என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • மஞ்சமேடு அரசு பள்ளியில் அப்துல் கலாமின் நினைவு நாளை யொட்டி கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் புன்னகை சமூக நல அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே மஞ்சமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் புன்னகை சமூக நல அறக்கட்டளை நிறுவனர் நாகராணி, வெங்கடேசன், ஈச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வெள்ளையன், ஓய்வு பெற்ற மாவட்ட தீயணைப்பு அலுவலர் மதியழகன், மஞ்சமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர், உதவி ஆசிரியர் சாந்தி, மக்கள் நல பணியாளர் காமாட்சி, கொசு ஒழிப்பு பணியாளர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சின்னமணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தேசிய கல்வி கொள்கை- 2020 அமலாக்கத்தின் 3-வது ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.
    • பள்ளியில் மாணவர்களுக்கு புதிய தேசிய கல்வி கொள்கையின் படி கல்வி கற்றுத் தரப்படுகிறது.

    தருமபுரி

    தருமபுரி செட்டிக்கரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்வி கொள்கை- 2020 அமலாக்கத்தின் 3-வது ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.

    விழாவுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி தேசிய கல்வி கொள்கை மற்றும் அதன் பயன்கள் பற்றி படக்காட்சி உடன் விளக்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், தற்போது நாடு முழுவதும் 1250 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளில் மூன்று பள்ளிகள் என மொத்தம் 1253 கேந்திரிய வித்யாலயாக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றன.கடந்த 2022-23 கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு சேர்க்கை வயது 6 ஆக மாற்றியமைக்கப்பட்டது. அடித்தள நிலைகள் பால்வாட்டிகா, முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகள் 5 ஆண்டுகள் ஆகும். 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆயத்த நிலை முன்று வருடமாகவும், 6 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மூன்று வருடமாகவும், 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்கு வருடம் என 12 வருடங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கு புதிய தேசிய கல்வி கொள்கையின் படி கல்வி கற்றுத் தரப்படுகிறது.

    மேலும் பள்ளி ஆசிரியகளின் திறமை மேம்பாட்டுக்காக 50 மணி நேர பயிற்சி கொடுக்கபடுகிறது.

    புதிய பாட திட்டத்தை திறம்பட செயல்படுத்த தேவையான அறிவு சார்ந்த பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் படி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஒடசல்பட்டி புதூரில் ரூ.33.60 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
    • புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமையில் பூமிபூஜை நடந்தது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம் மணியம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒடசல்பட்டி புதூரில் ரூ.30.60 லட்சம் மதிப்பில் புதூர் மாரியம்மன் கோவில் முதல் சுடுகாடு வரை புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலை மையில் பூமிபூஜை நடந்தது.

    இதில் துணை செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா சரவணன், ஆண்டி கவுண்டர், மாவட்ட அமைப்புசார ஒட்டுனர் சங்க அமைப்பாளர் வடிவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், பாண்டுரங்கன், குமரவேல், சின்னதுரை, பச்சியப்பன், மதன்பாலாஜி உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று அதை கடைகளில் மாட்டி வைக்க வேண்டும்.
    • முகாமில் 50-க்கும் மேற்பட்ட உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக பாலக்கோடு அறிவு திருக்கோவில் மனவளக்கலை பயிற்சி மன்ற வளாகத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெற, மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெறும் முகாம் அனைத்து வணிகர் சங்க தலைவர் முத்து, செயலாளர் சரவணன், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

    இதற்கு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானு சுஜாதா, அவர்கள் தலைமை வகித்து பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்களும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று அதை தங்கள் நிறுவனங்களின் நிலையங்களில் கடைகளில் நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைக்க வேண்டும். மேலும் முறையாக காலாவதி தினத்திற்கு முப்பது தினங்களுக்கு முன்பாக புதுப்பித்து கொள்ளுதல் அவசியம் என தெரிவித்தார்.

    இம் முகாமில் 50-க்கும் மேற்பட்ட உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிய முறையில் பதிவேற்றப்பட்டு , உரிய ஆய்வுக்கு பின் சான்றிதழ்களை இணையதள முகவரியிலோ அல்லது உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடிவில் வணிகர் சங்க பொருளாளர் மாணிக்கம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

    • பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை யொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    தருமபுரி நகரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஸ்ரீ அஷ்டபுஜ துர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் பூப்பந்தல் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதே போல் தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை உழவு தெரு மகா மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில், இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவில், ஒட்டப்பட்டியில் உள்ள சக்தி பீடம் மாரியம்மன் கோவில் ,அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது.

    விழாவையொட்டி அந்தந்த கோவில்களில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புதிய போலிஸ் இன்ஸ்பெக்டராக பாலசுந்தரம் பொறுப்பு ஏற்று கொண்டார்.
    • ராமநாதபுரம் தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தா பாலசுந்தரம் ஒகேனக்கல்லுக்கு மாறுதலாகி வந்துள்ளார்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வந்தார்.

    இந்தநிலையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த மகேந்திரன் திருச்செங்கோடு டவுன் காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டடார்.

    இந்நிலையில் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டராக பாலச்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராமநாதபுரம் தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடதக்கது.

    பணியிட மாறுதலாகி நேற்று ஒகேனக்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பாலசுந்தரம் பொறுப்பேற்றுக்கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார். அருகில் இருந்த காவலர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறினர்.

    • பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.
    • 1000-த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்து அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    தருமபுரி,

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.

