மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி: ஏலகிரி அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

ஏலகிரி அரசு பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்தனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த ஏலகிரி அரசு பள்ளி அணிக்கு பரிசு கோப்பைகளை வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த ஏலகிரி அரசு பள்ளி அணிக்கு பரிசு கோப்பைகளை வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 15 பள்ளிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் தொப்பூர் அரசு பள்ளி 4-வது இடத்தையும், கடத்தூர் அரசு பள்ளி 3-ம் இடத்தையும், சீந்தல்பாடி அரசு பள்ளி 2-ம் இடத்தையும், ஏலகிரி அரசு பள்ளி மாணவர்கள் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். இது தவிர 4 சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். மேலும் சிறந்த வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழக சேர்மன் பூக்கடை ரவி, நிர்வாகிகள் இளவரசன், டி.ஜி. மணி, மணிவண்ணன், செயலாளர் தங்கராஜ், இணை செயலாளர் நிர்மல் குமார், பயிற்சியாளர்கள் மாது வணங்காமுடி, ஜெயபால், ஜீவா, சசிகுமார், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com