தருமபுரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்த காட்சி.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்த காட்சி.
Published on

தருமபுரி,

தருமபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை யொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

தருமபுரி நகரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஸ்ரீ அஷ்டபுஜ துர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் பூப்பந்தல் அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல் தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை உழவு தெரு மகா மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில், இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவில், ஒட்டப்பட்டியில் உள்ள சக்தி பீடம் மாரியம்மன் கோவில் ,அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது.

விழாவையொட்டி அந்தந்த கோவில்களில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com