என் மலர்
தர்மபுரி
- கிளைசெயலாளர் நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
- மாநிலசெயலாளர் ராஜசேகர் மாநாட்டு துவக்கவுரையாற்றினார்.
தருமபுரி,
பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்றோர் அமைப்பு மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட மாநாடு தருமபுரி பாரதிபுரம் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட தலைவர் கோபாலன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பருதிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கிளை தலைவர் கந்தசாமி சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.கிளைசெயலாளர் நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
மாநிலசெயலாளர் ராஜசேகர் மாநாட்டு துவக்கவுரையாற்றினார். ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலாளர் சையது இத்ரீஸ், மாநில சிறப்பு அழைப்பாளர் நாராயணசாமி, மாநில உதவி செயலாளர் பாபு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அகில இந்திய பொருளாளர் உமாராணி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிரிதரன், அஞ்சல்துறை ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
- இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள பச்சமுத்து கலை அறிவியல் கல்லூரியில் முடிவடைந்தது.
- இந்த கோப்பை தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.
தருமபுரி,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்தும் 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டிகள் வருகிற 3.8.2023 முதல் 12.8.2023 வரை சென்னையில் நடைபெற உள்ளது.
7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய நாடுகளின் அணிகள் பங்கு பெறுகிறது.
இப்போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் கலந்து கொள்ள உள்ளார். 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் விளையாட்டிற்கு தமிழ்நாடு அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம் பல கோடிகள் செலவிடப்பட்டு செயற்கை புல் மைதானம் உலக தரத்திற்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது.
7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசு கோப்பை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் பாஸ் தி பால் நிகழ்ச்சியை கடந்த 20-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பைக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தருமபுரி நகரில் இந்த பரிசு கோப்பை ஆக்கி வீரர்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள பச்சமுத்து கலை அறிவியல் கல்லூரியில் முடிவடைந்தது.
அங்கு இந்த பரிசு கோப்பையை கலெக்டர் சாந்தி வரவேற்று பெற்றுக் கொண்டார். இந்த கோப்பை தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, கோவிந்தசாமி, வெங்கடேஷ்வரன், தருமபுரி மாவட்ட கபடி கழக தலைவர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. மாதப்பன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, முன்னாள் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், தருமபுரி மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் மாரியப்பன், செயலாளர் குமார் மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தருமபுரி சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மறைத்து வைத்திருந்த கத்தியால் பூஞ்சோலையின் மார்பில் குத்திவிட்டு விஸ்வநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தருமபுரி:
தருமபுரி அருகே பெரியகுரும்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூஞ்சோலை (வயது 60), விவசாயி. இவருடைய உறவினர் விஸ்வநாதன் (63). இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டை ஒட்டி உள்ள நிலத்திற்கு செல்லும் வழித்தட பாதை தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று மாலையில் பூஞ்சோலை அந்த குறிப்பிட்ட வழித்தட பாதையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த விஸ்வநாதன் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
இதனிடையே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூஞ்சோலையின் மார்பில் குத்திவிட்டு விஸ்வநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் நிலைதடுமாறி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பூஞ்சோலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த மதிகோன் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார், பூஞ்சோலையின் உடலை கைப்பற்றி அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய விஸ்வநாதனை போலீசார் நேற்று இரவு கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
- சிறார் சிறுமிகளுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி தருமபுரி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
- இச்சிறார் மற்றும் சிறுமியர் மன்ற புதுப்பித்தலுக்கு உறுதுணையாக இருந்த குழுவினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கபட்டது.
