என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. வார்டு வாரியாக மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தை எடுத்து சென்று அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது 4-வது வார்டு எண்ணிக்கை வரும் போது இந்த வார்டுக்கான மின்னணு வாக்கு பதிவு எந்திரம் இயங்கவில்லை. அதிகாரிகள் மாலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்துவிட்டு மற்ற வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர்.
அனைத்து வார்டுகளுக்கான எண்ணிக்கை முடிந்த பிறகு மாலை 4-வது வார்டு மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை எடுத்து எண்ண முயன்றனர். அப்போதும் இயங்கவில்லை. தொழில்நுட்ப அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. ஆனாலும் சரியாகவில்லை. இதைனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவருமான பாலசுப்ரமணியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் கமிஷன் உத்தரவுபடி நாளை (24-ந் தேதி) மறுவாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 4-வது வார்டுக்கு நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை5 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா தொற்றாளர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும். அன்றுமாலை 6 மணிக்கு ஓட்டு பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடத்தி தேர்தல் முடிவுகள் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் அக்டோபர் 25-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வந்தது.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக முற்றிலும் மழை ஓய்ந்து காணப்பட்டது. அதன்படி காலை நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும் இரவில் குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. இந்த சீதோஷ்ண மாற்றத்தால் மாவட்டம் முழுவதும் ஏராளமான மக்கள் சளி மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தனர்.
இன்று காலை முதல் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. மேலும் எதிரே யார் வருகிறார் என்று கூட தெரியாத அளவிற்கு இந்த மூடுபனி கொட்டி தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு படி சென்றனர். மேலும் அன்றாட தேவைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் இந்த மூடுபனியால் அதிகாலையில் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மக்கள் குளிர் தாங்காமல் தீ மூட்டி அதனை சுற்றி அமர்ந்திருந்தனர். இந்த கடும் பனிப்பொழிவால் கடலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டகுடி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. காலை முதலே தி.மு.க. கூட்டணி கட்சியினர் வெற்றி முகத்தில் இருந்தனர்.
வார்டுஎண்1 மகேஸ்வரி அதிமுக வெற்றி, வார்டுஎண் 2 சிலம்பரசி சுயேட்சை வெற்றி, வார்டுஎண் 3 மீனாட்சி தி.மு.க. வெற்றி, வாரடுஎண் 4 உமா மகேஸ்வரி தி.மு.க. வெற்றி, வார்டுஎண்5 வெண்ணிலா தி.மு.க. வெற்றி, வார்டு எண் 6 நவீன் ராஜ் அதிமுக வெற்றி, வார்டு எண் 7 ராஜா அலெக்சாண்டர் விசிக. திமுக கூட்டணி வெற்றி, வார்டு எண் 8 செமிலா தேவி திமுக வெற்றி, வார்டு எண் 9 சேதுராமன் அதிமுக வெற்றி, வார்டு எண்10 இளைய ராஜா சுயேட்சை வெற்றி, வார்டு எண் 11 விமலா தி.மு.க. வெற்றி, வார்டுஎண்12 கொளஞ்சியப்பன் திமுக வெற்றி.
வார்டுஎண் 13 தனபால் சுயேட்சை வெற்றி, வார்டு எண்14 சுரேந்தர் தவாக. திமுக கூட்டணி வெற்றி, வார்டு எண்15 கண்மணி சுயேட்சை வெற்றி,வார்டுஎண்16. கமல் ராஜ் அதிமுக வெற்றி, வார்டுஎண்17 மஞ்சுளா திமுக வெற்றி, வார்டு எண்18. கவிதா தி.மு.க. வெற்றி, வார்டுஎண் 19 மாலதி சுயேச்சை வெற்றி, வார்டு எண் 20 ராஜவேல் அதிமுக வெற்றி, வார்டு எண்21 அமிர்தவல்லி தி.மு.க. வெற்றி, வார்டுஎண் 22 பரமகுரு திமுக வெற்றி, வார்டுஎண் 23 முத்துவேல் திமுக வெற்றி, வார்டு எண் 24 அமிர்தவல்லி தி.மு.க. வெற்றி. இந்த நகராட்சியில் தி..மு.க. 12 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. தவாக 1, விசிக 1, அ. தி.மு.க. 5, சுயேட்சை 5 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்துவருகிறது.
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை கதவின் பூட்டு சாவி தொலைந்து போனதால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் முன்பாக ஆக்சாபிளேடு மூலம் பூட்டை அறுத்து திறந்தனர். இதனால் காலை 8.50 மணிக்கு பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்தன. இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 23 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:-
வார்டு-1 செல்வ புஷ்பலதா (வி.சி.க.).
வார்டு-2 கீதா குணசேகரன் (தி.மு.க.).
