என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடத்தூரில் நடைபெற்றது.
    • மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபேதார் சிறுபான்மையின் அமைப்பு ஜான் பீட்டர், நகர செயலாளர் மாயக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடத்தூர்,

    மணிப்பூர் பாலியல் வன்கொடுமையை மத நல்லிணக்க மேடை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடத்தூரில் நடைபெற்றது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், கிறிஸ்தவ சமூக அமைப்பு, உள்ளிட்ட பல கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நந்தன், பேரூராட்சி துணை தலைவர் வினோத், கவுன்சிலர் மயில்சாமி, ஒன்றியெ யலாளர் பாளையா தமிழ் செல்வன், பாஷா, பூட்டுஜாதா, தொகுதி செயலாளர் தமிழ் அன்வர் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபேதார் சிறுபான்மையின் அமைப்பு ஜான் பீட்டர், நகர செயலாளர் மாயக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ் முயற்சியால் நொரம்பு மண் கொட்டி சேறும் சகதியுமாக இருந்த சாலையை சீரமைத்தார்.
    • இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமம் இல்லாமல் கடந்து சென்றனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது அதியமான் கோட்டை பகுதி. இந்தப் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் கிராம பகுதியில் இருந்து தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையை இணைக்கும் தார் சாலையை போக்கு வரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலையானது சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக தார் சாலையாக அமைக்கப்பட்டதால் தற்பொழுது குண்டும் குழியமாக காணப்படுகிறது.

    பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

    இந்த சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருவதினால் சேறும் சகதியாகவும் மாறி உள்ளது. இதே பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவைகளுக்கு செல்லவும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதனால் இந்த சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல வருடங்க ளாகவே கோரிக்கை விடுத்தனர்.

    இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் காலை ஒன்றிணைந்து சேற்றில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை அமைக்க உரிய அதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவதாக பேச்சு வார்த்தை நடத்தி போராட் டத்தை கலைத்தனர்.

    அதன் அடிப்படையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ் முயற்சியால் நொரம்பு மண் கொட்டி சேறும் சகதியுமாக இருந்த சாலையை சீரமைத்தார்.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமம் இல்லாமல் கடந்து சென்றனர்.

    • உழவர் சந்தை விலை பட்டியலில் இரண்டாம் ரக தக்காளி 80 ரூபாய் என விலைப் பட்டியலை வெளியிட்டு விட்டு 94, 96, 98 ரூபாய் என பல ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
    • உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் தக்காளி விலை பட்டியலையும் பார்த்து மலைத்து போய் செல்கின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் முக்கிய பயிராக தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பல ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

    குறிப்பாக பாலக்கோடு, காரிமங்கலம், ராயக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி பிரதான தொழிலாக வருடம் முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளையும் தக்காளி பழத்திற்கு தனி மவுசு உண்டு சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்க ளுக்கும் வெளி மாநிலங்க ளான பெங்களூர், கேரளா விற்கும் ஏற்றப்படுகிறது.

    இந்த நிலையில் தக்காளி விளைச்சலில் ஈடுபடும் விவசாயிகளிடம் வியாபாரிகள் நேரடியாக சென்று முதல் ரகம், இரண்டாம் ரகம் என தரம் பிரிக்கப்பட்டு 40 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை தக்காளியை வாங்கி செல்கின்றனர்.

    இவ்வாறு வாங்கி செல்லும் தக்காளிகள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் பொழுது 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இது போன்ற விலை உயர்வை கட்டுப்படுத்து வதற்காக உழவர் சந்தை தொடங்கப்பட்டது. உழவர் சந்தையில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி வகைகளை நேரடியாக நுகர்வோர்க்கு விற்பனை செய்வதற்காக தொடங்கப் பட்டது.

    ஆனால் தருமபுரி உழவர் சந்தையில் உழவர்களே இல்லாத வியாபாரிகளின் உழவர் சந்தையாக மாறி உள்ளது.

    விவசாயிடமிருந்து 70 ரூபாய்க்கு வாங்கப்படும் முதல் ரக தக்காளி உழவர் சந்தையில் 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கழிவு செய்யப்பட்ட இரண்டாம் ரக தக்காளிகள் 94, 96, 98, 100, 106 ரூபாய் என பல ரகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    வேளாண்மை துறை வெளியிடும் உழவர் சந்தை விலை பட்டியலில் இரண்டாம் ரக தக்காளி 80 ரூபாய் என விலைப் பட்டியலை வெளியிட்டு விட்டு 94, 96, 98 ரூபாய் என பல ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

    உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள் தக்காளி விலை பட்டியலையும் பார்த்து மலைத்து போய் செல்கின்றனர்.

    வெளிச்சந்தையில் தரமான தக்காளி 100 ரூபாய் விற்பனை செய்யப்படும் நிலையில் கழிவு செய்ய ப்பட்ட இரண்டாம் ரக தக்காளிகளை வியாபாரி களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தருமபுரி மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் ஒரு வருட காலமாக செயல்ப டாமல் முடங்கியுள்ளது.
    • குளிர் பதன வசதி இல்லாததால் பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணை, நெய், பன்னீர் உள்ளிட்ட பால் உபயோக பொருட்கள் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு ள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகள் குறித்து தெரி வித்தனர்.

