search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா ஏற்பாடுகள் குறித்து  அதிகாரி ஆய்வு
    X

     விழா ஏற்பாடுகளை பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரி ஆய்வு

    • விழாவை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கானோர் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நிலை உள்ளது.
    • ஒகேனக்கல் பகுதியில் கழிப்பிட வசதி, , குடிநீர் வசதி, , அமருமிடம், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவானது வருகிற 2-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் பகுதிக்கு தருமபுரி, சேலம் ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கானோர் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நிலை உள்ளது.

    இதனால் ஒகேனக்கல் பகுதியில் கழிப்பிட வசதி, வாகன நிறுத்து மிடம், குடிநீர் வசதி, தற்காலிக பேருந்து நிலையம், அமருமிடம், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    காவிரி ஆற்றில் பாதுகாப்பாக நீராடுவது, கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, இளங்குமரன் ஆகியோர்கள் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வுகளின் போது ஊராட்சி செயலர் குமரன், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், துணைத் தலைவர் மணி, துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×