தருமபுரி,
சேலம் சரகத்தில் மொத்தம் 41 காவல் சிறுமி மற்றும் சிறார் மன்றங்கள் உள்ளன. இதில் 1372 சிறுமி மற்றும் சிறார்கள் பயன் பெற்று வருகின்றனர். கடந்த 2012 ம் ஆண்டில் துவங்கப்பட்டு ஒவ்வொரு சிறுமி மற்றும் சிறார் மன்றத்திற்கும் ஆண்டிற்கு ரூ.66,000 வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை ரூ.75,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
காவல் சிறுமி மற்றும் சிறார் மன்றங்கள் கொரோனா காலத்தில் இந்த மன்றங்களுக்கான முழு பலனைபெற இயலவில்லை. இந்நிலையில் மீண்டும் சிறார் மன்றத்தை புதுபிக்கும் வகையில் தருமபுரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் சிறார் சிறுமிகளுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி தருமபுரி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேலம் சரக காவல் துறை துணை தலைவர் ராஜேஷ்வரி கலந்து கொண்டு தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 10 சிறுமி மற்றும் சிறார் மன்றங்களில் உள்ள 282 மாணவ ,மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகளின் போது அணிந்து கொள்ள ஏதுவாக டி சட்டை, பள்ளிக்கு புத்தகம் கொண்டு செல்லும் கைப்பைகள் ஆகியவைகளை தனியார் பங்களிப்பளிப்புடன் வழங்கினார்.
மேலும் விளையாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் ஆங்கிலப் புலமை போன்ற பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் 41 சிறார் மன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யபட்டன.
சுகாதார முகாம் மற்றும் தோல் சிகிச்சை தவிர பொங்கல்விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் இச்சிறார் மற்றும் சிறுமியர் மன்ற புதுப்பித்தலுக்கு உறுதுணையாக இருந்த குழுவினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கபட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேலம் சரக காவல் துறை துணை தலைவர் ராஜேஷ்வரி இதன் மூலம் மிகவும் நலிவடைந்த மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிறார்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடாமல் கல்வி மற்றும் முன்னேற்றத்தின் மீது நாட்டத்தை செலுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி வரப்படுகிறது.
இதனால் சமூக சிந்தனையையும், நல்ல குடிமக்களுக்கான தகுதியையும் குழந்தை பருவத்திலேயே வளர்த்தெடுக்க முன்னுரிமை கொடுத்து சேலம் சரகத்தில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சேலம் சரக காவல் துறை துணை தலைவர் ராஜேஷ்வரி தெரிவித்தார்.
- சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் 3 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்ற போது அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
- மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன். துணி வியாபாரியான இவரது மனைவி மீனாட்சி (வயது46). இவர்களுக்கு 3 பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள பெருகோப்பண பள்ளியை சேர்ந்த மீனாட்சியின் அன்ணன் கோகுலகிருஷ்ணன் (47). இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அடிக்கடி மாட்லாம்பட்டியில் உள்ள தங்கை மீனாட்சியிடம் பணம் வாங்கி செலவு செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 25-ந் தேதி கோகுலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களான சென்னையை சேர்ந்த லோகநாதன் (32), தாமோதரன் (20) ஆகியோருடன் மாட்லாம்பட்டியில் உள்ள தங்கையின் வீட்டிற்கு சென்று ஓகேனக்கல் செல்ல வேண்டும் அதற்கு பணம் கொடு என கேட்டுள்ளார்.
என்னிடம் பணம் இல்லை எனவும், இனிமேல் பணம் கேட்டு இங்கு வராதே என மீனாட்சி கூறியதால் ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் நண்பர்களுடன் சேர்ந்து மீனாட்சியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர்.
மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் 3 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்ற போது அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து படுகாயம் அடைந்த அந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர கிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மீனாட்சி காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மழை காலங்களில் இரவு முழுவதும் தூங்காமல் மேற்கூறையை பார்த்தபடியே விடிய, விடிய அமர்ந்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
- கான்கிரீட் பெயர்ந்து விழுந்து விட்டதால் மழைக்காலங்களில் தண்ணீர் நேரடியாக வீட்டினுள் ஒழுகி வருகிறது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி பகுதியில் அருந்ததியர் காலனி அமைந்துள்ளது.
