என் மலர்
தர்மபுரி
- இரு அணை களில் இருந்து தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
- நேற்று மாலை 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி அதே அளவு நீடித்து வந்தது.
]ஒகேனக்கல்,
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ். கபினி அணை களுக்கு நீர்வரத்து அதி கரித்தது.
இதனால்அந்த இரு அணை களில் இருந்து தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று மாலை 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி அதே அளவு நீடித்து வந்தது.
ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரண மாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழு வதை பார்த்து ரசித்தனர். மேலும் மெயின் அருவி, சீனி அருவி ஆகிய அருவி களில் குளித்தும் மகிழ்ந்த னர்.
இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்ற னர்.
பரிசல் இயக்க தடை
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள தால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 7-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
- பலத்த காற்று அடித்தால் கொட்டகை காற்றில் பறந்து சென்று கீழே விழுந்து விடும் போல் உள்ளன.
- மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மாட்டுக் கொட்டகையை மாற்றித் தர வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்பாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம் மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசின் மாட்டு கொட்டகை திட்டத்தில் எனக்கு 2 மாடுகள் கட்டும் அளவில் புதிய கொட்டகை அமைக்க ரூ.ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீடு ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 25 கிலோ தரமற்ற பைப்புகள் 4 சிமெண்ட் சீட்டுகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து சுமார் ரூ.16 ஆயிரம் செலவில் பெயரளவிற்கு கொட்டகை அமைத்து ள்ளனர்.
பலத்த காற்று அடித்தால் கொட்டகை காற்றில் பறந்து சென்று கீழே விழுந்து விடும் போல் உள்ளன. அந்த கொட்டகையில் மாடுகளை கட்டுவதற்கு பயமாக உள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மாட்டுக் கொட்டகையை மாற்றித் தர வேண்டும்.
இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், பஞ்சாயத்து அலுவல கத்திலும் முறையிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் சாந்தி தற்போது அமைக்கப்பட்டுள்ள மாட்டு கொட்டகையை ஆய்வு செய்து தரமான மாட்டு கொட்ட கையை அமைத்து தர நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
- தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
- எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சேத்த னஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. இவர் கே.என்.சவுளூரில் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து வந்தார். இந்த சிறுமி தருமபுரியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் உறவினர்கள் வீடுகளில் சிறுமியை தேடிபார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.
- சம்ப வத்தன்று அந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு காப்பகத்தில் தூங்க சென் றார்.
- காலையில் எழுந்து பார்த்தபோது தூங்க சென்ற சிறுமி காணவில்லை.
தருமபுரி,
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாதையன்கொட்டாய் ஆண்டிகவுண்டர் நகரைச் சேர்ந்தவர் 15வயது சிறுமி.
இவர் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கோவிலூரில் உள்ள பெண்கள் சிறார் காப்ப கத்தில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்ப வத்தன்று அந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு காப்பகத்தில் தூங்க சென் றார். காலையில் எழுந்து பார்த்தபோது தூங்க சென்ற சிறுமி காணவில்லை. உடனே காப்பகத்தில் இருந்த நிர்வாகிகள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக் காததால், அவர் மாயமானது தெரியவந்தது.
சிறுமி மாயமான விவகாரம் குறித்து அவரது பெற்றோருக்கு காப்ப கத்தினர் தகவல் தெரிவித் தனர். இதுகுறித்து சிறுமி யின் தாயார் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
- இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 150 விவசாயிகள் மேற்பட்ட 800 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.
- ஏலத்தில் ரூபாய் 55 லட்சம் பருத்தி ஏலம் போனது என செயலர் அறிவழகன் தெரிவித்தனர்.
அரூர்,
தருமபுரி மாட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இந்த அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள்.
இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 150 விவசாயிகள் மேற்பட்ட 800 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இந்த வாரம் எம்சி 5 ரக பருத்தி குவிண்டால் ரூ. 7,266 முதல் 7,696 ஏலம் போனது. நேற்றைய. ஏலத்தில் ரூபாய் 55 லட்சம் பருத்தி ஏலம் போனது என செயலர் அறிவழகன் தெரிவித்தனர்.
- தருமபுரி - அரூர் இடையே இருவழி சாலை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- சாலை பணிகளை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்கு நர் கோதண்டராமன் சாலை யின் நீளம், அகலம், கனம், சரிவு மட்டம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
தருமபுரி,
தருமபுரி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத் திற்கு உட்பட்ட 2021-22-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தருமபுரி - அரூர் இடையே இருவழி சாலை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலை பணிகளை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்கு நர் கோதண்டராமன் சாலை யின் நீளம், அகலம், கனம், சரிவு மட்டம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர் செல்வம், சேலம் நெடுஞ்சா லைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் வத்சலா வித்யானந்தி, தருமபுரி நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு கோட்ட பொறியாளர் நாகராஜி, உதவிக்கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உடன் உடனிருந்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
- விழாவையொட்டி பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி நகரம், எஸ்.வி.சாலையில் அமைந்துள்ள பூவாடைக்காரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாக சாலை பூஜைகளும், அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாக சாலையில் இருந்து மேள தாளங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து பூவாடைக்காரி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
- கபடி, எறிபந்து மற்றும் கோகோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி சரக அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.
