என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கையை கொல்ல முயன்ற அண்ணன் உள்பட 3 பேர் கைது
    X

    தங்கையை கொல்ல முயன்ற அண்ணன் உள்பட 3 பேர் கைது

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் 3 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்ற போது அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
    • மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன். துணி வியாபாரியான இவரது மனைவி மீனாட்சி (வயது46). இவர்களுக்கு 3 பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள பெருகோப்பண பள்ளியை சேர்ந்த மீனாட்சியின் அன்ணன் கோகுலகிருஷ்ணன் (47). இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அடிக்கடி மாட்லாம்பட்டியில் உள்ள தங்கை மீனாட்சியிடம் பணம் வாங்கி செலவு செய்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 25-ந் தேதி கோகுலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களான சென்னையை சேர்ந்த லோகநாதன் (32), தாமோதரன் (20) ஆகியோருடன் மாட்லாம்பட்டியில் உள்ள தங்கையின் வீட்டிற்கு சென்று ஓகேனக்கல் செல்ல வேண்டும் அதற்கு பணம் கொடு என கேட்டுள்ளார்.

    என்னிடம் பணம் இல்லை எனவும், இனிமேல் பணம் கேட்டு இங்கு வராதே என மீனாட்சி கூறியதால் ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் நண்பர்களுடன் சேர்ந்து மீனாட்சியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர்.

    மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் 3 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்ற போது அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து படுகாயம் அடைந்த அந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர கிகிச்சை அளித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மீனாட்சி காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×