இங்கு குடியிருக்கும் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு அரசின் தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 26 குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
அப்போது கட்டப்பட்ட வீடுகள் தற்போது அதிக அளவில் சேதமடைந்து அனைத்து வீடுகளிலும் மேல் தளங்கள் தளர்வடைந்து உட்புறம் உள்ள கான்கிரீட்டுகள் பெயர்ந்து இடிந்து விழுந்து வருகின்றன.
கட்டப்பட்ட 26 குடியிருப்புகளும் ஒரே சமயத்தில் இடிந்து விழுந்து வருகின்றன. இதனால் அந்த வீடுகளின் குடியிருக்கும் பொதுமக்கள் சமையல் செய்யும் பொழுது கான்கிரீட் பூச்சுகள் மற்றும் சிமெண்ட் மண் உள்ளிட்டவை பாத்திரங்களில் விழுந்து விடுவதால் சுகாதாரமான சமையல் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து விட்டதால் மழைக்காலங்களில் தண்ணீர் நேரடியாக வீட்டினுள் ஒழுகி வருகிறது.
திடீரென மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுவதால் பாதுகாப்பற்ற நிலையில் வீடுகள் இருப்பதால் அங்குள்ள மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வாசலிலும், தெருக்களிலும் இரவில் தூங்க வேண்டிய அவல நிலை உள்ளது.
மேலும் மழை காலங்களில் வீட்டில் பாதுகாப்பு இல்லாததால் இரவு முழுவதும் தூங்காமல் மேற்கூறையை பார்த்தபடியே விடிய, விடிய அமர்ந்திருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வருவதால் குடியிருக்க முடியாத சூழலில் ஏற்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால் தற்பொழுது முழுமையாக சேதம் அடைந்துள்ள 26 வீடுகளையும் இடித்து விட்டு புதிய குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.
- 164 நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியின சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
- இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எளிதாக அரசுப்பணியில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் 164 நரிக்குறவர் இன மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலிருந்து பழங்குடியினர் வகுப்பிற்கு மாற்றப்பட்டு பழங்குடியின சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் தெரிவித்து ள்ளார்.
இது குறித்து சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு அரசால் நரிக்குறவர், குருவிக்காரன் சமுதாயத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழை அரசால் வெளியிட ப்பட்ட நெறி முறைகளை பின்பற்றி வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 8 நரிக்குறவர் இனமக்களுக்கும், அரூர் வட்டத்திற்குட்பட்ட பச்சினாம்பட்டி கிராமத்தில் 115 நரிக்குறவர் இனமக்களுக்கும், பெரிய பன்னி மடுவு கிராமத்தில் 38 நரிக்குறவர் இனமக்களுக்கும், மாம்பட்டி கிராமத்தில் 2 நரிக்குறவர் இனமக்களுக்கும், மத்தியம்பட்டி கிராமத்தில் 1 நரிக்குறவர் இனத்தை சார்த்தவருக்கும் என மொத்தம் 164 நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியின சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசால் மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து தற்பொழுது பழங்குடியினர் பிரிவில் நரிக்குறவர்களுக்கு சாதிச்சான்று வழங்குவதால் ஏராளமான சலுகைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் நரிக்குறவர் இன மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயின்று போட்டித்தேர்வுகளில் பங்கேற்று, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் தங்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எளிதாக அரசுப்பணியில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தருமபுரி, அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மண்டல துணை வட்டாட்சியர்களும் தங்களது வட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நபர்கள் ஏற்கனவே குருவிக்காரன், நரிக்குறவன் சாதிச்சான்று அட்டையாக பெறப்பட்டிருப்பின் அதை ரத்து செய்து இ-சாதிச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசால் வழங்கப்பட்டுள்ள இந்நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குழந்தைகள் நீண்ட தூரம் சென்று பஸ் நிலையம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தனர்.