    அப்போது விவசாயிகள் தொழிற்சங்க மாவட்ட தலைவர் பிரதாபன் தருமபுரி மாவட்ட த்தில் ஆவின் நிர்வாகத்தில் சீர்கேட்டால் ஆவின் செயல் இழந்துள்ளது என தெரிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆவின் கிராம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் நிர்வாகத்திற்கு பால் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த கூட்டுறவு சங்கத்திற்கு பால் கொடுத்து வரும் விவசாயிகளுக்கு முறையான விலையை கூட்டுறவு சங்கங்கள் வழங்கு வதில்லை.

    பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு உடனடியாக பணமும் வழங்குவதில்லை. ஆனால் தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லிட்டருக்கு கூடுதல் விலை கொடுத்து உடனுக்குடன் பணத்தை வழங்குவதால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாலை தனியாருக்கு கொடுத்து வருகின்றனர்.

    இதனால் ஒரு வருடத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது 50,000 லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றன.

    தருமபுரி மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் ஒரு வருட காலமாக செயல்ப டாமல் முடங்கியுள்ளது. அதனால் தருமபுரி மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலை குளிரூட்டும் குளிர் பதன வசதி இல்லாததால் பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணை, நெய், பன்னீர் உள்ளிட்ட பால் உபயோக பொருட்கள் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு ள்ளது.

    மேலும் ஆவின் கொள்முதல் செய்யும் பாலை முறையாக பாக்கெட் செய்து நகர பகுதி முதல் கிராமப் பகுதிகள் வரை வழங்க வேண்டும்.

    ஆனால் தருமபுரி ஆவின் நிர்வாக த்திடம் பால் குளிரூட்டி பாக்கெட் செய்யும் வசதிகள் இல்லாததால் தருமபுரி ஆவின் நிர்வாகம் பெற ப்படும் பாலை சென்னை ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

    பின்னர் தங்களுக்கு தேவையான பால் பாக்கெட்டுகளை கிருஷ்ணகிரி ஆவின் பால் நிர்வாகத்திடம் இருந்து பெற்று விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இது போன்ற குளறுபடி களால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தனியாருக்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர்.

    தனியார் பால் நிறுவனத்தினர் தங்களுடைய கொள்முதல் செய்யும் பாலை பல வடிவமைப்புகளில் பாலை பாக்கெட் செய்து நகர முதல் கிராம பகுதி வரை விடியற்காலை 4 மணிக்குள் பொதுமக்களிடத்தில் சேர்த்து வருகின்றனர்.

    இதற்கு போட்டியாக செயல்பட வேண்டிய ஆவின் நிர்வாகம் நிர்வாக சீர்கேட்டினால் செயல் இழந்து உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • லாரியை சோதனையிட்டனர். அதில் 94 மூட்டைகளில் சுமார் 4700 கிலோ ரேசன் அரிசி இருந்தது ெதரியவந்தது.
    • கர்நாடக மாநிலத்திற்கு ரேசன் அரிசியை கடத்தி செல்லும் போது பிடிபட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் சக்திவேல், வேணுகோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை காரிமங்கலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட்டனர். அதில் 94 மூட்டைகளில் சுமார் 4700 கிலோ ரேசன் அரிசி இருந்தது ெதரியவந்தது.

    இந்த வாகனத்தில் இருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த செல்வராஜ், (32) கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகன் (42) காரிமங்கலத்தை சேர்ந்த ஜெயபால் மகன் சம்பத்குமார் (44) ஆகியோர் என தெரியவந்தது.

    அவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு ரேசன் அரிசியை கடத்தி செல்லும் போது பிடிபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • தருமபுரி மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பரிசல் இயக்க தடை விதித்துள்ளது.
    • நாடார் கொட்டாய் பகுதியில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஒகேனக்கல்,

    கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதனால் தருமபுரி மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பரிசல் இயக்க தடை விதித்துள்ளது.

    இது மட்டுமல்லாமல் இன்று காலை ஒலி பெருக்கி வாகனம் மூலம் காவிரி கரையோர பகுதிகளான முதலைப்பண்ணை, ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பணிகள் ஆற்றில் பாதுகாப்பாக குளிக்கவும், ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், பரிசல் இயக்க தடை செய்யப்பட்டுள்ளதால் பரிசலில் செல்ல வேண்டாம் என்றும் ஒலிபெருக்கி மூலம் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
    • முகாமில் 112 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.

    தருமபுரி,


    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார்.

    இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 112 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த முகாமில் 112 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் புகார் மனுக்கள் கொடுக்காமல் ஏராளமான பொதுமக்கள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக போலீசாரிடம் நேரில் முறையிட்டனர். அவர்களுக்கு போலீசார் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை அணுகுமாறு அறிவுறுத்தினர்.

    இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். காவல்துறை சார்பில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் இந்த குறை தீர்க்கும் முகாம்களில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு, நிலத்தகராறு தொடர்பாக புகார் மனு கொடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார்.
    • கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக வழங்க வேண்டும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக பாலக்கோடு அறிவு கோவில் வளாகத்தில், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் தாலுகாவில் உள்ள நடமாடும் உணவு வணிகர்கள் மற்றும் சாலை ஓர துரித உணவகங்கள், பானிபூரி, பலகார கடை நடத்தும் உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நடைபெற்றது.

    பாலக்கோடு அனைத்து வணிகர் சங்க தலைவர் முத்து, பொருளாளர் மாணிக்கம் மற்றும் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார்.

    உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா ஆகியோர் தலைமை தாங்கினார்.

    உணவு பாதுகாப்பு துறை பயிற்சி பார்ட்னர் சக்சம் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி பயிற்சியாளர் தாரணி மூலம் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது.

    இதில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில் உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் லேபிள் குறித்தும், காண வேண்டிய அம்சங்களான உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், உட்காரணிகள் அலர்ஜி காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்டவை கண்டிப்பாக இருக்க வேண்டும். கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக வழங்க வேண்டும்.

    அனைத்து உணவு வணிகர்களும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று முறையாக புதுப்பித்து நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைக்க கேட்டுக்கொண்டார்.

    பெரிய, சிறிய கடைகள் என்று இல்லாமல் அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வணிகர் சங்கம் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறினர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட உணவு வணிகர்கள் பங்கேற்றனர்.  

    • மழை காலம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
    • மாணவிகள் பள்ளியின் எதிரே உள்ள புளியமரத்தடியில் மழையில் நனைத்தபடியே பஸ்சிற்கு காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பேருந்து நிலையத்தை அகற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு தற்போது ரூ. 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தற்காலிக பேருந்து நிலையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது. அங்கு காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள் என சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த புதிய பேருந்து நிலையத்தில் கடும் வெயில் காலமாக இருந்தாலும், மழைகாலமாக இருந்தாலும் வயதானோர், குழந்தைகள், தாய்மார்கள் உள்ளிட்டோர் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் அவதிபடுகின்றனர்.

    தற்போது மழை காலம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் சின்னப்பநல்லூர், கூத்தப்பாடி, முதுகம்பட்டி, நாகனூர், ஒகேனக்கல் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் மாணவிகள் பள்ளியின் எதிரே உள்ள புளியமரத்தடியில் மழையில் நனைத்தபடியே பஸ்சிற்கு காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் பள்ளியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வர சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மழையில் நனைந்தபடி நடந்தே வர வேண்டும்.

    பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தால் ஒதுங்கி நிற்க கூட இடம் இல்லை.

    இதனால் அப்பகுதியில் தற்காலிக நிழற்கூடம் அமைக்க தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கண்டன ஆர்ப்பாட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நல்லிணக்க மேடை ஒன்றிய அமைப்பாளர் அம்புரோஸ் தலைமை தாங்கினார்.

     பாப்பிரெட்டிபட்டி,

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சமூக நல்லிணக்க மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நல்லிணக்க மேடை ஒன்றிய அமைப்பாளர் அம்புரோஸ் தலைமை தாங்கினார்.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் நந்தன், அதியமான், மாவட்ட பொறுப்பாளர் தமிழ் அன்வர், த.மு.மு.க. மாவட்ட தலைவர் சுதேதார், சிறுபான்மையினர் கிறிஸ்துவ வட்டாரத் முதன்மை குரு தேவ சகாயம், பாப்பிரெட்டிப்பட்டி கிறிஸ்துவ பங்கு தந்தை ஜான் பீட்டர், பொம்மிடி கிறுஸ்துவ சிறுபான்மையினர் மாநில பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் சிறுபான்மையின மக்கள், கன்னியாஸ்திரிகள், இஸ்லாமியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது மத்திய அரசை கண்டித்து பொருப்பாளர்கள் பேசினர்.மேலும் கலவரத்தை தடுக்க வேண்டிய மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நேற்று நிவேதா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் நிவேதா (வயது17).

    இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று நிவேதா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் நேற்று கார்கில் போரில் உயிர் துறந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன் தலைமை தாங்கினார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் நேற்று கார்கில் போரில் உயிர் துறந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன் தலைமை தாங்கினார்.

    பள்ளி தாளாளர் சாந்தி வேடியப்பன், பள்ளி நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளியின் முதல்வர் வெற்றிவேல் செல்வம், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், உமாதேவி, ஏஞ்சலினா மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். கார்கில் போர் வெற்றி தினத்தைப் பற்றி மாணவர்களுக்கு உணர்த்தினர்.

    இதில் மாணவர்கள் கார்கில் பிரமிடு தேசப்பற்று மிக்க நாடகங்களை நடித்தும் தேசப்பற்று மிக்க பாடல்கள் பாடியும் கார்கில் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்

    ×