மகளிர் சிறார் காப்பகத்தில் இருந்து சிறுமி மாயம்

சம்ப வத்தன்று அந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு காப்பகத்தில் தூங்க சென் றார். காலையில் எழுந்து பார்த்தபோது தூங்க சென்ற சிறுமி காணவில்லை.
மகளிர் சிறார் காப்பகத்தில் இருந்து சிறுமி மாயம்
Published on

தருமபுரி,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாதையன்கொட்டாய் ஆண்டிகவுண்டர் நகரைச் சேர்ந்தவர் 15வயது சிறுமி.

இவர் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கோவிலூரில் உள்ள பெண்கள் சிறார் காப்ப கத்தில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்ப வத்தன்று அந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு காப்பகத்தில் தூங்க சென் றார். காலையில் எழுந்து பார்த்தபோது தூங்க சென்ற சிறுமி காணவில்லை. உடனே காப்பகத்தில் இருந்த நிர்வாகிகள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக் காததால், அவர் மாயமானது தெரியவந்தது.

சிறுமி மாயமான விவகாரம் குறித்து அவரது பெற்றோருக்கு காப்ப கத்தினர் தகவல் தெரிவித் தனர். இதுகுறித்து சிறுமி யின் தாயார் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com