- கே.பி.அன்பழகன் அங்கன்வாடி மையத்தினை ரிப்பன் வெட்டி, தொடங்கி வைத்தார்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைப்பெற்றது.
பாலக்கோட்டில் தீர்த்தகிரி நகர், இரயில்வே கேட், தக்காளி மண்டி, உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள குழந்தைகள் நீண்ட தூரம் சென்று பஸ் நிலையம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தனர்.
குழந்தைகள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால் அண்ணாநகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்க கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்களின் தீவிர முயற்சியால் தமிழக அரசு அண்ணாநகர் பகுதிக்கு புதிய அங்கன்வாடி மையம் ஒதுக்கீடு செய்தது.அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் இன்று பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் புதிய அங்கன்வாடி மையத்தினை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனாஇதாயத்துல்லா, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், ஒன்றியகுழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் கவிதாசரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் மாது,
கவுன்சிலர்கள் சிவசங்கரி ரவி, ஜெயந்தி மோகன், சரவணன், சாதிக், திமுக கிளை செயலாளர்கள் மோகன், காமராஜ், சரவணன், முருகேசன், பெரியசாமி, ராஜீ, வேலு, கணேசன், சக்திவேல், சம்பத், பாண்டியன் விஜயன் உள்ளிட்ட திராளனோர் கலந்து கொண்டனர்.
- தருமபுரியில் பரபரப்பு தொடர் செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்
- போலீசார் விசாரணையில் கைதான வாலிபர் பல்வேறு குற்றசம்பங்களில் ஈடுபட்டதாக பலதிடுக்கிடும் தகவலை கூறினார்
தருமபுரி,
தருமபுரி உழவர் சந்தையில் அடிக்கடி செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக காய்கறி வாங்கும் பொதுமக்கள் டவுன் போலீசாரிடம் புகார் கொடுத்த வண்ணமாக இருந்தனர்.
இந்த நிலையில் உழவர் சந்தையில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை கண்காணிக்க உழவர் மற்றும் வேளாண் துறை சார்பில் 3 பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தனர். அந்த கண்காணிப்பு குழு தொடர்ந்து உழவர் சந்தையை கண்காணித்து வந்தது. அப்போது ஒரு வாலிபர் தினமும் கையில் பையை வைத்து கொண்டு காய்கறி வாங்குவது போல் வாங்கி சென்று வந்தார்.
இந்த நிலையில் தருமபுரியை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியரான விஜயகுமார் இன்று காலை உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்தார். அப்போது அவரது செல்போனை அந்த வாலிபர் திருடி சென்றார். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளாண் துறை குழுவினர் மற்றும் காய்கறி வியாபாரிகள் அந்த நபரை கையும், களவுமாக பிடித்து டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து விஜயகுமார் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
செல்போன் திருடிய வாலிபர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் (வயது20) என்பது தெரியவந்தது. ராகுல் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் மற்றும் நகை ஆகியவை திருடி அதில் வரும் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தது தெரியவந்தது.
இதேபோன்று தருமபுரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசியல் கட்சி பிரமுகரின் விலையுர்ந்த செல்போன் ஒன்று மாயமானது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த செல்போன் ஐஎம்ஐ எண்ணை வைத்து டிராக் செய்தபோது அந்த செல்போனை திருடியவர் தருமபுரியில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு பயணித்து, அதன்பின்னர் மேற்கு வங்காளம் சென்றது தெரியவந்தது. அங்கு இருந்து வேலையில்லாத வாலிபர்களை இதற்காக தாயார்படுத்தி தமிழகத்திற்கு வந்து செல்போன், மோட்டார் சைக்கிள், ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணம் திருடுவது வாடிக்கையாக உள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து கைதான ராகுலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் உழவர் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மஞ்சள் பை மற்றும் மரக்கன்றுகளைக் கொடுத்து கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
- பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்ப்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தருமபுரி,
கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை பற்றிய வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பை மற்றும் மரக்கன்றுகளைக் கொடுத்து கோஷங்களை எழுப்பி ஊர்வலம் சென்றனர்.
