என் மலர்
செங்கல்பட்டு
- மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயத்தை பலர் வாங்கி குடித்துள்ளனர்.
- மாரியப்பன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயத்தை பலர் வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தனர்.
உடனே அவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தபோதிலும் அன்று இரவே எக்கியார்குப்பத்தை சேர்ந்த எஸ்.சங்கர், சுரேஷ், தரணிவேல் ஆகிய 3 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பின்னர் மறுநாள் (14-ந் தேதி) அதே ஊரைச்சேர்ந்த ராஜமூர்த்தி, மலர்விழி, மரக்காணம் மண்ணாங்கட்டி, எக்கியார்குப்பம் விஜயன் ஆகிய 4 பேரும், நேற்று முன்தினம் மரக்காணம் சங்கர், எக்கியார்குப்பம் கேசவவேலு, விஜயன், ஆபிரகாம், சரத்குமார் ஆகிய 5 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் விஷச்சாராயத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயா்ந்தது.
இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த எக்கியார்குப்பத்தை சேர்ந்த ராஜவேலு (வயது 46) என்பவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதேபோல் கிளியனூர் அருகே கோவடியை சேர்ந்த சரவணன் (58) என்பவர் மரக்காணம் அரசு ஆஸ்பத்திாியில் இருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திாிக்கு செல்லும் வழியிலேயே இறந்தார்.
இவர்களோடு சேர்த்து இதுவரை மரக்காணத்தில் விஷச்சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 58 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல் விஷச்சாராயம் குடித்ததால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 34). அவரது மாமியார் வசந்தா (40) ஆகியோர் விஷ சாராயம் குடித்ததால் கடந்த சனிக்கிழமை பரிதாபமாக இறந்தனர்.
சித்தாமூர் குறுவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெண்ணியப்பன் (65), சந்திரா (55) ஆகியோரும் விஷ சாராயம் குடித்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.
நேற்று முன்தினம் மாரியப்பன் (60) என்பவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே விஷ சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருங்கரனை கிராமத்தை சேர்ந்த அஞ்சாலை (22), முத்து (64), தம்பு (60), சந்திரன் (48), சின்னக்கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (40), செய்யூர் வட்டம் புத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜி (32) ஆகியோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சின்னக்கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர், பெருங்கரனை கிராமத்தை சேர்ந்த தம்பு, முத்து ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
செங்கல்பட்டு, மரக்காணத்தில் மேலும் 5 பேர் இறந்து இருப்பதால் விஷச்சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையை சேர்ந்த பெண் வீராங்கனை ஐஸ்வர்யா கணேஷ் முதலிடம் பெற்று ஆசிய போட்டிக்கு தேர்வானார்.
- அடுத்த மாதம் தூத்துக்குடி கடற்கரையில் இதே போல் சர்பிங் போட்டிகள் நடைபெறுகிறது.
மாமல்லபுரம்:
சென்னை அடுத்த கோவளம் கடற்கரையில் தமிழ்நாடு பாய்மர படகு சங்கம் மற்றும் சென்னை மாவட்ட பாய்மரப் படகு சங்கம் இணைந்து 4நாட்களாக அகில இந்திய அளவிலான "விண்ட் சர்பிங்" போட்டியை நடத்தி வந்தது.
இதில் சென்னையை சேர்ந்த பெண் வீராங்கனை ஐஸ்வர்யா கணேஷ் முதலிடம் பெற்று ஆசிய போட்டிக்கு தேர்வானார்.
அவருக்கு பதக்கங்கள் மற்றும் ரொக்க பரிசு வழங்கபட்டது. கோவா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட அனைத்து பிரிவு வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அடுத்த மாதம் தூத்துக்குடி கடற்கரையில் இதே போல் சர்பிங் போட்டிகள் நடைபெறுகிறது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.
- விஷசாராயம் விற்றதாக அமாவாசை என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருந்தனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்ன தம்பி (வயது 30), அவரது மாமியார் வசந்தா ஆகியோர் விஷசாராயம் குடித்து பலியானார்.
அவர்களுடன் விஷ சாராயம் குடித்த சின்னத் தம்பியின் மனைவி அஞ்சலி (22)செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதேபோல் விஷசாராயம் குடித்ததில் சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியம்பன் (65) , அவரது மனைவி சந்திரா (55) பெருங்கருணை கிராமத்தைச் சேர்ந்த முத்து (55) ஆகியோரும் அடுத்தடுத்து இறந்தனர்.
இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் விஷசாராயம் குடித்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விஷசாராயம் விற்றதாக அமாவாசை என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருந்தனர். அவரிடம் விசாரணை நடந்து வந்தது. அவர் செய்யூர் அருகே உள்ள ஊதியூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரிடம் இருந்து சாராயத்தை வாங்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து விஷ சாராயம் விற்றதாக வேலுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே விஷ சாராயத்தை விற்ற அமாவாசையும் குடித்து இருந்தார். இதில் அவரது உடல் நிலையும் சற்று பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை அவரையும் போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடந்து வருகிறது. விஷசாராயத்தை மேலும் வேறுயாராவது குடித்து இருந்தால் அவர்களையும் சிகிச்சைக்கு அனுப்ப விசாரித்து வருகின்றனர்.
கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்த விபரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். எனவே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சதாகர் கூடுதலாக கவனிப்பார் என்று அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜி, சங்கர் ஆகிய இருவரும் சிகிச்சைக்கு பயந்து ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென தப்பி ஓடிவிட்டனர்.
- தப்பி ஓடிய 2 பேரையும் செங்கல்பட்டு டவுன் போலீசார் தேடிவருகிறார்கள்.
மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்ன தம்பி அவரது மாமியார் வசந்தா ஆகியோர் விஷசாராயம் குடித்ததில் நேற்று முன் தினம் பரிதாபமாக இறந்தனர். சின்னத் தம்பியின் மனைவி அஞ்சலி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல் சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியம்பன் (65) , அவரது மனைவி சந்திரா (55) ஆகியோரும் விஷசாராயம் குடித்ததில் நேற்று இறந்தனர். இன்று காலை பெருங்கரணை பகுதியை சேர்ந்த முத்து (55) என்பவரும் விஷசாராயத்துக்கு பலியானார்.
இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் விஷசாராயம் குடித்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செம்பு,ராஜி(32), பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த மாரியப்பன், சங்கர் (48) ஆகியோரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சைபெற்று வந்த ராஜி, சங்கர் ஆகிய இருவரும் சிகிச்சைக்கு பயந்து ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென தப்பி ஓடிவிட்டனர். இதனால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தப்பி சென்றவர்களுக்கு விஷசாராயத்தின் பாதிப்பு லேசாக இருந்ததாக தெரிகிறது. எனினும் அவர்களை பிடித்து சிகிச்சை அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். தப்பி ஓடிய 2 பேரையும் செங்கல்பட்டு டவுன் போலீசார் தேடிவருகிறார்கள்.
- மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
வண்டலூர்:
ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரியில் உள்ள சுடுகாடு எதிரே டாஸ்மாக் கடை மற்றும் மதுபார் உள்ளது.
இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் ஊழியர்கள் மது விற்பனை செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலி மதுபாட்டிகளை மதுக்கடை முன்பு உடைத்தனர். மேலும் அருகில் உள்ள மதுபாருக்குள் புகுந்து அங்கிருந்து மேஜை, நாற்காரிகளை உடைத்து நெறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே ஊழியர்கள் மதுக்கடையை மூடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பெண்கள் மதுபாருக்குள் புகுந்து சூறையாடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரச்சினைக்குரிய மதுக்கடையை மீண்டும் திறந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதிமக்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
- செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு புறவழிச்சாலை பச்சையம்மன் கோவில் அருகே சென்னையை நோக்கி இன்று காலை கார் சென்று கொண்டிருந்தது. பின்னால் அரசு பஸ், வேன், லாரி என அடுத்தடுத்து வாகனங்கள் வந்து கொண்டு இருந்தன.
இந்த நிலையில் காரின் வேகத்தை டிரைவர் திடீரென குறைத்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பின்னால் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற வேன், அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. இதைத்தொ டர்ந்து வேனின் பின்புறம் லாரி மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேன், லாரி பலத்த சேதம் அடைந்தது. விபத்து காரணமாக திருச்சி- சென்னை மார்க்கத்தில் உள்ள புறவழிச்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததையும், காண முடிந்தது.
- ரூ.40 நுழைவு சீட்டு வாங்குவதற்காக தொல்லியல் துறையின் கட்டண கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கோடைகாலம் மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை முன்னிட்டு மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று கோடை விடுமுறையின் ஞாயிற்றுகிழமை என்பதாலும், இன்னும் 2 வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அரசு பஸ்களிலும் சுற்றுலா வாகனங்களிலும் கூட்டம், கூட்டமாக வந்து இருந்ததை காண முடிந்தது.