முதல் நாளில் மாணவர்களுக்கான போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். கபடி, எறிபந்து மற்றும் கோகோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் 14 வயது முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதேபோன்று 2-து நாளில் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இப்போட்டியை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மான்விழி தொடங்கி வைத்தார்.
மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் 14 வயது முதல், 17 வயதுடைய 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் தங்கவேல், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ரேணுகாதேவி, உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2 நாட்களில் நடந்த போட்டிகளில் மொத்தம் 550 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சரக அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தருமபுரி ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் மூலம் 422 டன் யூரியா, 437 டன் டி.ஏ.பி. மற்றும் 446 டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 1,305 டன் உர மூட்டைகள் வந்தது.
- விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரை யின்படி பயிருக்கு தேவை யான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீதுபெற்று பயன் பெறலாம்.
தருமபுரி,
தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து தருமபுரி ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் மூலம் 422 டன் யூரியா, 437 டன் டி.ஏ.பி. மற்றும் 446 டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 1,305 டன் உர மூட்டைகள் வந்தது.
இந்த உரத்தை தருமபுரி மாவட்டத்தில் உள்ள உரக் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை வேளாண்மை உதவி இயக்குனர் தேன் மொழி ஆய்வு மேற்கொண் டார்.
ஆய்வின்போது தருமபுரி ஸ்பிக் விற்பனை அலுவலர் அர்சுணன், ஈஸ்வரன் மற்றும் மொத்த விற்பனை யாளர் பார்த்திபன் ஆகி யோர் உடன் இருந்தனர்.
இதுகுறி்த்து வேளாண் இணை இயக்குனர் விஜயா கூறியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கு 2955 டன் யூரியா, 2282 டன் டி.ஏ.பி மற்றும் 1373 டன் பொட்டாஷ், 7612 டன் காம்ப்ளக்ஸ், 397 டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவ சாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரை யின்படி பயிருக்கு தேவை யான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீதுபெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தருமபுரி பிடமனேரி ஏரிக்கரையில் டவுன் போலீசார் ரோந்து சென்றனர்.
- 100 கிராம் மதிப் புள்ள கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்தனர்.
மாரண்ட அள்ளி,
தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார்.
அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமபுற பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது மாரண்ட அள்ளி அடுத்த கரகூர்
பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்ததில் கரகூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது50) என்ப தும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.1000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மாரண்டஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம் அளிக்கும் படியாக பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணை நடத்தியதில் அவர் கரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்குமணி (40) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இரு ந்த 100 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல் தருமபுரி பிடமனேரி ஏரிக்கரையில் டவுன் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் பையில் 700 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்து இருந்ததும், அவர் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ராஜாகரட் (25), என்பதும் தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- தருமபுரி கோட்டத் திற்குட்பட்ட சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் சாரம் நிறுத்த ப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி கோட்டத் திற்குட்பட்ட சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் வெண்ணாம்பட்டி குடியிருப்பு, குமாரசாமிபேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் ரோடு, மாந்தோப்பு, இ.ஜெட்டிஅள்ளி, அப்பாவு நகர், ரெயில் நிலையம், அதகப்பாடி, இண்டூர், சோம்பட்டி, சோகத்தூர், பங்குநத்தம், பேடரஅள்ளி, நேதாஜி பைபாஸ் ரோடு, நெசவாளர் நகர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அசல் மற்றும் தலா 3 எண்ணிக்கை நகல்கள் மற்றும் மார்பளவு புகை ப்படங்கள் 6 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.
- மாணவர் சேர்க்கை தொடர்பான காலியிட விவரங்களை www.gacdpi.ac.in என்ற இணைய தளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நாளை மறு நாள் 23-ம் தேதி இளம் நிலை வகுப்புகளுக்கு உள்ள காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கவுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கண்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அரசு கலைக் கல்லூரி யில் 2023-2024-ம் கல்வி யாண்டில் இளம்நிலை பாடப்பிரிவுகளில் காலி யாக உள்ள சில சேர்க்கை இடங்களுக்கு, வரும் 23-ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைப்பெற உள்ளது.
எனவே, ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்க பெறாத மாணவ, மாணவியர் கலந்தாய்வில் பங்கேற்று பயன்பெறலாம்.
சேர்க்கைக்கு வரும் போது விண்ணப் படிவம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் தலா 3 எண்ணிக்கை நகல்கள் மற்றும் மார்பளவு புகை ப்படங்கள் 6 ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.
மேலும், கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு களுக்கு ரூ.2 ஆயிரத்து 980, அறிவியல் பாடப்பிரிவு களுக்கு ரூ.3,000, பி.காம்(சிஏ), பி.எஸ்சி, கணினி அறிவியல், பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 100 எடுத்து வர வேண்டும்.
அதேப்போல, மாணவர் சேர்க்கை தொடர்பான காலியிட விவரங்களை www.gacdpi.ac.in என்ற இணைய தளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






