என் மலர்
செய்திகள்
X
தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் தவணையைவசூல் செய்வது குறித்து நடவடிக்கை- கலெக்டர் பேட்டி
Byமாலை மலர்8 July 2020 1:38 PM IST (Updated: 8 July 2020 1:38 PM IST)
தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் தவணையைவசூல் செய்வது குறித்து நடவடிக்கைக எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறியுள்ளார்.
கடலூர்:
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெற்ற கடனுக்கான தவணையை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் 6 மாதங்களுக்கு வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதையும் மீறி பொதுமக்களிடம் தனியார் நிதி நிறுவனங்கள் கடனுக்கான தவணையை கட்டாயமாக வசூலித்து வருகிறது. இது தவிர வட்டிக்கும் வட்டி போட்டு வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கட்டாயமாக தவணையை வசூலிப்பதாக இது வரை 2 புகார்கள் வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆலோசனை கூட்டத்தை விரைவில் நடத்த உள்ளேன் என்றார்.

Next Story
×
X