என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் 38 பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • கள்ள சந்தையில் மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்தில் அரூர் கோட்டப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், பள்ளிப்பட்டி, கோபிநாதம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவல் துறை தலைவர் கே.ஜோஷி நிர்மல் குமார் , ஆய்வு மேற்கொண்டார்.

    போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் 38 பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை குறித்தும், அரூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர பாபுவிடம் கேட்டறிந்தார்.

    அதன்பிறகு அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் வாதி, பிரதிவாதிகளிடம் புகார்களை பெற்றுக்கொண்டு சரியான முறையில் அவர்களுக்கு உரிய மரியாதைகள் கொடுத்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் நாகலிங்கம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உடன் இருந்தனர்.

    • விழாவை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கானோர் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நிலை உள்ளது.
    • ஒகேனக்கல் பகுதியில் கழிப்பிட வசதி, , குடிநீர் வசதி, , அமருமிடம், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவானது வருகிற 2-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் பகுதிக்கு தருமபுரி, சேலம் ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கானோர் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நிலை உள்ளது.

    இதனால் ஒகேனக்கல் பகுதியில் கழிப்பிட வசதி, வாகன நிறுத்து மிடம், குடிநீர் வசதி, தற்காலிக பேருந்து நிலையம், அமருமிடம், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    காவிரி ஆற்றில் பாதுகாப்பாக நீராடுவது, கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, இளங்குமரன் ஆகியோர்கள் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வுகளின் போது ஊராட்சி செயலர் குமரன், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், துணைத் தலைவர் மணி, துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஏலகிரி அரசு பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 15 பள்ளிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் தொப்பூர் அரசு பள்ளி 4-வது இடத்தையும், கடத்தூர் அரசு பள்ளி 3-ம் இடத்தையும், சீந்தல்பாடி அரசு பள்ளி 2-ம் இடத்தையும், ஏலகிரி அரசு பள்ளி மாணவர்கள் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். இது தவிர 4 சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். மேலும் சிறந்த வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழக சேர்மன் பூக்கடை ரவி, நிர்வாகிகள் இளவரசன், டி.ஜி. மணி, மணிவண்ணன், செயலாளர் தங்கராஜ், இணை செயலாளர் நிர்மல் குமார், பயிற்சியாளர்கள் மாது வணங்காமுடி, ஜெயபால், ஜீவா, சசிகுமார், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
    • தருமபுரி அப்துல் கலாம் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.1,00,000 ரொக்க பணம் மற்றும் கோப்பையை வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்றது.

    இதற்கான இறுதிப் போட்டி கடத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதா–னத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் தருமபுரி அணி முதலி–டத்தையும், மாரண்டஹள்ளி அணி 2-ம் இடத்தையும், பென்னாகரம் அணி 3-ம் இடத்தையும், ஆலமரத்துப் பட்டி அணி 4-ம் இடத்தை யும் பிடித்தது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கும் விழா நடை–பெற்றது. விழாவுக்கு மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாம்பே சக்தி, பாலாஜி, சசிக்குமார், சதிஸ், செந்தமிழ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நிவேதா ஜெஷிகா ஆகியோர் முதலிடம் பெற்ற தருமபுரி அப்துல் கலாம் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.1,00,000 ரொக்க பணம் மற்றும் கோப்பையை வழங்கினார்கள்.

    இதேபோன்று ரூ.2,20,000 மதிப்புள்ள ரொக்க தொகை 2-ம், 3-ம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் 7 அணி–களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.
    • ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பாலக்கோடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.

    இதில் செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார். ஆலோசனை கூட்டத்தில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து பாலக்கோடு ஸ்தூபிமைதானம் முதல் கல்கூடஅள்ளி வரை கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பாலக்கோடு பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமத்து பணிகளை சீரமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.

    • கவிதா வீட்டில் வைத்திருந்த 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த தீச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி கவிதா (வயது45). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் சிதம்பரம். இவரது மனைவி மல்லிகா.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கவிதா வீட்டில் வைத்திருந்த 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோன்று மல்லிகா வீட்டில் வைத்திருந்த செல்போனையும் அந்த மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கவிதா மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மொரப்பூரை அடுத்த புதுபட்டியைச் சேர்ந்த குமார் மகன் குடியரசன் (21), அதே பகுதியைச் சேர்ந்த பீமாராவ் (26) ஆகிய 2 பேரும் சேர்ந்து 3 செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    • உறவினர்கள் வெங்கடேசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
    • மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    மொரப்பூர்:

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 62). விவசாயி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இவர் இன்று காலை தனது தோட்டத்தில் களை எடுக்கும் எந்திரத்தை வைத்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த எந்திரத்தில் கால்கள் மாட்டி கொண்டதால் உடல் முழுவதும் அந்த எந்திரத்தில் சிக்கியது. இதில் வெங்டேசன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் வெங்கடேசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து உறவினர்கள் மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்யா தனது கணவரிடம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறீர்களே? என்று கேட்டுள்ளார்.
    • வீட்டில் தனியாக இருந்த சிவா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே முனுசாமி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் சிவா (வயது23). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் சிவா, சத்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். அவரை கடந்த ஒருவருடத்திற்கு முன்பு சிவா திருமணம் செய்து கொண்டார். தற்போது சத்யா கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவா வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதுகுறித்து சத்யா தனது கணவரிடம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறீர்களே? என்று கேட்டுள்ளார்.

    இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சிவா மனவேதனையுடன் இருந்தார். இந்த நிலையில் கர்ப்பிணியான சத்யா மருத்துவ பரிசோதனைக்காக நேற்று பாலக்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிவா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சத்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று பார்த்தபோது அங்கு சிவா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த சத்யா தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து சத்யா மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சமபவ இடத்திற்கு வந்து சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளுகடை பஸ் நிறுத்தம் அருகே அவர் வரும்போது லாரி ஒன்று பின்னால் வந்து மோதியது.
    • வேலு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் வேலு (வயது32). கூலித்தொழிலாளியான இவர் நேற்று தோட்டவேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அவர் காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் உள்ள கள்ளுகடை பஸ் நிறுத்தம் அருகே அவர் வரும்போது லாரி ஒன்று பின்னால் வந்து மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேலு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகலவறிந்து காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.

    • மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பொது நிலத்தில் தனி நபர் குடிசை அமைத்துள்ளார்.
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வீரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பொது நிலத்தில் தனி நபர் குடிசை அமைத்துள்ளார்.

    இந்த குடிசை அமைத்தது குறித்து அரசு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • முனியப்பன் நேற்று தனது தோட்டத்தில் உள்ள குடியசை கொட்டாகையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது63). விவசாயியான இவருக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியடைந்து வந்தார். இந்த நிலையில் முனியப்பன் மனைவியை மாடு முட்டியதில் காயம் அடைந்து எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இதனால் மனவேதனையில் இருந்த முனியப்பன் நேற்று தனது தோட்டத்தில் உள்ள குடியசை கொட்டாகையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து முனியப்பன் மகன் குமார் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரி நகர பஸ் நிலைய ஆக்கிரமிப்பு பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • நகரப் பகுதியை நோக்கி வரும் பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்குவதற்கு வழி இன்றி தவித்து வருகின்றனர்.

    தருமபுரி, 

    தருமபுரி நகராட்சிக்குட்பட்ட டவுன் பஸ் நிலையத்தை பூ வியாபாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் ஆக்கிரமிப்பால் பஸ்சுக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வெட்ட வெளியில் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    தருமபுரி நகராட்சி உட்பட்ட பகுதியில் புறநகர் பஸ் நிலையம், நகர பஸ் நிலையம் என்று தனித்தனியாக இயங்கி வருகிறது. இதில் நகர பஸ்நிலையம் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை பரப்பரப்பாக காணப்படும்.

    தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், காரிமங்கலம், தொப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தருமபுரி நகரப் பகுதிக்கு அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வெளியூருக்கு பயணம் செல்லும் பயணிகள் என்று பல்வேறு தரப்பினர் டவுன் பஸ்சில் பயணம் செய்து நகர பஸ் நிலையத்தை வந்து அடைகின்றனர்.

    பின்னர் டவுன் பஸ் நிலையத்திலிருந்து தருமபுரி அரசு கலைக் கல்லூரி, காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மாட்டிலாம் பட்டியில் உள்ள சட்டக் கல்லூரி, செட்டி கரை அரசு பொறியியல் கல்லூரி, பைசுஅள்ளியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி, கடகத்தூர் பகுதியில் உள்ள தொழில் பயிற்சி கல்லூரி, செட்டிகரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறி பள்ளி கல்லூரிக்கு செல்கின்றனர்.

    இவ்வாறு இருக்கையில் தருமபுரி மாவட்டத்தில் கிராமம் பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வரும் பூக்களை டவுன் பஸ்நிலையத்தில் வியாபாரிகள் பெற்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இதன்காரணமாக பூவியாபாரிகள் டவுன் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்பதற்காக அமைக்கப்பட்ட பிளாட்பாரம் மற்றும் பஸ் நிறுத்துமிடம் என பகுதிகளை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருவதால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நிற்பதற்கு கூட இடமின்றி வெட்ட வெளியில் நின்று அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக மழையோ, வெயிலோ அதிகமாக இருக்கும் காலங்களில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர் கூறும் போது:-

    தருமபுரி நகர பஸ் நிலைய ஆக்கிரமிப்பு பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தருமபுரி மாவட்டத்தில் கிராமங்களில் இருந்து வரும் டவுன் பஸ்கள் உள் நுழைவதற்கே இடம் இன்றி ஊர்ந்து செல்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், நகரப் பகுதியை நோக்கி வரும் பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்குவதற்கு வழி இன்றி தவித்து வருகின்றனர்.

    மேலும் நகர பஸ்நிலையத்திலிருந்து பள்ளி, கல்லூரி செல்வதற்கு பஸ்சுக்காக காத்திருக்கும் போது மாணவ, மாணவிகள் நிற்பதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    டவுன் பஸ் நிலையத்ைத ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பூ வியாபாரம் செய்வதற்கு பூ வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் ன சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×