பள்ளியின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் ஆகியோர் மஞ்சள்பை மற்றும் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம், மாணவ, மாணவி மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்ப்பதை பற்றியும் மரக்கன்றுகளை நடுவதன் அவசியத்தை பற்றியும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்து வத்தைப் பற்றியும் எடுத்து ரைத்தனர்.
இந்த ஊர்வலர்த்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப் பாளர் புவனேஷ்வரி தலைமையில் அறிவியல் துறை ஆசிரியை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஊர்வலத்தில் ஒருங்கிணைப்பளர்கள் குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீணா பங்கேற்றனர்.
- ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் திட்ட பணியாளராக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
- அதிகாரிகள் பணம் பெற்று கொண்டு பயனாளர்களை தேர்வு செய்வதாக மகளிர் திட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தில் கிராமப்புறங்களில் ஒரு கிராமத்திற்கு நான்கு பேர் என 251 ஊராட்சிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் திட்ட பணியாளராக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மகளிர் திட்ட பெண்கள் மூலம் ஊராட்சிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனரை கணக்கெடுப்பு செய்து அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்க ளான ஆடு, மாடு பெறுவதற்கான பயனாளர் தேர்வு மற்றும் கிராமங்களுக்கு தேவையான திட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்வது மகளிர் திட்ட பெண்களின் முக்கிய பணியாக உள்ளது.
இவர்கள் அப்பகுதியில் உள்ள பயனாளர்களை தகுதியின் அடிப்படையில் சரியாக தேர்ந்தெடுத்து வட்டார அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவ லகங்களுக்கு அனுப்பி வைத்து அவர்க ளுக்கு அரசின் திட்டங்களை சரியாக சென்று அடைவதற்கு வழிவகை செய்து வருகின்ற னர்.
குறிப்பாக மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களை அதிகாரிகள் தாங்கள் சொல்லும் பயனாளர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் சிலரிடம் பணம் பெற்று கொண்டு பயனாளர்களை தேர்வு செய்வதாக மகளிர் திட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பல்வேறு பிரச்சனைகளை மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் சந்தித்து வருகின்றனர்.
கிராமங்களில் மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளம் வரவில்லை என்றால் பெரும்பாலும் பலர் வேலையை விட்டு நின்று விடுகின்றனர். ஒரு வருடம் வரை வேலை செய்திருந்தாலும் அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில்லை.
தருமபுரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் மிரட்டல்கள் மற்றும் இது போன்ற பிரச்சனைகளை தீர்த்து பாதுகாப்பு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் மிரட்டல் ஒரு பக்கம் இருக்க பாதுகாப்பில்லாத சூழலில் தற்கொலை செய்து கொள்வேன் என மகளிர் திட்ட பெண் பணியாளர்கள் கண்ணீர் விடும் ஆடியோக்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப பதிவேற்ற திட்டத்தை தொடங்கி வைத்து மகளிர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்கு தருமபுரி மாவட்டத்தில் விதைத்தால் தமிழகமெங்கும் விளையும் என தெரிவித்திருந்தார்.
அவ்வாறு இருக்கையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அச்சுறுத்தலும் பாதுகாப்பு இல்லாத சூழலும் ஏற்பட்டு ள்ளது.
- சி.ஐ.டி.யு. விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜிவா தலைமை வகித்தார்.
தருமபுரி,
பழங்குடியின பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மதவாத கும்பலை கைது செய்ய வலியுறுத்தியும், மதவாத கும்பலின் வன்முறையை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு. விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜிவா தலைமை வகித்தார். மாநில செயலாளர் நாகராசன் , மாவட்ட துணைத்தலைவர் அங்கம்மாள், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளி சங்கத்தின் மாநில செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர்.






