என் மலர்
கடலூர்
சிதம்பரம் அம்மா உணவகத்தில் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா ஆய்வு செய்தார்.
சிதம்பரம்:
சிதம்பரம் அரசு சித்தா மருத்துவத்துறை மற்றும் நகராட்சி சார்பில் அம்மா உணவகத்தில் நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் தயாரிக்கப்பட்டு, நகராட்சி பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா, அம்மா உணவகத்துக்கு ஆய்வு நடத்துவதற்காக சென்றார். அங்கு தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீரை குடித்தார். மேலும் உணவகத்தில் தயார் செய்யப்படும் உணவுகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது அரசு சித்த மருத்துவர் அர்ச்சுனன் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதுகுறித்து ஆணையாளர் சுரேந்திரஷா கூறுகையில், சிதம்பரத்தில் 33 வார்டுகளில் உள்ள பொதுமக்கள், வங்கிகள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுகாதார ஆய்வாளர் பாக்கியநாதன் தலைமையில், மேற்பார்வையாளர்கள் காமராஜ், பாஸ்கர், சக்கரவர்த்தி, தில்லைநாயகம், ராஜாராம், சுதாகர், ஆனந்தகுமார், கவுசல்யா ஆகியோர் கொண்ட குழுவினர் கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து 5 நாட்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படும் என்றார்.
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஜூலை 1-ந்தேதி காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5-வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.
இவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று ஒருவரும், இன்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்தார். விபத்து தொடர்பாக முதன்மை பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் என என்.எல்.சி. நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.
நெய்வேலி என்எல்சி பாய்லர் வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது
நெய்வேலி:
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாய்லர் வெடித்து 7 பேர் பலியான சம்பவத்தில் முதன்மை பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் என என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த என்.எல்.சி. நிரந்தர தொழிலாளி சிவக்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வழிபாட்டு தலங்களுக்கு பழம் மற்றும் பூக்கள் கொண்டு வரக்கூடாது என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
கடலூர்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ள, கிராம பகுதிகளில் அமைந்துள்ள வழிபாட்டு தலங்களை திறந்து பொதுமக்கள் வழிபாடு நடத்த அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் கிராம பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவில், பள்ளி வாசல், தேவாலயங்களின் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறுகையில், அனைத்து வழிபாட்டு தல நிர்வாகிகளும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் குறித்து அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை முறையாக பின்பற்றி வழிபாடு நடத்திட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட நோய் தொற்று மண்டலங்களில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கிடையாது.
65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வழிபாட்டு தலங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபட வேண்டும். அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் வழிபாட்டு தலங்களுக்கு தேங்காய், பழங்கள், பூக்கள் கொண்டு வரக்கூடாது. சிலை ஊர்வலத்திற்கும் அனுமதி கிடையாது என்றார்.
இதில் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, மற்றும் வழிபாட்டு தல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக-கேரள எல்லையில் தடுப்புச்சுவரை தாண்டி செல்ல ‘குட்டி’க்கு தாய் யானை பயிற்சி அளித்தது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையில் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும். குறிப்பாக காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் மட்டுமே தமிழக-கேரள மலைப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பெரும்பாலும் மலைப்பாதை வெறிச்சோடி காணப்படுவதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் தமிழக-கேரள எல்லையில் உள்ள மலைப்பாதையில் கீழ்நாடுகாணி அருகே தேன்பாறா என்ற இடத்தில் சரக்கு லாரிகள் சென்று கொண்டு இருந்தன. அப்போது பிறந்து 2 மாதங்களே ஆன குட்டியானையுடன் 2 காட்டுயானைகள் மலைப்பாதையை கடந்தன. உடனே சரக்கு லாரிகளை டிரைவர்கள் ஆங்காங்கே நிறுத்தினர்.
இதற்கிடையில் சாலையோர தடுப்புச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் குட்டியானை தவித்தது. இதை கண்ட தாய் யானை, தடுப்புச்சுவரை தாண்டி செல்வது எப்படி? என்று செயல்விளக்கம் மூலம் பயிற்சி அளித்தது. இதை கவனித்த குட்டியானை, முன்னங்கால்களை தடுப்புச்சுவரில் தூக்கி வைத்து, ஏற முயன்றது. ஆனால் முடியவில்லை.
உடனே தடுப்புச்சுவரின் மீது தாய் யானை ஏறி நின்றது. இதை பார்த்து குட்டியானையும் முன்னங்கால்களை தடுப்புச்சுவர் மீது தூக்கி வைத்து, பின்னங்கால்களை தூக்கி மீண்டும் ஏற முயன்றது.
