுப்பு மாணவன் தீபக் ஆகியோர் தனிநபர் கராத்தே பிரிவில் கலந்து கொண்டு முதலிடமும், 4-ம் வகுப்பு மாணவன் பேட்ரி மிராக்கல் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளிக்கும், மாவட்டத் திற்கும் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் செந்தில் கந்தசாமி, மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகரன், நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளி முதல்வர் வள்ளியம்மாள், துணை முதல்வர் கவிதா, பிரைமரி மேற்பார்வை யாளர் கல்பனா மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
சாதனை படைத்த மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளித்த தென்னிந்திய கராத்தே டூ அசோசியேசன் தலைவரும் பயிற்சியாளருமான கிராண்ட் மாஸ்டர் கியோஷி நடராஜை பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
- கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே மாதம்பட்டியில் ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஸ்ரீ மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தார்.
கல்லூரியின் துணைத் தலைவர் மாரியப்பன், பொருளாளர் ராஜ கவுண்டர், நிர்வாக இயக்குனர் மாதுளம் பூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக உளவியல் வாழ்க்கை திறன் பயிற்சியாளர் முதன்மை செயல் அலுவலர் கார்த்திக் வேலு கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக முதலாம் ஆண்டு துறை தலைவர் கவிதா நன்றி கூறினார்.
- தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமை வகித்தார்.
தருமபுரி,
தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஒன்றிணைந்து தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 7360 கெளரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தகுதி உள்ள விரிவுரையாளர்கள் ஏராளமானவர்கள் பணியாற்றும் நிலையில் அண்ணா பல்கலையில் இருந்து மிகை பேராசிரியர்களை அரசு கல்லூரியில் பணியமர்த்தி யதை திரும்ப பெற வேண்டும்.
தகுதி உள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யூஜிசி நிர்ணயித்துள்ள ஊதியம் ரூ.50 ஆயிரத்தை வழங்க வேண்டும். பணி அனுபவ காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், முரளி, ஆண்டிச்சியம்மாள் உள்ளிட்ட தருமபுரி மண்டலத்திற்குட்பட்ட பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் கல்லூரிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையளர்கள் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளிடம் வியாபாரிகள் ஒரு தேங்காய் அளவை பொறுத்து ரூ.5 முதல் ரூ.15 வரை கொள்முதல் செய்கின்றனர்.
- தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் கடும் நஷ்டம் ஏற்படுகிறது.
தருமபுரி,
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை, கோபிச்செட்டி பாளையம், திருநெல்வேலி உள்பட பல பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன.
இப்பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காயை விவசாயிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்பட பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு ஆண்டாக தென்னைமரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை காட்டிலும் கடந்த இரண்டு மாதமாக தேங்காய் வரத்து 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால் தேங்காய் விலை கடும் சரிவை சரிந்துள்ளது. இதன் காரணமாக தேங்காயாக விற்பனை செய்வதைவிட அதை காய வைத்து கொப்பரையாக விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொப்பரையாக விற்கும்போது சற்று லாபம் கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 4 மாவட்டங்களில் பரவலாக தென்னைமரங்கள் உள்ளன. இம்மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 டன் தேங்காய் கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி, ஆடி மாதங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரிக்கும். இம்மாதங்களில் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை காட்டிலும் தேங்காய் வரத்து அதிகரிக்கும்.
இதனால் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. விவசாயிகளிடம் வியாபாரிகள் ஒரு தேங்காய் அளவை பொறுத்து ரூ.5 முதல் ரூ.15 வரை கொள்முதல் செய்கின்றனர்.
இவ்வாறு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அந்த தேங்காயை ரூ.8 முதல் ரூ.25 வரை விற்பனை செய்கின்றனர். தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் கடும் நஷ்டம் ஏற்படுகிறது.
நஷ்டத்தில் இருந்து தப்பிக்க பல விவசாயிகள் தேங்காயை உடைத்து காயவைத்து கொப்பரையாக விற்பனை செய்து வருகின்றனர். கொப்பரையாக விற்பனை செய்யும்போது ஒரளவுக்கு லாபம் கிடைத்து வருகிறது.
எங்களிடம் கொப்பரை வாங்குபவர்கள் அதை தேங்காய் எண்ணெய் அரவை ஆலைகளுக்கு அனுப்புகின்றனர். அரவை ஆலைகளில் கொப்பரை வரத்து அதிகரிப்பால் அங்கு தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் சற்று அதிகரித்துள்ளது என வியபாரிகள் தெரிவிக்கின்றனர்.






