search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் மகளிர் திட்ட பெண் பணியாளர்களை மிரட்டும் அதிகாரிகள்? ஆடியோ வெளியானதால் பரபரப்பு
    X

    தருமபுரி மாவட்டத்தில் மகளிர் திட்ட பெண் பணியாளர்களை மிரட்டும் அதிகாரிகள்? ஆடியோ வெளியானதால் பரபரப்பு

    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் திட்ட பணியாளராக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • அதிகாரிகள் பணம் பெற்று கொண்டு பயனாளர்களை தேர்வு செய்வதாக மகளிர் திட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தில் கிராமப்புறங்களில் ஒரு கிராமத்திற்கு நான்கு பேர் என 251 ஊராட்சிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் திட்ட பணியாளராக பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    மகளிர் திட்ட பெண்கள் மூலம் ஊராட்சிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனரை கணக்கெடுப்பு செய்து அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்க ளான ஆடு, மாடு பெறுவதற்கான பயனாளர் தேர்வு மற்றும் கிராமங்களுக்கு தேவையான திட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்வது மகளிர் திட்ட பெண்களின் முக்கிய பணியாக உள்ளது.

    இவர்கள் அப்பகுதியில் உள்ள பயனாளர்களை தகுதியின் அடிப்படையில் சரியாக தேர்ந்தெடுத்து வட்டார அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவ லகங்களுக்கு அனுப்பி வைத்து அவர்க ளுக்கு அரசின் திட்டங்களை சரியாக சென்று அடைவதற்கு வழிவகை செய்து வருகின்ற னர்.

    குறிப்பாக மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களை அதிகாரிகள் தாங்கள் சொல்லும் பயனாளர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் சிலரிடம் பணம் பெற்று கொண்டு பயனாளர்களை தேர்வு செய்வதாக மகளிர் திட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனால் பல்வேறு பிரச்சனைகளை மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் சந்தித்து வருகின்றனர்.

    கிராமங்களில் மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளம் வரவில்லை என்றால் பெரும்பாலும் பலர் வேலையை விட்டு நின்று விடுகின்றனர். ஒரு வருடம் வரை வேலை செய்திருந்தாலும் அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில்லை.

    தருமபுரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் மிரட்டல்கள் மற்றும் இது போன்ற பிரச்சனைகளை தீர்த்து பாதுகாப்பு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிகாரிகள் மிரட்டல் ஒரு பக்கம் இருக்க பாதுகாப்பில்லாத சூழலில் தற்கொலை செய்து கொள்வேன் என மகளிர் திட்ட பெண் பணியாளர்கள் கண்ணீர் விடும் ஆடியோக்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப பதிவேற்ற திட்டத்தை தொடங்கி வைத்து மகளிர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்கு தருமபுரி மாவட்டத்தில் விதைத்தால் தமிழகமெங்கும் விளையும் என தெரிவித்திருந்தார்.

    அவ்வாறு இருக்கையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அச்சுறுத்தலும் பாதுகாப்பு இல்லாத சூழலும் ஏற்பட்டு ள்ளது.

    Next Story
    ×