என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்போன் திருடிய 2 பேர் கைது
- கவிதா வீட்டில் வைத்திருந்த 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த தீச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி கவிதா (வயது45). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் சிதம்பரம். இவரது மனைவி மல்லிகா.
இந்த நிலையில் சம்பவத்தன்று கவிதா வீட்டில் வைத்திருந்த 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோன்று மல்லிகா வீட்டில் வைத்திருந்த செல்போனையும் அந்த மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கவிதா மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மொரப்பூரை அடுத்த புதுபட்டியைச் சேர்ந்த குமார் மகன் குடியரசன் (21), அதே பகுதியைச் சேர்ந்த பீமாராவ் (26) ஆகிய 2 பேரும் சேர்ந்து 3 செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.






