என் மலர்
செங்கல்பட்டு
முகாமுக்கு செங்கல்பட்டு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி கிருஷ்ணன், பாபு, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மனோஜ் குமார், கண்காணிப்பாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆராமுதன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் எம்.டி.சண்முகம், ஊராட்சி மன்ற செயலர் டி.ராமபக்தன், வட்டார மருத்துவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,194 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 263 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 981 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1789- ஆக உயர்ந்தது. இதில் 11493 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 664 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 912- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 948-ஆக உயர்ந்துள்ளது. 6,614 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டு பெண் சுற்றுலா பயணி பார்பரா (வயது80). கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதே போல் பிரிட்டனை சேர்ந்த சுற்றுலா பயணி லியோனல் குரூஸ் (90) என்பவரும் கடந்த 21-ந்தேதி உயிரிழந்தார்.
அடுத்தடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் மாமல்லபுரம் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட வருவாய்துறைக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது 9 வெளிநாட்டு பயணிகள் தங்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து 9 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்துள்ளதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த உள்ளூர் நபர்களையும் பரிசோதணை செய்ய விசாரித்து வருகிறார்கள்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரைச் சேர்ந்தவர் லியோரிகுரூஷ் (வயது 90). இவர், இங்கிலாந்து, இந்தியா என இரு நாட்டில் தங்குவதற்கான இரட்டை குடியுரிமை பெற்றவர். லண்டனில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கொல்கத்தா வந்து தங்கி இருந்தார்.
அங்கிருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகருக்கு சுற்றுலா வந்த அவர், அங்குள்ள கோவளம் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
லியோரிகுரூசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அதிகமாகி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதற்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நுரையீரலில் வைரஸ் தொற்று அதிகம் பரவியதால் நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துக்கு அவரது இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் கொரோனா நோயாளிகளை எரியூட்டும் மறைமலைநகரில் உள்ள இடுகாட்டில் எரியூட்டப்பட்டது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






