என் மலர்
உள்ளூர் செய்திகள்

மஞ்சமேடு அரசு பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
- மஞ்சமேடு அரசு பள்ளியில் அப்துல் கலாமின் நினைவு நாளை யொட்டி கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் புன்னகை சமூக நல அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே மஞ்சமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் புன்னகை சமூக நல அறக்கட்டளை நிறுவனர் நாகராணி, வெங்கடேசன், ஈச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வெள்ளையன், ஓய்வு பெற்ற மாவட்ட தீயணைப்பு அலுவலர் மதியழகன், மஞ்சமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர், உதவி ஆசிரியர் சாந்தி, மக்கள் நல பணியாளர் காமாட்சி, கொசு ஒழிப்பு பணியாளர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சின்னமணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






