என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து  பாப்பிரெட்டிப்பட்டியில்  ஆர்ப்பாட்டம்
    X

    பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்

    • கண்டன ஆர்ப்பாட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நல்லிணக்க மேடை ஒன்றிய அமைப்பாளர் அம்புரோஸ் தலைமை தாங்கினார்.

    பாப்பிரெட்டிபட்டி,

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சமூக நல்லிணக்க மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நல்லிணக்க மேடை ஒன்றிய அமைப்பாளர் அம்புரோஸ் தலைமை தாங்கினார்.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் நந்தன், அதியமான், மாவட்ட பொறுப்பாளர் தமிழ் அன்வர், த.மு.மு.க. மாவட்ட தலைவர் சுதேதார், சிறுபான்மையினர் கிறிஸ்துவ வட்டாரத் முதன்மை குரு தேவ சகாயம், பாப்பிரெட்டிப்பட்டி கிறிஸ்துவ பங்கு தந்தை ஜான் பீட்டர், பொம்மிடி கிறுஸ்துவ சிறுபான்மையினர் மாநில பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் சிறுபான்மையின மக்கள், கன்னியாஸ்திரிகள், இஸ்லாமியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது மத்திய அரசை கண்டித்து பொருப்பாளர்கள் பேசினர்.மேலும் கலவரத்தை தடுக்க வேண்டிய மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×