search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.எல்.சி. பாய்லர் வெடித்து விபத்து
    X
    என்.எல்.சி. பாய்லர் வெடித்து விபத்து

    என்.எல்.சி. பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

    நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
    நெய்வேலி:

    நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஜூலை 1-ந்தேதி காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5-வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.

    இவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில் இன்று மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆக உயர்ந்துள்ளது.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்தார்.  விபத்து தொடர்பாக முதன்மை பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் என என்.எல்.சி. நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×