என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட தேவராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
    • உடனே அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் சோதனை சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற் சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் தேவராஜூக்கு இன்னும் திருமணமாகாததால், அடிக்கடி அவர் மதுக்குடித்து விட்டு வீட்டிற்கு வந்து பெற்றோ ரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட தேவராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போனில் உங்கள் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்து கோகிலாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏருபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி கோகிலா (வயது23). கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் அரவிந்தன் மாமனார் வீட்டில் இருந்து பணம் மற்றும் இருசக்கரம் வாகனம் வாங்கி வருமாறு கூறி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் கோபித்துக் கொண்டு தனது தாய்வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது கோகிலாவை பெற்றோர் சமாதானம் செய்து நேற்று முன்தினம் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கோகிலாவின் தந்தை சண்முகத்துக்கு செல்போனில் உங்கள் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்து கோகிலாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து சண்முகம் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோகிலா காதல் திருமணம் செய்து கொண்டு 2½ வருடஙகள் ஆனநிலையில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தருமபுரி ஆர்.டி.ஓ. கணவர் அரவிந்தனிடமும், அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் கோகிலாவின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • மீண்டும் தரமற்ற பெயிண்ட் அடிக்க வந்துள்ளீர்கள் என கேட்டதால் வேலைக்கு வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த மோதல் சம்பவம் ஏற்படுவதை அறிந்து அப்பகுதி பொதுமக்களும் ஒன்று திரண்டதால் தாளநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் பஞ்சாயத்து அங்கன்வாடி மையத்திற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெயிண்ட் அடிக்க டெண்டர் எடுத்தவர்கள் வந்த பொழுது, அவர்கள் கொண்டு வந்த பெயிண்ட் தரமற்றதாக இருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் சக்திவேல் உள்ளிட்டோர் அங்கன்வாடி மையத்திற்கு தரமான பெயிண்ட் அடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனால் பெயிண்ட் அடிப்பதை தடுத்தனர். மேலும் இதுகுறித்து கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு பின்பு நேற்று காலை பெயிண்ட் அடிப்பதற்காக வந்தவர்கள் தரமற்ற அதே பெயிண்ட் எடுத்து வந்து அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதை அடுத்து அங்கு வந்த மேலாண்மை குழு உறுப்பினர் சக்திவேல் ஏற்கனவே கட்டிடத்திற்கு தரமான பெயிண்ட் அடிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் உங்களுக்கு தகவல் தெரிவித்தும், மீண்டும் தரமற்ற பெயிண்ட் அடிக்க வந்துள்ளீர்கள் என கேட்டதால் வேலைக்கு வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த மோதல் சம்பவம் ஏற்படுவதை அறிந்து அப்பகுதி பொதுமக்களும் ஒன்று திரண்டதால் தாளநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மூன்று நாட்களுக்கு முன்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது.
    • பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

    பென்னாகரம்,  

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில் வழக்கறிஞர் தேவேந்திரன், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் செல்போனின் நன்மை தீமைகள், இணையவழி குற்றங்கள், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள், பெண் கல்வி, பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் இலவச சட்ட உதவி மைய தன்னார்வலர் சிவக்குமார், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும்.
    • ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர்சாந்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு சேர்க்கைக்கு முதல் கட்ட சேர்க்கை நடைபெற்றதில் தொழிற் பிரிவுகளில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கை 31.7.2023 வரை நடைபெறவுள்ளது.

    இதில் 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்சவரம்பு இல்லை.

    8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவில் கம்பியாள் (2வருடம்) பற்றவைப்பவர் (1வருடம்) இருக்க வேண்டும்.

    கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (கோபா) (1வருடம்), கட்டடபட வரைவாளர் (2வருடம்), மின்பணியாளர் (2வருடம்), பொருத்துநர் (2வருடம்) கம்மியர் மோட்டார் வண்டி (2வருடம்), கம்மியர் டீசல் (1வருடம்) மற்றும் இயந்திர வேலையாள் (2வருடம்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் சேர்க்கையில் கலந்துகொள்ளலாம். 2021ல் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம்.

    சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆதார் அட்டை, அலைபேசி எண்கள், மார்பளவு புகைப்படம்.-1, இ.மெயில் ஐடி மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ.50- மட்டும் மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்.

    பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிகணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும்.

    ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. மேலும் இந்நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக ரூ.1000- மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

    எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து தொழிற்பிரிவு கிடைக்கப்பெறாதவர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்ய தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு - 9445803042, 9361745995, 9894930508 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தற்போது மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழுவின் இரண்டாவது குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • வாக்காளர் அட்டை முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்துதல் போன்றவைகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடை பெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழலை உருவாக்கவும், தருமபுரி மாவட்ட நகர்ப்புறங்களின் திட்ட உருவாக்கத்தில் ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தவும், அரசு துறை களுக்கிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தவும், அடிப்படை வசதிகள் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தவும்,

    இதர அரசு துறைகளுடன் இணைந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்டங்களை சென்றடையவும், நகர்ப்புற ஏழைகள் மற்றும் சுகாதாரமற்ற பகுதிகளில் வாழும் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யும் நோக்கத்திற்காக வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழு 8.5.2022 அன்று மாவட்ட கலெக்டரால் உருவாக்கப்பட்டது.

    அதன்படி முதலாவது குழு கூட்டம் கடந்த 7.6.2022 அன்று நடத்தப்பட்டது. தற்போது மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழுவின் இரண்டாவது குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் பெறுவது, குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி செய்து தருவது, குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு பெறுவது மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டை முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடத்துதல் போன்றவைகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் விஜயமோகன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

      தருமபுரி,

      தருமபுரி கலெக்டர் சாந்தி ஆலோசனைப்படி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்போடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

      அதன் ஒரு பகுதியாக 50 பேருக்கு ஒன்றியத்துக்கு 10 பேர் வீதம் தேர்வு செய்து தருமபுரி கடைவீதி வர்த்தகர் மஹாலில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றது.

      உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால் மற்றும் குமணன் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பார்ட்னர் சக்சம் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் தாரணி பயிற்சி வழங்கினார்.

      மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் வழங்கும் உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரித்து தரமானதாக வழங்க வேண்டும்.

      இந்த மேற்பார்வையாளர் பயிற்சி மேம்படுத்தும் எனவும் பயிற்சியில் வழங்கப்படும் கருத்துக்களை நன்றாக உள்வாங்கி தங்கள் பள்ளி சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு எடுத்துரைத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியதுடன் உணவு தயாரிக்கும் உணவு பாக்கெட் மூலப்பொருள்களில் லேபிள்களை கண்காணித்து முடிவு தேதிக்கு முன்பாக உபயோகம் மேற்கொள்ள வேண்டும் எனவும், எலி, கரப்பான், பல்லி மற்றும் பூச்சிகள் அண்டாமல் கண்காணித்து உணவு மையத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கூறினார்.

      தருமபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் கூறுகையில் அனைத்து சத்துணவு மையங்களும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் முறையாக புதுப்பித்து மையங்களில் மாட்டி வைத்திருக்க வேண்டும்.

      முடிவில் சத்துணவு அமைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

      • 9 இரண்டு சக்கர வாகனங்களும் (கழிவு செய்யப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.
      • அந்த ஏலமானது வருகின்ற 17.8.2023 அன்று காலை தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

      தருமபுரி,

      தருமபுரி மாவட்ட காவல் துறையில் காவல் பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு காலாவதியான அரசு காவல் வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு, அதனை ஏலம் முறையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

      அந்த வகையில் ஏற்கனவே ஏலத்தில் விற்பனை செய்யப்படாமல் உள்ள 5 வாகனங்களுடன், தற்போது கழிவு செய்யப்பட்டுள்ள 14 வாகனங்களையும் சேர்த்து, 19 வாகனங்களான 2 ஈச்சர், 3 பொலேரோ, 1 டாடா சுமோ கிரான்டே, 1 டாடா ஸ்பேசியோ, 1 அம்பாஸ்டர், 2 எம்.எம் 540 ஜீப் மற்றும் 9 இரண்டு சக்கர வாகனங்களும் (கழிவு செய்யப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.

      அந்த ஏலமானது வருகின்ற 17.8.2023 அன்று காலை தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

      இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏலம் விடப்படும் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வாகனத்தை பார்வையிட அனுமதிக்கப்படும்.

      ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலம் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆயுதப்படை வாகனப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி முன்பணத் தொகையை வைப்புத் தொகையாக செலுத்தி, ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.

      அவ்வாறு வைப்புத் தொகையை செலுத்த தவறியவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏலம் எடுத்து 30 நிமிடத்தில் பணம் செலுத்தாதவர்களின் ஏலம் ரத்து செய்யப்பட்டு, அந்த வாகனத்தை மறு ஏலம் விடுப்படும்.

      மேலும், பணம் கட்டத் தவறியவரின் வைப்பீட்டுத் தொகையை திருப்பி தர இயலாது. ஏலம் முடிந்து 30 நிமிடங்களில் பணம் செலுத்தி வாகனத்தை பெற்றுச் செல்ல வேண்டும்.

