search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான 5-ம் கட்ட கலந்தாய்வு
    X

    தருமபுரி அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான 5-ம் கட்ட கலந்தாய்வு

    • மாணவர்கள் சேர்க்கை முடிவுறும் நிலையில் இருப்பதால் காலியிடங்கள் உள்ள அனைத்து பாடபிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.
    • வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) மீதமுள்ள காலி யிடங்களுக்கும் சேர்க்கை நடைபெறும்.

    தருமபுரி

    தருமபுரியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் தற்போது இளநிலை பட்டப்படிப் பிற்கான முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான 4-ம் கட்டமாக கலந்தாய்வு நடைபெற்று மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் நாளை (27-ந் தேதி) மற்றும் 28-ந் தேதியும், 31-ந் தேதியும் 3 நாட்களுக்கு இளநிலை பட்டப்படிப்புகான 5-ம் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

    இதுகுறித்து அரசு கலைக்கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை முடிவுறும் நிலையில் இருப்பதால் காலியிடங்கள் உள்ள அனைத்து பாடபிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.

    நாளை (27-ந்தேதி) இயற்பியல், வேதியியல், கணிதவியல், விலங்கியல், தாவரவியல். கணினி அறிவியல், கணினி பயன்பாடு, மின்னணுவியல், காட்சிவழித் தொடர்பியல், உளவியல், ஆடை வடிவமைப்பியல், புள்ளியியல் ஆகிய பாட பிரிவுகளுக்கும்,

    நாளை மறுநாளான்று (28-ந் தேதி) மொழிப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், சமூகப்பணி, வணிகவியல், வணிகவியல் (கூட்டுறவு), வணிக நிர்வாகவியல் ஆகிய பாடபிரிவுகளுக்கும், வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) மீதமுள்ள காலி யிடங்களுக்கும் சேர்க்கை நடைபெறும்.

    சேர்க்கையின் போது மாணவர்கள் விண்ணப்பப் படிவம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண்கள் பட்டியல், சாதிசான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கலை மற்றும் வணிகவியல் பாடபிரிவுகளுக்கு ரூ.2980-யையும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ரூ.3 ஆயிரத்தையும், பி.காம் (சி.ஏ)., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. பாடபிரிவுகளுக்கு ரூ.2100-யையும் சேர்க்கை கட்டணமும் எடுத்து வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு www.gacdpi.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    சேர்க்கைக்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடபிரிவுகளை தேர்வு செய்ய அறிவிக்கப்பட்ட நாட்களில் காலை 10 மணி முதல் 11மணிக்குள் அசல் மற்றும் நகல் சான்றுடன் நேரில் வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×