    அதன் ஒரு கட்டமாக, தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி நகரம், நல்லம்பள்ளி, இண்டூர், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூர்,, சின்னம்பள்ளி, பி.அக்ரகாரம், காரிமங்கலம், பெரியாம்பட்டி, வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்து அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    சாலை மறியல் போராட்டங்களில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செந்தில், பாரிமோகன், மாநில துணைத் தலைவர் பாடிசெல்வம், மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர், அணி, துணை, பொறுப்பாளர்களும், தொண்டர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் பலர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • 18 மாணவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
    • 14 வேட்பாளர்களுக்கான சின்னங்களை ஒதுக்கி, 266 மாணவ, மாணவிகள் வாக்களித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த உம்மியம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 340-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 10 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவ, மாணவிகளுக்கு கல்வியோடு, வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு கல்வி முறைகளை கற்பிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர் மன்ற தேர்தல் நடத்தி, தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டும், 14 துறை அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிப் பணிகளை பிரித்து கொடுத்து பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளி மாணவர் தலைவர்களை தேர்ந்தெடுக்க மாணவர் மன்றத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கலோடு தொடங்கியது. இதில் 18 மாணவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் மூன்று மாணவர்களின் மனுக்களில், சிறு தவறு ஏற்பட்டதால், அவைகள் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒருவர் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை பள்ளி மாணவர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு, பள்ளியிலேயே நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவிற்கு வாக்குச்சாவடியில், வாக்குச்சாவடி அலுவலர்கள், முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 14 வேட்பாளர்களுக்கான சின்னங்களை ஒதுக்கி, 266 மாணவ, மாணவிகள் வாக்களித்தனர்.

    தொடர்ந்து இந்த வாக்குகள் எண்ணப்பட்டு மாணவர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இதனை அடுத்து பதவியேற்பு விழாவில் மாணவர் மன்ற தலைவர் துணைத் தலைவர்களோடு 14 துறை அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். இதில் 14 துறை அமைச்சர்களுக்கு தனித்தனியாக துறைகள் ஒதுக்கி, பள்ளிப் பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு தேர்தல் ஆணையம் நடத்துகின்ற தேர்தலை போன்று விதிமுறைகளை பின்பற்றி, முறைப்படி தேர்தல் நடத்துவதால், பள்ளி மாணவர்களுக்கு தேர்தலின் முக்கியத்துவம் புரிகிறது. அதேபோல் தேர்தலில் வாக்களிக்கிறோம் என்று மகிழ்ச்சி அடைகின்றனர்.

    மேலும் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப ்படுபவர்களின் பணி என்னென்ன என்பதை மாணவர்களுக்கு பள்ளிப்பருவத்திலே தெரியப்படுத்த முடியும் என்பதற்காக தேர்தல் விதிமுறைகளின் படி இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

    இந்த தேர்தல் அலுவலராக தலைமையாசிரியர் நரசிம்மன், வாக்குசாவடி அலுவலர்களாக ஆசிரியர் ராதாகிருஷ்ணன், எழிலரசி, நிர்மலா ரோஸ்லின், நிர்மலா தேவி, புஷ்பா, ஜெயபாரதி, செண்பகம், ரோசலின், மேனகா, ஷர்மிளா உள்ளிட்ட ஆசிரியைகள் பணியாற்றினர்.

    • காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • 10 பஸ்களில் இருந்து ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.

     காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்கள் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பயன்படு த்துவதுடன் அதிகமான ஒலியுடன் சினிமா பாடல்களை ஒலிபரப்பி வருவதாக பொதுமக்கள், பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    இதை அடுத்து ஆர்டிஓ தாமோதரன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பயன்படுத்திய 10 பஸ்களில் இருந்து ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதிக ஒலியுடன் சினிமா பாடல்கள் ஒலிபரப்புவது அதி வேகமாக பஸ்களை இயக்குவது போன்றவை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். 

    • வாசனை திரவங்களால் அபிஷேகம் நடைபெற்றது,
    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .

    தருமபுரி,

    தருமபுரி ஸ்ரீ கோட்டை கல்யாண காமாட்சி கோவிலில் ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், பழம், இளநீர், பன்னீர், தேன், தயிர் சந்தனம், மஞ்சள், குங்குமம், மற்றும் வாசனை திரவங்களால் அபிஷேகம் நடைபெற்றது,

    பின்னர் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கல்யாண காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .

    ஏராளமான பெண்கள் இந்த அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    • சட்டவிரோத மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க வனத்துறை, வருவாய்துறை மற்றும் மின்சார துறை அலுவலர்கள் இணைந்து ரோந்து பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
    • சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டி ருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி விவசாய வயல்களில் சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டம், தீர்த்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராம்குமார், கவுரன் ஆகியோர் வயலில் அமைத்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காட்டுப்பன்றி உயிரிழந்தது.

    இதுதொடர்பாக வன உயிரின பாதுகாப்பு சட்ட த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    சட்டவிரோத மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க வனத்துறை, வருவாய்துறை மற்றும் மின்சார துறை அலுவலர்கள் இணைந்து ரோந்து பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    விவசாய வயல்களில் மனிதர்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டி ருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மின் இணைப்பு மின்வாரிய த்தால் துண்டிக்கப்படும்.

    வனவிலங்குகளை வேட்டை யாடுதல், வன விலங்குகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடி க்கையை மேற்கொள்ள ப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பா.ம.க. ஒன்றிய தலைவர் வெங்கடேசன் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.
    • முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு அளித்து தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி னார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பா.ம.க. ஒன்றிய தலைவர் வெங்கடேசன் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை அவர்களுடைய நண்பர்கள் உறவினர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

    மேலும் பிறந்தநாளை முன்னிட்டு எர்ரப்பட்டி பகுதியில் உள்ள சேவாலயா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு அளித்து தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி னார்.

    விழாவில் ஓ.கே.எஸ் சுப்பிரமணி, மற்றும் நார்த்தம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் அன்பு கார்த்திக், பசுமை தாயகம் ஒன்றிய தலைவர் கண்ணதாசன் மற்றும் பா.ம.க.வை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×