என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,480 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,480 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மற்றும் சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தமிழக அரசு, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு பி.எல். விடுப்பிற்காக வழங்கிய தொகையை தொழிலாளர்களுக்கு வழங்காமல் காலம் கடத்தியதோடு, இனி இந்த தொகைக்கு பதிலாக விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள் என தெரிவிக்கும் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிர்வாகத்தை கண்டிப்பது, சட்டவிரோதமாக பல தொழிலாளர்களை சென்னைக்கு பணியிட மாறுதல் செய்வதை கைவிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க நிர்வாகி மணிபாலன் தலைமை தாங்கினார். சுதாகர் முன்னிலை வகித்தார். இதில் பரமதயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ப.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை பொருளாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நா.வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். இதில் மகேஸ்வரி உள்பட ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கடலூரில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,379 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 930 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க மாவட்டத்தில் 78 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிர தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடலூர் தாலுகாவில் மொத்தம் உள்ள 45 வார்டுகளில், 25 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. இந்த கட்டுப்பாட்டு பகுதிகளில் தினசரி நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முன்கள பணியாளர்கள் மூலம் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இது தவிர வீடு வீடாக சென்று யாருக்காவது சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கடலூர் சின்னப்பன் தெருவில் வசிக்கும் ஒருவர், ஆணைக்குப்பம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்த ஒருவர், வெள்ளிமோட்டான் தெருவில் வசிக்கும் 2 பேர், தேவனாம்பட்டினம் கபிலன் நகரை சேர்ந்த ஒருவர், செல்லாங்குப்பத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பிளிச்சீங் பவுடர் போடப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில், முன்கள பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
சிதம்பரம்:
இதில் சிதம்பரம் நகர தி.மு.க. துணை செயலாளர் மார்க்கெட் பாலசுப்பிரமணியன், வர்த்தக சங்க தலைவர் சதீஷ் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், காய்கறி வியாபாரிகள், மீன் மார்க்கெட் ஒப்பந்ததாரர்கள், வர்த்தக சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நகர காவல்துறை சார்பில், கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நகர இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறுகையில், சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஆட்டோ டிரைவர்கள் அதிக பயணிகளை ஏற்றக்கூடாது. ஆட்டோக்களில் 2 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது. டிரைவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும்.
அதுபோல் மீன் மார்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அவர்களுக்கு ஆட்டோ டிரைவர்கள் அறிவுரை வழங்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம் என்றார்.
இதில் சிதம்பரம் நகர தி.மு.க. துணை செயலாளர் மார்க்கெட் பாலசுப்பிரமணியன், வர்த்தக சங்க தலைவர் சதீஷ் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், காய்கறி வியாபாரிகள், மீன் மார்க்கெட் ஒப்பந்ததாரர்கள், வர்த்தக சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் தவணையைவசூல் செய்வது குறித்து நடவடிக்கைக எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறியுள்ளார்.
கடலூர்:
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெற்ற கடனுக்கான தவணையை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் 6 மாதங்களுக்கு வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதையும் மீறி பொதுமக்களிடம் தனியார் நிதி நிறுவனங்கள் கடனுக்கான தவணையை கட்டாயமாக வசூலித்து வருகிறது. இது தவிர வட்டிக்கும் வட்டி போட்டு வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கட்டாயமாக தவணையை வசூலிப்பதாக இது வரை 2 புகார்கள் வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆலோசனை கூட்டத்தை விரைவில் நடத்த உள்ளேன் என்றார்.

சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சேத்தியாத்தோப்பு, பின்னலூர், எறும்பூர், ஒரத்தூர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி, முடிகண்டநல்லூர், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சகொல்லை, மிராளூர், மருதூர், பி.உடையூர் மற்றும், வளையமாதேவி, முகந்தெரியாங்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டுமுளை, ஓட்டிமேடு, பெருந்துறை, க.புத்தூர், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகரஆலம்பாடி, பி.ஆதனூர், உ.அகரம், தர்மநல்லூர், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.1½ லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் மகன் அப்துல் கபார் (வயது 33). இவர் சிதம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் புதுச்சேரி சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்துல்கபார் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அதில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 5½ பவுன் நகையை காணவில்லை. அப்துல் கபார் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களில், வாலிபர்கள் சிலர் அங்கு கபடி விளையாடினர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அண்ணாமலைநகர்:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் கோர பிடிக்குள் சிக்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. அதனால் தான் இன்றைய சூழலில் மனித குலத்தின் ஒட்டுமொத்த எதிரியாக கொரோனா உருவெடுத்து நிற்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை பாதிப்பானது தற்போது வேகம் எடுத்துள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு ஆயிரத்தை கடந்து இருப்பதுடன், தினம் தினம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வண்ணம் இருக்கிறார்கள்.
