search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவல் துறை தலைவர் திடீர் ஆய்வு
    X

    அரூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவல் துறை தலைவர் திடீர் ஆய்வு

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் 38 பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • கள்ள சந்தையில் மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்தில் அரூர் கோட்டப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், பள்ளிப்பட்டி, கோபிநாதம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவல் துறை தலைவர் கே.ஜோஷி நிர்மல் குமார் , ஆய்வு மேற்கொண்டார்.

    போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் 38 பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை குறித்தும், அரூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர பாபுவிடம் கேட்டறிந்தார்.

    அதன்பிறகு அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் வாதி, பிரதிவாதிகளிடம் புகார்களை பெற்றுக்கொண்டு சரியான முறையில் அவர்களுக்கு உரிய மரியாதைகள் கொடுத்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், அரூர் (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் நாகலிங்கம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உடன் இருந்தனர்.

    Next Story
    ×