என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    தருமபுரி அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமை வகித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஒன்றிணைந்து தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 7360 கெளரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    தகுதி உள்ள விரிவுரையாளர்கள் ஏராளமானவர்கள் பணியாற்றும் நிலையில் அண்ணா பல்கலையில் இருந்து மிகை பேராசிரியர்களை அரசு கல்லூரியில் பணியமர்த்தி யதை திரும்ப பெற வேண்டும்.

    தகுதி உள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யூஜிசி நிர்ணயித்துள்ள ஊதியம் ரூ.50 ஆயிரத்தை வழங்க வேண்டும். பணி அனுபவ காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில், முரளி, ஆண்டிச்சியம்மாள் உள்ளிட்ட தருமபுரி மண்டலத்திற்குட்பட்ட பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர் கல்லூரிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×