எனினும் ஏற முடியாமல் தவித்தது. உடனே தாய் யானை துதிக்கையால் குட்டியானையை தூக்கிவிட்டு தடுப்புச்சுவரை தாண்டி செல்ல உதவியது. தொடர்ந்து குட்டியுடன் 2 காட்டுயானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன. இந்த நெகிழ்ச்சி காட்சியை தங்களது செல்போனில் வீடியோ எடுத்த லாரி டிரைவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. காட்டுயானைகள் மலைப்பாதையை கடந்த சென்றதும், டிரைவர்கள் தங்களது லாரிகளை இயக்கி சென்றனர்.

சிதம்பரம் அருகே கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு செய்தார்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அக்கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று மதியம் மீதிகுடி கிராமத்திற்கு வந்து, அங்கு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அங்கிருந்த மருத்துவ அலுவலர்களிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் கேட்டறிந்தார்.
மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், தாசில்தார் ஹரிதாஸ், சமூக நல தாசில்தார் பலராமன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அமுதா, வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.

பண்ருட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள அரசடிக்குப்பம் மேற்கு தெருவில் வசித்து வந்தவர் கமலநாதன் (வயது 70). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதியடைந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கமலநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி எல்.இ.பி. தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). இவர் காட்டுமன்னார்கோவிலில் உள்ள சுயஉதவி குழுவில் தவணை தொகை வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவரும் காட்டுமன்னார்கோவில் அருகே ஆட்கொண்டநத்தம் கிராமத்தை சேர்ந்த பிரியங்கா(22) என்பவரும் காதலித்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் மீனலோட்சினி என்ற பெண் குழந்தை இருந்தது.
கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. பாலமுருகனின் குழந்தைக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பிறந்த நாள் விழா நடைபெற இருந்தது. இதனை சிறப்பாக கொண்டாட பிரியங்கா முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் பாலமுருகனுக்கும், பிரியங்காவுக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியங்கா, தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி பாலமுருகன் வீட்டில் இருந்து வெளியே சென்றதும், அவர் தனது குழந்தை மீனலோட்சினியின் கழுத்தில் சேலையை கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரும் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள தொழிலாளர்கள், முல்லை நகரில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் டாக்டர் டேவிட், சிவக்குமார், பார்த்தசாரதி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் நடேசன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவரது மனைவி விஜயலட்சுமி. கணவன்-மனைவி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டை நண்பரான அதேபகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் பராமரித்து வருகிறார். நேற்று காலை விஜயபாஸ்கர் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஸ்டாலினுக்கும், சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் மற்றும் ஸ்டாலினின் உறவினர் காந்திதாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோவில் இருந்த 3½ பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
என்எல்சி பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நெய்வேலியில் நாளை கடையடைப்பு நடத்தப்படுகிறது.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் நேற்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நெய்வேலியில் நாளை கடையடைப்பு நடத்தப்படுகிறது. வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் கடைகளை அடைத்து, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளனர். மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக சந்திரசேகர் சாகமூரி பொறுப்பேற்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த அன்புசெல்வன் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக நில சீர்த்திருத்த துறை இயக்குனராக பணியாற்றி வந்த சந்திரசேகர் சகாமுரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற் கான அரசாணையை தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்தார்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்ட சந்திரசேகர் சாகமூரி நேற்று தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
அதையடுத்து புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, தாசில்தார்கள் செல்வக்குமார், கீதா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
சந்திரசேகர் சாகமூரி ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். அவருக்கு தெலுங்கு, தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும். கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தமிழக பணிக்கு நியமிக்கப்பட்டார். 2011-12-ல் கோபிச்செட்டிப்பாளையத்தில் சப்-கலெக்டராகவும், அதன்பிறகு அரியலூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார்.
கடலூர் தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது 1801-ம் ஆண்டு ஹாரி டெய்லர் என்பவர் முதல் கலெக்டராக இருந்தார். அதன்படி பார்த்தால் கடலூர் மாவட்டத்தின் 131-வது கலெக்டராக சந்திரசேகர் சாகமூரி பொறுப்பேற்றுள்ளார். 30.9.1993-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் தென்னாற்காடு வள்ளலார் மாவட்டமாக உதயமானது. இதன்படி பார்த்தால் கடலூர் மாவட்ட 21-வது கலெக்டராக சந்திரசேகர் சாகமூரி பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.