என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்கவேண்டும்
    X

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்கவேண்டும்

    • பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது.
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கி தினகூலியாக ரூ 600 வழங்கவேண்டும்

    தருமபுரி,

    உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பிரசார கூட்டம் நடை பெற்றது.

    இந்த கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார்.

    இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.ரேசன்முறையை பலப்படுத்தவேண்டும். தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 வழங்கவேண்டும்.

    நிரந்தர தன்மையுள்ள பணிகளில் காண்டிராக்ட் தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்கவேண்டும்.மோட்டார் வாகன சட்டத்திருத்தம் மின்சார வினியோக சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும்.சம வேலைக்கு சம ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. படித்த இளைஞர்களுக்கு தகுதிக் கேற்ற வேலை வழங்க வேண்டும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கி தினகூலியாக ரூ 600 வழங்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    தருமபுரியில் தொடங்கிய பிரசாரம் நல்லம்பள்ளி, நாகர்கூடல், பெரும்பாலை, பென்னாகரம், இண்டூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    Next Story
    ×