என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியே 8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்டுசாலையில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது செங்கல்பட்டு நகரத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த 2 வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர் அந்த வாகனத்தில் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து பணம் இருந்த 2 வாகனங்களையும் செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து அதில் இருந்த ரூ.1 கோடியே 8 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் செங்கல்பட்டில் ரூ.1 கோடியே 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு அடுத்த பொண்விளைந்த களத்தூரில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த பொண்விளைந்த களத்தூரில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வங்கி கணக்கு புத்தகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வரவு, செலவு கணக்கு பதிவேற்றம் செய்யவில்லை, இதனால் வங்கி கடன் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது, வங்கி கடன் பெற்றவர்கள் வட்டி செலுத்தினால் அசல் கொடுக்க சொல்லி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

    வட்டி பணத்தை வங்கி நிர்வாகம் வாங்க மறுக்கிறது என்று புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வங்கி கணக்கு புத்தக வரவு செலவு கணக்கை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) இந்தியன் வங்கி அதிகாரிகள் காஞ்சீபுரத்தில் இருந்து வரவுள்ளனர். அவர்களிடம் உங்கள் குறைகளை தெரிவியுங்கள் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 786 பேர் உயிரிழந்துள்ளனர். 352 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 270 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 132 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 786 பேர் உயிரிழந்துள்ளனர். 352 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 449 பேர் உயிரிழந்துள்ளனர். 77 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 44 ஆயிரத்து 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 43 ஆயிரத்து 543 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 194 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 700 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
    செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வண்டலூர் தாசில்தாரும் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலருமான டி.ஆறுமுகம் மற்றும் அவருடன் தேர்தல் பணிகளில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறையை சேர்ந்த அலுவலர்கள் உள்பட 150 பேர் நேற்று நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். இதேபோல வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் வங்கி, நகை அடகு தொழில் புரிவோருக்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகளை கலெக்டர் ஜான் லூயிஸ் வழங்கினார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) என 7 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

    இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை அமலில் உள்ளது.

    சந்தேகத்திற்கிடமான வகையில் பண பரிவர்த்தனை நிகழும் போது அவர் குறித்த தகவல்களை வங்கிகளிடம் இருந்து பெற மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வங்கி கணக்கில் இருந்து பல்வேறு நபர்களின் வங்கி கணக்கு தேர்தல் காலத்தின் போது பண பரிவர்த்தனை நடைபெற்றால் அவை குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

    வேட்பாளர், அவரது மனைவி சார்ந்தோர் அவர்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்திற்கும் மேல் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டால் அதன் விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் வேட்பாளர் அவரது வங்கி கணக்கு விவரங்கள் குறிப்பிட்ட உறுதிமொழி பத்திரம் தலைமை தேர்தல் அலுவலரின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

    ஒரு வங்கி கணக்கில் கடந்த 2 மாதங்களாக பணப்பரிவர்த்தனை எதுவும் நடைபெறாத நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் திடீரென சந்தேகத்துக்கிடமான வகையில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டால் அதன் விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் அரசியல் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டால் அதன் விவரங்களையும் உடனே தெரிவிக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமான பண பரிவர்த்தனைகள் மேற்சொன்ன விதிமுறைப்படி சட்டமன்ற பொதுத்தேர்தல் நேர்மையாகவும் சுமுகமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பொதுக்கூட்டம், விழாக்கள் போன்ற நிகழ்வுகளின் போது வாக்காளர்களுக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு உதவினால் எந்த ஒரு உரிமையாளரும் ஏற்று கொள்ளக்கூடாது. மீறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகவும் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் வேட்பாளர்கள் முகவர்களால் மொத்தமாக மீட்கப்பட்டு வாக்காளர்களுக்கு திரும்பி வழங்குவதை தவிர்க்க வேண்டும். மொத்தமாக அடகு நகைகளை திரும்ப எவரேனும் முற்படின் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் வந்தாலும் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தங்களது நிறுவனத்தை அணுகி வெவ்வேறு அடகு நகைகளை திருப்ப முற்பட்டால் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது அடகு வைக்கப்படும் நகைகள் சந்தேகத்துக்கிடமான வகையில் மீட்கும் போது அவை குறித்த விவரங்கள் உடனடியாக அருகாமையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தாசில்தாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராகவும் மேற்சொன்ன விதிமுறைப்படி சட்டமன்ற தேர்தல் நேர்மையாகவும் சுமுகமாக நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 49 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 49 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 51 ஆயிரத்து 968 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 786 ஆக உயர்ந்தது. 304 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 633 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 86 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 449 பேர் உயிரிழந்துள்ளனர். 98 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 915 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 785-ஆக உயர்ந்தது. 309 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 608-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 79 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 449-ஆக உயர்ந்தது. 80 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 44 ஆயிரத்து 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 43 ஆயிரத்து 449 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 176 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 700 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்துள்ளார்.
    தாம்பரம் நகராட்சி ஊழியர்களுக்கு 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி 28 நாட்களுக்கு பிறகு இதே சுகாதார நிலையங்களில் போடப்படும் என நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
    தாம்பரம்:

    தேர்தல் ஆணையம் உத்தரவின்படி தேர்தல் பணியில் ஈடுபடும் தாம்பரம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் 714 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து நகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஊழியர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    அதன்படி நேற்று மதியம் நகராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரம், பட்டேல் நகர், பூண்டி பஜார் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது.

    இதில் தாம்பரம் நகராட்சி கமிஷனர் சித்ரா, நகராட்சி என்ஜினீயர் கணேசன், சுகாதார அலுவலர் மொய்தீன் மற்றும் ஊழியர்கள் என 57 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதுடன், தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர்.

    மீதமுள்ள 657 ஊழியர்களுக்கு இந்த வாரத்துக்குள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்படும் எனவும், 2-ம் கட்ட தடுப்பூசி 28 நாட்களுக்கு பிறகு இந்த 714 பேருக்கும் இதே சுகாதார நிலையங்களில் போடப்படும் எனவும் நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
    மண்ணிவாக்கத்தில் போலீசார் ஏரியில் மூழ்கி இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வண்டலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் பொண்ணாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 46). இவர் குன்றத்தூரில் தங்கி கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மண்ணிவாக்கம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் மண்ணிவாக்கம் தாங்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்தார். 

    ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற வெங்கடேஷ் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது நண்பர்கள் ஓட்டேரி போலீசில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏரியில் மூழ்கி இறந்த வெங்கடேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருக்கழுக்குன்றத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    செங்கல்பட்டு:

    வீராபுரம், அஞ்சூர், திருமணி, திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே அஞ்சூர், தேனூர், பட்டரவாக்கம், குன்னவாக்கம், ஈச்சங்கரணை, தெற்குபட்டு, அஞ்சூர், மகேந்திரா சிட்டி தொழிற்சாலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், நென்மேலி, தர்மபுரம், சோகண்டி, எடையூர், புள்ளேரி, தண்டரை, ஒரகடம், நத்தம், திருக்கழுகுன்றம், வல்லிபுரம், நெரும்பூர், பாண்டூர், நெய்குப்பி, வாயலூர், நல்லாத்தூர், பெரும்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
    வேலைக்கு செல்லவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி, இவரது மகன் ரமேஷ் (வயது 19). இவர் அங்குள்ள ஒரு கல் சிற்ப கூடத்தில் தினக்கூலி அடிப்படையில் சிற்பியாக வேலை செய்து வந்தார். வேலைக்கு செல்லாமல் இவர் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை இவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ரமேஷ் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி மாயமாகி விட்டார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் ரமேஷ் கிடைக்கவில்லை. மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கடம்பாடி காட்டில் விறகு பொறுக்க சென்ற சிலர் அங்கு மரத்தில் உடல் பகுதி அழுகி கீழே விழுந்தும், அழுகிய தலை பகுதி மரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இனஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அழுகிய உடல் பகுதி மற்றும் தலை பகுதியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் பெற்றோர் கண்டித்ததால் ரமேஷ் தூக்குப்போட்டு தற்றொலை செய்து கொண்டார் என்றும், அவரது உடலை விலங்குகள் கடித்து குதறி உள்ளதால் தலை மற்றும் உடல் பகுதி தனித்தனியாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    உடல்நிலை சரியில்லாமல் இருந்த கல்குவாரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    உத்திரமேரூர்:

    நாகை மாவட்டம் போகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் சுந்தர் (வயது 20). இவர் சாலவாக்கம் கிராமத்திற்கு அருகே உள்ள கல் குவாரியில் கேட் கீப்பராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சுந்தர் மற்றும் அவரது உறவினரான தமிழ்வாணனும் உத்திரமேரூர் அடுத்த சிறுமையிலூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கிருந்து வேலைக்குச் சென்று வந்தனர். கடந்த 2 நாட்களாக சுந்தர் உடல்நிலை சரியில்லை என்று கூறி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து, நேற்றுமுன்தினம் தமிழ்வாணன் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தது. ஜன்னல் வழியாக தமிழ்வாணன் பார்த்தபோது, அங்கு இருந்த மின்விசிறியில் சுந்தர் தூக்குப்போட்டு தொங்கியது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான சுந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
    ×