என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரியில் ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது
    X

    லாரியில் ரேசன் அரிசி கடத்திய 3 பேர் கைது

    • லாரியை சோதனையிட்டனர். அதில் 94 மூட்டைகளில் சுமார் 4700 கிலோ ரேசன் அரிசி இருந்தது ெதரியவந்தது.
    • கர்நாடக மாநிலத்திற்கு ரேசன் அரிசியை கடத்தி செல்லும் போது பிடிபட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் சக்திவேல், வேணுகோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை காரிமங்கலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட்டனர். அதில் 94 மூட்டைகளில் சுமார் 4700 கிலோ ரேசன் அரிசி இருந்தது ெதரியவந்தது.

    இந்த வாகனத்தில் இருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த செல்வராஜ், (32) கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகன் (42) காரிமங்கலத்தை சேர்ந்த ஜெயபால் மகன் சம்பத்குமார் (44) ஆகியோர் என தெரியவந்தது.

    அவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு ரேசன் அரிசியை கடத்தி செல்லும் போது பிடிபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×