வார்டு-3 பிரகாஷ் (தி.மு.க.).
வார்டு-4 சரிதா (வி.சி.க.).
வார்டு-5 பார்வதி (தி.மு.க.).
வார்டு-6 ஹேமலதா (தி.மு.க.).
வார்டு-7 சங்கீதா (தி.மு.க.).
வார்டு-8 சுமதி (தி.மு.க.).
வார்டு-9 சுரேஷ்பாபு (அ.தி.மு.க.).
வார்டு-10 ராஜ்மோகன் (தி.மு.க.).
வார்டு-11 அருண்பாபு (த.வா.க.).
வார்டு-12 பிரசன்னா (தி.மு.க.).
வார்டு-13 நடராஜன் (தி.மு.க.).
வார்டு-14 கண்ணன் (த.வா.க.).
வார்டு-15 மகேஷ்வரி (தி.மு.க.).
வார்டு-16 ஆராவமுது (தி.மு.க.).
வார்டு-17 கிரேசி (தி.மு.க.).
வார்டு-18 சுதா (தி.மு.க.).
வார்டு-19 செந்தில்குமாரி (தி.மு.க.).
வார்டு-20 சுந்தரிராஜா (தி.மு.க.).
வார்டு-21 மணிமாறன் (அ.தி.மு.க.).
வார்டு-22 சுபாஷினி (தி.மு.க.).
வார்டு-23 தஷ்ணா (அ.தி.மு.க.).
இதுவரை வெளியான 23 வார்டுகளின் முடிவில் தி.மு.க. கூட்டணி 20 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இங்கு பதிவான வாக்குகள் அனைத்தும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை எண்ணப்பட்டது.
வெற்றி பெற்ற கட்சிகள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு (தி.மு.க).
2-வது வார்டு (சுயே)
3-வது வார்டு (சுயே)
4-வது வார்டு (தி.மு.க.)
5-வது வார்டு (தி.மு.க.)
6-வது வார்டு (பா.ம.க.)
7-வது வார்டு (தி.மு.க.)
8-வது வார்டு (தி.மு.க.)
9-வது வார்டு (தி.மு.க.)
10-வது வார்டு (அ.தி.மு.க.)
11-வது வார்டு (தி.மு.க.)
12-வது வார்டு (தி.மு.க.)
13-வது வார்டு (சுயே)
14-வது வார்டு (தி.மு.க.)
15-வது வார்டு (தி.மு.க.)
16-வது வார்டு (தி.மு.க.)
17-வது வார்டு (தி.மு.க.)
18-வது வார்டு (தி.மு.க.)
19-வது வார்டு (தி.மு.க.)
20-வது வார்டு (தி.மு.க.)
21-வது வார்டு (அ.தி.மு.க.)
22-வது வார்டு (தி.மு.க.)
23-வது வார்டு (அ.தி.மு.க.)
24-வது வார்டு (தி.மு.க.)
25-வது வார்டு (தி.மு.க.)
26-வது வார்டு (தி.மு.க.)
27-வது வார்டு (பா.ம.க.)
28-வது வார்டு (தி.மு.க.)
29-வது வார்டு (தி.மு.க.)
30-வது வார்டு (தி.மு.க.)
31-வது வார்டு (அ.தி.மு.க.)
32-வது வார்டு (பா.ம.க.)
33-வது வார்டு (அ.தி.மு.க.)
இந்த நகராட்சியில் 22 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. எனவே நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. வசமாகிறது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள், 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஒரு சில மையங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி உள்ளது.
* சென்னை எம்ஜிஆர் பொறியியல் கல்லூரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.
* உதகை நகராட்சியின் 36 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி உள்ளது.
* கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் புனித வளனார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி உள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி தொலைந்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடலூர்:
கடலூர் அருகே குள்ளஞ்சாவடி அரசக்குப்பம் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் கடந்த 16-ந் தேதி மாசிமக திருவிழா முடித்து முத்தாலம்மன் சாமியுடன் வீதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ராமநாதகுப்நம் சேர்ந்த உத்திராபதி, அரிகரன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். இதனை ரவிக்குமார் மற்றும் கிராம மக்கள் தட்டி கேட்டனர். இந்த முன் விரோத காரணமாக சம்பவத்தன்று ரவிக்குமார் ராமநாதகுப்பத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றபோது அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனை தொடர்ந்து ராமநாதகுப்பம் சேர்ந்த அரிகரன் அரசகுப்பம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அரிகரனை வழிமறித்து மோட்டார் சைக்கிள் சாவியை பிடிங்கினார். இதனால் அரிகரன் தனது உறவினரான செஞ்சி வேல் மற்றும் உத்திராபதிக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சிவேலுவை அந்த கும்பல் தாக்கினர்.