கடற்கரை கோவில் ஐந்தரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது. அங்குள்ள பாறை சிற்பங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததையும், காண முடிந்தது. மேலும் கடற்கரையில் பாறைகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் போலீசார் அவ்வப்போது எச்சரித்து, அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டதால் தங்கள் பெற்றோர்களுடன் கோடை விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் பள்ளி விடுமுறை விடப்பட்ட உற்சாகத்தில் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்ததை காண முடிந்தது.
ரூ.40 நுழைவு சீட்டு வாங்குவதற்காக தொல்லியல் துறையின் கட்டண கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து நுழைவு சீட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது. கடற்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும், மாமல்லபுரம் நகர பகுதியிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதை காண முடிந்தது. மாமல்லபுரம் நகர பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாமல்லபுரம் சாலவான்குப்பம் பகுதியில் உள்ள புலிக்குகை புராதன சின்னத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நிர்வாகத்திற்கு கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் மெத்தனமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
- கோவில் நிர்வாகத்தினர் திருப்போரூர் போலீசார் அதிரடியாக 35 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலை, பஸ்நிலையம் அருகே பழைய மாமல்லபுரம் சாலை, இள்ளலூர் செல்லும் சாலைகளில உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நிர்வாகத்திற்கு கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் மெத்தனமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதிதாசன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், கோவில் நிர்வாகத்தினர் திருப்போரூர் போலீசார் அதிரடியாக 35 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
இதனால் கடைக்காரர்களுக்கும் கோவில் நிர்வாகத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒவ்வொரு கடைக்காரரும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கோவில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தாமல் கடந்த 15 ஆண்டுகளாக மெத்தனமாக செயல்பட்டு வந்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகம் வாடகை பாக்கி செலுத்த சொல்லி பலமுறை எச்சரித்தும் செவி சாய்க்காத நிலையில் நேற்று அதிரடியாக கடைகளை பூட்டி சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
- பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும்.
- போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் பணிகாலியிடங்களுக்கு கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயதுவரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும்.
வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள். ஓ.பி.சி.பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.
மொத்த பணிக்காலியிடங்கள் தோராயமாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்த பணிக்காலியிடங்கள் தோராயமாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
+2
- 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது.
- பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
அ.தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அ.தி.மு.கவினர் எடப்பாடி பழனிசாமி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
புதுப்பட்டினம் பேருந்து நிலையம் பகுதியில் கேக் வெட்டி கொண்டாடி அன்னதானம் வழங்கப்பட்டு, பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ தனபால், புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால், மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மாமல்லபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்வந்த்ராவ், கலியபெருமாள் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
- கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக பயணிகள் கடலில் ஆபத்தை உணராமல் குளித்தனர்.
- காலையில் கடல் சீற்றம் சற்று குறைந்து, மிதமான காற்று வீசுவதால் பாய்மர படகு போட்டி காலையில் இருந்து நடந்து வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதிகளில் நேற்று மாலையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்தனர். அதையும் மீறி கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக பயணிகள் கடலில் ஆபத்தை உணராமல் குளித்தனர்.
இந்த நிலையில் கோவளம் கடற்கரையில் நடந்து வரும் பாய்மர படகு போட்டியும், அப்பகுதி கடல் சீற்றம் காரணமாக நேற்று நிறுத்தப்பட்டது. அதையும் மீறி சில வீரர்கள் பயிற்சிக்காக கடலுக்குள் செல்ல முயற்சி செய்தனர். அதில் கடல் அலையில் சிக்கி ஒரு படகின் விலை உயர்ந்த பாய்மரம் கிழிந்தது. கடலோர காவல்படை வீரர்கள் அவர்களை கரைக்கு அழைத்து வந்தனர்.
இன்று காலையில் கடல் சீற்றம் சற்று குறைந்து, மிதமான காற்று வீசுவதால் பாய்மர படகு போட்டி காலையில் இருந்து நடந்து வருகிறது. புயல் எச்சரிக்கை இருப்பதால் போட்டி நடைபெறும் இடத்தில் கூடுதலாக கடலோர காவல்படை நீச்சல் வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது.
- போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபடுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேல்மருவத்தூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள செம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பரிமளா. கணவரை இழந்த இவர் வெளியூரில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வீட்டுக்கு வருவார்.
இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள்தான் வீட்டில் இருப்பார்கள். நேற்று முன்தினம் இரவு அதே ஊரில் உள்ள தனனுடைய மாமா வீட்டில் தூங்கி விட்டனர். நேற்று காலை அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. மகள்களின் திருமணத்திற்காக பரிமளா நகை, பணத்தை சேமித்து வைத்திருந்தார். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபடுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.






