என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
திருவிழா நடத்துவது தொடர்பாக விதிகளை மீறி கூட்டம் நடத்தியதாக 6 பேர் மீது வழக்கு
மதுராந்தகம் அருகே விதிகளை மீறி திருவிழா நடத்தியதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு அடுத்த புத்திரன் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டு கொரோனா தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் புத்திரன் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா சம்பந்தமாக முன்னேற்பாடாக திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக செய்யூர் தாசில்தார் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் வந்தது
அங்கு கிராம நிர்வாக அலுவலர் சுமன் சென்று ஆய்வு நடத்தி அவர் சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசனிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் விதிகளை பின்பற்றாமல் கூட்டம் நடத்தியதாக அதே ஊரைச் சேர்ந்த குமரன் (வயது 40), நிர்மல்குமார் (55), சுகுமார் (37), செல்வராஜ் (63), கோதண்டராமன் (44), மணிமாறன் (35) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






