என் மலர்
உள்ளூர் செய்திகள்

தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட மாட்டு கொட்டகையையும், கலெக்டரிடம் புகார் மனு கொடுக்க வந்த விவசாயி செல்வத்தை படத்தில் காணலாம்.
தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட மாட்டு கொட்டகையை மாற்றி தர விவசாயி கோரிக்கை
- பலத்த காற்று அடித்தால் கொட்டகை காற்றில் பறந்து சென்று கீழே விழுந்து விடும் போல் உள்ளன.
- மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மாட்டுக் கொட்டகையை மாற்றித் தர வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்பாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம் மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசின் மாட்டு கொட்டகை திட்டத்தில் எனக்கு 2 மாடுகள் கட்டும் அளவில் புதிய கொட்டகை அமைக்க ரூ.ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீடு ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 25 கிலோ தரமற்ற பைப்புகள் 4 சிமெண்ட் சீட்டுகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து சுமார் ரூ.16 ஆயிரம் செலவில் பெயரளவிற்கு கொட்டகை அமைத்து ள்ளனர்.
பலத்த காற்று அடித்தால் கொட்டகை காற்றில் பறந்து சென்று கீழே விழுந்து விடும் போல் உள்ளன. அந்த கொட்டகையில் மாடுகளை கட்டுவதற்கு பயமாக உள்ளது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மாட்டுக் கொட்டகையை மாற்றித் தர வேண்டும்.
இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், பஞ்சாயத்து அலுவல கத்திலும் முறையிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் சாந்தி தற்போது அமைக்கப்பட்டுள்ள மாட்டு கொட்டகையை ஆய்வு செய்து தரமான மாட்டு கொட்ட கையை அமைத்து தர நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.






