என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் ஒதுக்கீடு"

    • அமைப்பு சாரா நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு வாரிய பலன்களை உடனே வழங்க வேண்டும்
    • ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சி.முரளி தலைமை வகித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு முறைசாரா தொழிலாளர் நல வாரிய செயல்பாட்டை சீர்படுத்த கோரி சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மோட்டார் தொழி லாளர்கள் நலவாரிய செயல்பாட்டை சீர்படுத்த வேண்டும். நலவாரியத்தில் ஆன்லைன், ஆப்லைன் பதிவு முறையை சீர்படுத்த வேண்டும்.

    அமைப்பு சாரா நலவாரி யங்களுக்கு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கீடு செய்யவேண்டும். அமைப்பு சாரா நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு வாரிய பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி னர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சி.முரளி தலைமை வகித்தார்.

    இதில் மாநிலச் செயலாளர் சி.நாகராசன் மாவட்ட செயலாளர் பி.ஜிவா, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலாவதி, நாகராஜன் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஹானஸ்ட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×