அந்த வகையில் மாவட்டத்தில் சிகிச்சை அளிப்பதற்கு இருக்கும் மருத்துவமனைகளில் ஒன்று சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகும். இங்கு அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கோல்டன் ஜூப்ளி விடுதியிலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அங்கும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்றைய சூழலில் மாவட்டத்தில் மொத்தம் 352 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 90 பேர், கோல்டன் ஜூப்ளி விடுதியில் 193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர்கள் பலர் மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்றும், அவர்கள் மன உறுதியுடன் கொரோனாவை எதிர்கொண்டால் அதை வென்று மீண்டு வர முடியும் என்று நம்பிக்கை கொடுக்கும் விதமாக டாக்டர்கள் உள்பட பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இத்தகையை சூழலில், மன அழுத்தத்துக்கு விடை கொடுக்கும் விதமாக கோல்டன் ஜூப்ளி விடுதியில் தங்கி சிகிச்சை பெறும் சிலர் நேற்று முன்தினம் மாலை விடுதி மொட்டை மாடிக்கு சென்று கபடி விளையாடியதாக தெரிகிறது. இதன் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவில் இளம் வயதுடைய சிலர் கபடி ஆடுவதும், அதனை சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்த்து வருவதுமாக அமைந்திருந்தது. இதுபற்றி அறிந்த வருவாய்த்துறையினர் நேற்று அந்த விடுதிக்கு சென்று மொட்டை மாடி கதவை இழுத்து பூட்டி சென்றனர்.

என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்:
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஜூலை 1-ந்தேதி பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இன்று உயிரிழந்தார். இதனால் என்எல்சி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள், 9 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 2 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்எல்சி நிர்வாகம் 30 லட்ச ரூபாய் பணமும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் கொடுப்பதாக உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராசிபுரம் அருகே கியாஸ் வெல்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் எந்திரம் தீப்பிடித்து பணம் எரிந்து நாசமானது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே பாச்சலில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. அதன் நுழைவுவாயில் அருகே யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. மக்களின் பயன்பாட்டிற்காக அந்த வங்கியின் ஏ.டி.எம். மையமும் உள்ளது. இதில் அவ்வப்போது பணம் நிரப்பப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த 3-ந் தேதி வங்கியின் மேலாளர் அப்பாராவ், உதவி மேலாளர் விஸ்வநாதன், அலுவலர் சக்திவேல் ஆகியோர் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.6 லட்சத்திற்கான நோட்டுக்களை நிரப்பி உள்ளனர். ஏற்கனவே இருந்த ரூ.2 லட்சம் உள்பட மொத்தம் ரூ.8 லட்சம் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து உள்ளது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பண பரிவர்த்தனைக்கு பிறகு நேற்று முன்தினம் நிலவரப்படி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 100 இருந்து உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டர் மூலம் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதை அந்த வழியாக 2 மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து புதுச்சத்திரம் போலீசாரும், ரோந்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடந்தது. ஏ.டி.எம். எந்திரமும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் தீயில் கருகியது. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணமும் நாசமானதாக தெரிகிறது. ஆனால் எவ்வளவு தொகை எரிந்து போனது என்ற விவரம் தெரியவில்லை.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 3 பேர் கியாஸ் வெல்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவும், அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவும் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்தது தெரிந்தது. இதனிடையே தனியார் கல்லூரியின் நுழைவுவாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் கொள்ளையர்கள் 3 பேர் அதிகாலை 2.30 மணி அளவில் ஏ.டி.எம். மையத்தை நோட்டுமிட்டுச் செல்வதும், பின்னர் 3 மணி அளவில் சாக்குபையுடன் மையத்திற்குள் நுழைவதும், 3.30 மணிக்கு அவர்கள் வெளியே செல்வதும், அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதும் பதிவாகி இருந்தது.
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பண்ருட்டியில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை எஸ்.கே.வி.நகரில் வசித்து வந்தவர் சிவக்குமார்(வயது 31). சிற்ப கலைஞர். இவரது மனைவி சரண்யா(24). இந்த தம்பதிக்கு விக்னேஷ்(5), தினேஷ்(2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களாக சரண்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சிவக்குமார், நடத்தையில் சந்தேகப்பட்டு சரண்யாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் மனமுடைந்த சரண்யா சேலையால் வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சரண்யா இறந்து விட்டதாக கூறினர். இது பற்றி அறிந்ததும் வீட்டில் இருந்த சிவக்குமாரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து சிவக்குமாரின் உடலையும், ஆஸ்பத்திரியில் இருந்த சரண்யாவின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டதால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
நெய்வேலி:
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஜூலை 1-ந்தேதி காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5-வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.
இவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் இன்று மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்தார். விபத்து தொடர்பாக முதன்மை பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் என என்.எல்.சி. நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.