இந்த தாக்குதலில் 2 தரப்பை சேர்ந்த ரவிக்குமார், செஞ்சிவேல் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் உத்திராபதி, அரிகரன், கந்தவேல், கிருஷ்ணன், ரவிக்குமார், ராஜாராமன், விஜயகாந்த் ஆகிய 7 பேர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் கடந்த 16-ந் தேதி மாசிமக திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக சாமி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
ஆனால் அந்த சாமி ஊர்வலத்தை பொதுபாதை வழியாக கொண்டு செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வருமானவரித் துறையினரும், போலீசாரும் விரைந்து சென்று இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் சாமி ஊர்வலத்தை வேறு பாதை வழியாக கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனை ஏற்க மறுத்த மக்கள் அன்றைக்கு ஏற்பாடு செய்திருந்த சாமி ஊர்வலத்தை ரத்து செய்தனர்.
இன்று காலை செம்மங்குப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு தரப்பினர் வக்கீல் திருமார்பன் தலைமையில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். பொதுமக்கள் தரப்பில் சிலரை கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர். அங்கு அதிகாரிகளை சந்தித்த மக்கள் சாமி ஊர்வலம் செல்வதற்கான பாதை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தை திடீரென பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் கடற்கரை இருந்து வருகின்றது. இந்த தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடற்கரை ரசிப்பதற்கு வந்து செல்கின்றனர்.
மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்பவர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி வெளி மாவட்டம் போன்ற பகுதிகளிலிருந்து கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு அதிகளவில் திரண்டு ஆனந்தமாக பொழுதைக் கழித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரையில் விளையாடி செல்வார்கள்.
இதனை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட அதிகளவில் பொதுமக்கள் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை முழுவதும் தற்போது குப்பை காடாக மாறி உள்ளது. இதன் மூலம் கடற்கரை கரையோரம் முழுவதும் குப்பைகள் அதிக அளவில் இருந்ததால் ஒருபுறம் துர்நாற்றம் வீசுவதோடு கடற்கரை அழகு முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் காலை முதல் வரக்கூடிய பொதுமக்கள் முகம் சுளித்தபடி கடற்கரைக்கு வந்து செல்வதையும் காண முடிந்தது. ஆகையால் சம்பந்தபட்ட கடலூர் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக குப்பை காடாக காட்சி அளித்து வரும் கடற்கரையை உடனடியாக சுத்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
இதனையொட்டி கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் பதிவுசெய்யப்பட்ட வாக்குப் பெட்டி எந்திரங்கள் பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு சென்று கடலூர் புனித வளனார் பள்ளி மற்றும் அந்தந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சீல் வைத்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி மற்றும் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை (22-ந் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி அந்தந்த வேட்பாளர்கள் தங்களது முகவர்கள் விபரம் குறித்து மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தெரியப்படுத்தி வருகின்றனர்.
கடலூர் மாநகராட்சியில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அவருடன் ஒரு முகவர் மட்டும் அனுமதி அளித்திருந்தனர். தற்போது இதிலிருந்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தில் ஒரு வேட்பாளருடன் அந்த வார்டுகளில் எத்தனை வாக்குச்சாவடி மையம் இருந்ததோ, அந்த வாக்குச் சாவடி மையத்தை கணக்கில் கொண்டு ஒவ்வொரு முகவர்கள் என்ற கணக்கின் அடிப்படையில் வேட்பாளருடன் 4 முகவர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இப்பணியில் வேட்பாளர்கள் தங்களுக்கான முகவர்கள் உடன் கொண்டு செல்வதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு திரண்டுள்ளனர்.
மேலும் முகவர்களுக்கான படிவம் அவர்களுடைய புகைப்படம் போன்றவற்றின் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த திடீர் மாற்றத்தால் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வாக்கு மையத்தில் ஒவ்வொரு முறையும் 3 வேட்பாளர்கள் அனுமதித்து அவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடித்து உரிய சான்றிதழ் வழங்கிய பின்பு அவர்கள் வெளியில் வர வேண்டும். அதன் பிறகு அடுத்தடுத்து 3 வேட்பாளர்கள் அனுமதித்து அவர்களுடன் 4 முகவர்கள் உடன் சென்று வரலாம்.
இதன் காரணமாக ஏற்கனவே வாக்குச்சாவடி மையத்தில் நாற்காலி போடப்பட்டிருந்த நிலையில் தற்போது சற்று மாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பாதுகாப்பு மையங்கள் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.
பண்ருட்டி:
பண்ருட்டி மேலப்பாளையம் பகுதியில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன், ஏட்டு தேவர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதி இல்லாமல் திருட்டுதனமாக மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மாட்டு வண்டியை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.