      • முதல் நாள் கொடியேற்றத்துடன் சனத்குமார் நதியிலிருந்து கங்கை பூஜை உடன் அம்மனுக்கு பால்குடம் எடுத்து தீ மிதித்தல் நடந்தன.
      • கோட்டை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து கூழ் ஊற்றுதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

      மாரண்டஅள்ளி,

      தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி இ.பி. காலனியில் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலில் 4-ம் ஆண்டு ஆடி மாத திருவிழா நடைபெற்றது.

      மூன்று நாட்கள் கொண்ட திருவிழாவையொட்டி முதல் நாள் கொடியேற்றத்துடன் சனத்குமார் நதியிலிருந்து கங்கை பூஜை உடன் அம்மனுக்கு பால்குடம் எடுத்து தீ மிதித்தல் நடந்தன.

      அன்று இரவு அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

      இதைத் தொடர்ந்து ஊர் மண்டு மாரியம்மன் மற்றும் கோட்டை முனியப்பனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

      இதையடுத்து கோட்டை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து கூழ் ஊற்றுதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

      விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.

      இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் கோவில் நிர்வாகிகள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

      • எம்.பி. செந்தில்குமார் தனது எம்.பி. நிதியிலிருந்து புதிய ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துக் கொடுத்தார்.
      • எம்.பி. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மாணவிகளிடையே உரையாற்றினார்.

      மாரண்டஅள்ளி,

      தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் படிப்பு திறனை அதிகரிக்கவும், கல்வித்திறனை மேம்படுத்தவும், எம்.பி. செந்தில்குமார் தனது எம்.பி. நிதியிலிருந்து புதிய ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துக் கொடுத்தார். அதன் திறப்பு விழா நடைபெற்றது.

      இதில் எம்.பி. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மாணவிகளிடையே உரையாற்றினார்.

      இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்க சரவணன், தலைமை ஆசிரியை சுமதி மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      • மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் ஆகிய அருவிகளில் செம்மண் நிறத்தில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
      • ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை காரணமாக மெயின் அருவில் செல்லும் பாதையை மாவட்ட நிர்வாகத்தினர் பூட்டுபோட்டு அடைத்தனர்.

      ஒகேனக்கல்:

      கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

      தொடர் மழை காரணமாக கர்நாடாகவில் உள்ள கபினி அணைக்கு 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று சரிந்து 21,107 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடிக்கு இருப்பதால் கபினி அணையின் முழு கொள்ளளவான 84 அடியின் நீர்மட்டம் இன்று 82.27 அடியாக எட்டியுள்ளது. இதன்காரணமாக கபினி அணையில் இருந்து உபரி நீரை 20 ஆயிரம் கனஅடி அளவில் திறந்து விடப்பட்டுள்ளது.

      கே.ஆர்.எஸ். அணையில் இன்று காலை நிலவரப்படி 33,600 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கே.ஆர்.எஸ். அணைக்கும் தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 110.82 அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,362 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்து மொத்தம் 21,362 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

      கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 26-ந் தேதி மாலை இருமாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடைந்தது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஒகேனக்கல்லில் நேற்று காலை 16,500 கன அடியாகவும், மாலையில் 18,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக உயர்ந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

      இதனால் அங்குள்ள மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் ஆகிய அருவிகளில் செம்மண் நிறத்தில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு கடந்த 26-ந் தேதி நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்ததால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று 3-வது நாளாகவும் பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

      ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதாலும், இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

      ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை காரணமாக மெயின் அருவில் செல்லும் பாதையை மாவட்ட நிர்வாகத்தினர் பூட்டுபோட்டு அடைத்தனர். இதனால் மெயின்அருவிக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

      இதேபோன்று காவிரி ஆற்றிலும் யாரும் இறங்கி விட கூடாது என்பதற்காக தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

      நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளான முதலைபண்ணை, ஊட்டமலை, ராணிப்பேட்டை, நாடார்கொட்டாய், கூத்தப்பாடி ஆகிய பகுதிகளிலும், காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளிலும் வாகனத்தில் ஒலிப்பெருக்கியை கட்டி சென்று பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

      • பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் யானை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தரு ளினார்.
      • தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.

      தருமபுரி, 

      ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள அன்னை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்றது.

      விழாவையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றது.

      பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் யானை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தரு ளினார். இதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.

      பின்னர் ஆனந்த நடராஜர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சோடச உபசாரம், வேத பாராயணம், பஞ்ச புராண பாராயணம் மற்றும் மஹா தீபாராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது.

      இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

      ×