என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திமுக
    X
    திமுக

    திட்டக்குடி நகராட்சியில் வெற்றி வாகை சூடிய தி.மு.க.கூட்டணி

    கடலூர் மாவட்டம் திட்டகுடி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டகுடி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. காலை முதலே தி.மு.க. கூட்டணி கட்சியினர் வெற்றி முகத்தில் இருந்தனர்.

    வார்டுஎண்1 மகேஸ்வரி அதிமுக வெற்றி, வார்டுஎண் 2 சிலம்பரசி சுயேட்சை வெற்றி, வார்டுஎண் 3 மீனாட்சி தி.மு.க. வெற்றி, வாரடுஎண் 4 உமா மகேஸ்வரி தி.மு.க. வெற்றி, வார்டுஎண்5 வெண்ணிலா தி.மு.க. வெற்றி, வார்டு எண் 6 நவீன் ராஜ் அதிமுக வெற்றி, வார்டு எண் 7 ராஜா அலெக்சாண்டர் விசிக. திமுக கூட்டணி வெற்றி, வார்டு எண் 8 செமிலா தேவி திமுக வெற்றி, வார்டு எண் 9 சேதுராமன் அதிமுக வெற்றி, வார்டு எண்10 இளைய ராஜா சுயேட்சை வெற்றி, வார்டு எண் 11 விமலா தி.மு.க. வெற்றி, வார்டுஎண்12 கொளஞ்சியப்பன் திமுக வெற்றி.

    வார்டுஎண் 13 தனபால் சுயேட்சை வெற்றி, வார்டு எண்14 சுரேந்தர் தவாக. திமுக கூட்டணி வெற்றி, வார்டு எண்15 கண்மணி சுயேட்சை வெற்றி,வார்டுஎண்16. கமல் ராஜ் அதிமுக வெற்றி, வார்டுஎண்17 மஞ்சுளா திமுக வெற்றி, வார்டு எண்18. கவிதா தி.மு.க. வெற்றி, வார்டுஎண் 19 மாலதி சுயேச்சை வெற்றி, வார்டு எண் 20 ராஜவேல் அதிமுக வெற்றி, வார்டு எண்21 அமிர்தவல்லி தி.மு.க. வெற்றி, வார்டுஎண் 22 பரமகுரு திமுக வெற்றி, வார்டுஎண் 23 முத்துவேல் திமுக வெற்றி, வார்டு எண் 24 அமிர்தவல்லி தி.மு.க. வெற்றி. இந்த நகராட்சியில் தி..மு.க. 12 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. தவாக 1, விசிக 1, அ. தி.மு.க. 5, சுயேட்சை 5 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது.

    Next Story
    ×